கிருபையின் செய்தி Jeffersonville, Indiana, USA 61-0827 1கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. காலை வணக்கம், நண்பர்களே. கர்த்தருடைய ஆராதனையில் மீண்டுமாக இன்று காலை இங்குள்ளது சிலாக்கியமென்பது உறுதி. இந்த சிறு சபை கட்டிடத்தில் எல்லோருக்கும் போதுமான இடம் இல்லாதது குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இது அதிகம் பேரைக் கொள்வதில்லை. ஆனாலும் நீங்கள் இங்கு வந்து, இந்த பெரிய தியாகத்தைச் செய்ய முன்வந்து, எங்களுக்காக பொறுமையோடு காத்திருப்பதைக் குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், எங்களுக்குத் தெரிந்தமட்டில் நாங்கள் தேவனுடைய வார்த்தையை உங்களிடம் கொண்டு வர எங்களால் இயன்ற அனைத்தும் செய்வோம். இப்பொழுது நான். இப்பொழுது உள்ளே வந்து கொண்டிருக்கும் அந்த வாலிபப் பெண் அவளுடைய குழந்தையை இன்று காலை பிரதிஷ்டை செய்ய விரும்புகிறாள். அவள் நேரம் தாமதித்து வந்ததை உணர்ந்து, அவள் காத்திருப்பாளெனக் கூறினாள். அவளை நான் முன்பு கண்டதில்லை. தேவன் அவளை ஆசீர்வதித்து, அவருடைய மிகுந்த ஐசுவரியமான ஆசீர்வாதங்களை அவள் இருதயத்தில் அருளவேண்டுமென்று ஜெபிக்கிறேன் - காத்திருக்க அவளுக்கிருக்கும் பொறுமைக்காக. 2இனி வரப்போகும் காலம் குளிருள்ளதாக இருக்கும். எனவே நாம் சபையில் நெருக்கிக் கொண்டிருக்கும்போது, அவ்வளவு உஷ்ணமாயிராது. தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாரென்று நாங்கள் நம்புகிறோம் நான் பேசுவதற்கு முன்பு உங்களிடம் ஒரு சில காரியங்களைக் கூற விரும்புகிறேன். கர்த்தருக்கு சித்தமானால் இன்று காலை நான், “சுழல் காற்றிலுள்ள காற்றுகள்” என்னும் பொருளின் பேரில் பேச வேண்டுமென்று எத்தனித்திருந்தேன். ஆனால் தேவன் அதை எனக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார். கூட்டத்துக்கு வருவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பு வரைக்கும், நான் என்ன பேசப் போகின்றேன் என்பதை அறியாதிருந்தேன். அந்த பொருளின் பேரில் பேசலாமென்று இரண்டாம் முறை நான் முயற்சித்தபோது, தேவனிடத்திலிருந்து எனக்கு பதில் கிடைக்கவில்லை. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. இங்குள்ள போதகர்கள் எல்லோரும் அறிந்துள்ளபடி, நாம் பேசவேண்டியதைக் குறித்து கர்த்தரிடத்தில் காத்திருக்க வேண்டும். அப்படி செய்ய நான் விரும்புகிறேன் 3நேற்று மாலை, ஆர்கன்ஸாஸிலிருந்து தொலைபேசியில் என்னுடன் பேசினார்கள். அங்குள்ள சிலர், நாம் ஏழு முத்திரைகளைப் பிரசங்கிக்க ஒரு கூட்டம் நடத்தப் போவதாக கேள்விப்பட்டு, அடுத்த வாரம் இங்கு வந்து தங்க வேண்டுமென்று விரும்புகின்றனர். இப்பொழுது தான் நான் ஏழு சபை காலங்களை முடித்தேன் - அந்நியருக்கு. அவளுடைய கணவர் லூயிவில்லில் வேலை தேடுவதற்காக அடுத்த திங்கட்கிழமை வரப்போகிறாராம். ஏழு முத்திரைகளைக் குறித்த பிரசங்கத்தை அவர்கள் அருகிலிருந்து கேட்க அது உதவியாயிருக்கும் என்று அந்த பெண் கூறினாள். நான், “பெண்ணே, அதற்கு இன்னும் சுமார் மூன்று மாதங்கள் செல்லும். கூட்டத்தை விளம்பரப்படுத்த, அதற்குகந்த இடம் இங்கில்லை. கூட்டத்துக்கு வருபவர்களைக் கவனிக்க இங்கு நகரத்தில் எதுவுமில்லை, ஜனங்கள் உட்காருவதற்குப் போதிய இடம் இல்லை” என்றேன். 4தேவனுக்கு சித்தமானால் எப்பொழுதாவது மூன்று மாதம் 'காம்ப்' கூட்டம் ஒன்றை வேறெங்காவது நடத்தி, அந்த கூட்டத்தில் ஏழு முத்திரைகளைக் குறித்து பேசத் தொடங்க எனக்கு விருப்பமுண்டு. அப்பொழுது ஜனங்கள் அங்கேயே தங்கி அதை முழுவதும் கேட்கலாம். இங்கு வேதாகமத்தில், அது வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரம் தொடங்கி, 19-ம் அதிகாரம் வரை உள்ளது. இந்த பாகத்தில் ஏழு முத்திரைகள், ஏழு வாதைகள், மூன்று ஐயோக்கள் (woes), சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீ, இலட்சத்து நாற்பது நாலாயிரம் பேர் ஆகிய அணைத்துமே அடங்கியுள்ளன. ஓ, ஏழாம் முத்திரை திறக்கப்படுவதற்கு முன்பு, ஏழாம் வாதை விழுவதற்கு முன்பு, ஏழாம் எக்காளம் தொனிக்கும் முன்பு எவ்வளவோ காரியங்களை ஒன்றாக இணைக்க வேண்டியதாயுள்ளது. அவையனைத்தும் ஒன்றாக இணைகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு நாளின் பெரிய பாடமாக அமையும். 5இப்பொழுது ஜெபத்துக்காக சற்று நேரம் தலை வணங்குவோம். நாம் ஜெபிக்கும் முன்பு, இங்குள்ள யாராகிலும் ஜெபத்தில் நினைவுக் கூறப்பட விரும்பினால் உங்கள் கைகளையுயர்த்தி தெரியப்படுத்துங்கள். உங்கள் தேவைகளை உங்கள் இருதயத்தில் வைத்து, தேவனை நினைத்துக் கொள்ளுங்கள். அதை அவர் உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று நான் ஜெபிப்பேன். 6கிருபை மிகுந்த சர்வல்லமையுள்ள தேவனே, ஜெபத்துக்கு பதிலளிக்கும் தேவனே, தம் பிள்ளைகளின் தேவைகள் என்னவென்று அறியும் பிதாவாக நீர் இருக்கிறீர். நாங்கள் பிறப்பதற்கு முன்னமே எங்களை நீர் அறிந்திருக்கிறீர். எங்கள் காலடிகளின் எண்ணிக்கை உமக்குத் தெரியும். எங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, எங்கள் வார்த்தைகள் அனைத்தும் உமது தராசில் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்கு முன்பாக இருக்கும் இந்த பயபக்தியான கடமையைக் குறித்து நாங்கள் கவனமுள்ளவர்களாய் இருப்போமாக. இந்த சிறு அசெம்பிளியில், இன்று காலை அநேக கரங்கள் உயர்த்தப்பட்டன. ஒருக்கால் அது வியாதிப்பட்ட சரீரங்கள் சுகம் பெற ஜெபிக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம் அல்லது இழந்து போன நிலையிலுள்ள அன்பார்ந்தவர் ஒருவருக்காக இருக்கலாம். அவர்களுடைய இருதயங்களையும் அவைகளில் அடங்கியுள்ள சிந்தனைகளையும் நீர் அறிந்திருக்கிறீர். ஏனெனில் நீர் இயேசு என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் எங்கள் கர்த்தராக இவ்வவுலகில் இருந்தபோது, இருதயத்தின் இரகசியத்தை நீர் அறிந்து கொண்டீர். ஜனங்கள் தங்கள் மனதில் யோசித்துக் கொண்டிருந்த அனைத்தையும் உம்மால் கூறமுடிந்தது. “உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன?” இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தார். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று நாங்கள் வேதத்தில் வாசிக்கிறோம். மேலும், “இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் மத்தியில் நான் இருக்கிறேன்” என்றும் எழுதியிருக்கிறது. எனவே இன்று காலை நீர் பரிசுத்த ஆவியின் வடிவில் இங்கு இருந்து கொண்டு, ஜனங்களின் இருதயத்திலுள்ள வாஞ்சை ஒவ்வொன்றையும் அறிந்தவராய் இருக்கிறீர். பிதாவாகிய தேவனே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளி, அது முடிந்துவிட்டது. உன் வேண்டுகோளுக்கு உத்தரவு அருளப்பட்டுவிட்டது. நீ கேட்ட அனைத்தும் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் உறுதியளிக்கிறேன்“ என்று அவர்களிடம் பேச வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். 7தேவனே, கையுயர்த்தின இரட்சிக்கப்படாதவர்களை நாங்கள் விசேஷமாக நினைவு கூருகிறோம். இந்த நேரத்திலேயே அவர்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்வார்களாக. கர்த்தாவே, இன்று இக்கூட்டம் முடிவதற்கு முன்பு, உமது பிரசன்னத்தை ஜனங்களின் அருகில் கொணரத்தக்க ஏதாகிலும் ஒன்று நிகழ்ந்து, கலிலேயாவில் நடந்த அதே இயேசு, அவருடைய ஜனங்களின் மத்தியில் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாய், அன்று எம்மாவூர் சீஷர் பெற்ற அதே நிச்சயத்துடன் இவர்கள் இங்கிருந்து செல்வார்களாக. எம்மா ஊருக்குப் போனவர்கள் நாள் முழுவதும் அவருடன் நடந்து சென்றனர், அவர்கள் அவருடன் பேசிக் கொண்டு சென்றனர், அவரும் அவர்களுடன் பேசிக் கொண்டு சென்றார். இருப்பினும் அது அவர்தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. ஓ தேவனே, அநேக சமயங்களில் நாங்களும் அவ்வாறிருக்கிறோம். சூரிய அஸ்தமனத்தின் மூலமாகவும், பறவைகள் பாடுவதின் மூலமாகவும், காற்றினால் இலைகள் உண்டாக்கும், ஒசையினாலும், பூக்கள் பூப்பதன் மூலமாகவும், சபையில் பாடப்படும் பாடல்களின் மூலமாகவும் நீர் எங்களுடன் பேசுகின்றீர். ஆயினும் அது நீர் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ளத் தவறுகிறோம். ஆஸ்பத்திரியிலுள்ள வியாதிப்பட்டோர் அறைகளிலும் மற்ற இடங்களிலும் நீர் எங்களுடன் பேசுகின்றீர். ஆனால் அது நீர் என்பதை நாங்கள் அடையாளம் கண்டு கொள்வதில்லை. 8கர்த்தாவே, இன்று காலை நாங்கள் வீடுகளுக்குத் திரும்பும் போது, அவர்கள் உம்மை அடையாளம் கண்டு கொண்டது போல் நாங்களும் கண்டு கொள்ள, அவர்களுக்கு முன்னால் நீர் ஒன்றை செய்தது போல் எங்கள் மத்தியிலும் இன்று செய்வீராக. நீர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னால் செய்த ஒன்றை அவர்கள் முன்னிலயில் செய்தபோது, அது உயிர்த்தெழுந்த கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் களிகூர்ந்து. தேவனை துதித்துக் கொண்டே தங்கள் குழுக்களிடம் திரும்பிச் சென்றனர், ஏனெனில் அவர் உயிரோடிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள், “வழியிலே அவர் நம்முடன் பேசினபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்றனர். கர்த்தாவே, நீர் அங்கு பிரத்தியட்சமாகி, நீர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு செய்த ஒன்றை மறுபடியும் செய்து காண்பித்து, உமது உயிர்த்தெழுதலை நிரூபித்தது, நீர் அதே இயேசு என்பதை அறியச் செய்து, உம்முடன் அவர்கள் நிகழ்த்தின உரையாடல் அனைத்தையும் அவர்கள் நினைவு கூரக் காரணமாயிருந்தது. கர்த்தாவே, வாரம் முழுவதும் எங்களுடன் பேசும். எங்கள் மத்தியில் இப்பொழுது நீர் பிரசன்னமாகி, தேவையுள்ள ஒவ்வொரு இருதயத்துக்கும் உம்மை வெளிப்படுத்திக் காண்பியும். இதை இயேசுவின் நாமத்திலும் அவருக்காகவும் கேட்கிறோம். ஆமென். 9(ஒரு சகோதரி அந்நிய பாஷை பேசுகிறாள். ஒரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார் - ஆசி) இப்பொழுது சபையோர் ஜெபிப்பார்கள். (சகோ பிரன்ஹாம் சபையோருடன் சேர்ந்து ஜெபிக்கிறார் - ஆசி) பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குட் பிரவேசிக்கப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் ராஜ்யமும் வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென். 10“...என் பேனா சிற்பியின் பணிக்கருவியாகவும், என் காகிதம் சிக்கிமுக்கிக் கல்லாகவும் (flint) இருக்குமானால், நான் கூறும் இந்த வார்த்தைகள் அதில் பொறிக்கப்பட்டு எல்லா தேசத்து ஜங்களிடமும் அனுப்பப்படவேண்டும். ஜனங்களிடம் ஈடுபட தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் வினோதமான வழிகளைக் கடைபிடிக்கிறார். அநேக சமயங்களில் அவர் அற்புதங்கள், வரங்கள், அழைப்புகள் மூலமாக தொடர்பு கொள்கிறார். வரங்களும் அழைப்புகளும் மந்திரும்புதல் இல்லாமலே அளிக்கப்படுகின்றது. தேவன் அவைகளை தமது ஜங்களுக்கு தமது கிருபையினால் அளிக்கிறார். 11நான் இப்பொழுது வீட்டில் உள்ளேன் - ஒரு வகையான சிறு விடுமுறை. வழக்கமாக நான் இந்த சமயத்தை வீட்டில் கழிப்பதுண்டு. ஏனெனில் ஆண்டின் இந்த காலத்தில், நான் அணில் வேட்டைக்கு சென்று ஒய்வு எடுத்துக்கொள்ள விரும்புவதுண்டு, இந்த வாரம் என் நண்பர்களுடன் நான் அனில் வேட்டைக்காக எனக்கு விருப்பமான இடமாகிய கென்டக்கிக்கு சென்றிருந்தேன். எனக்கு என்னமோ உற்சாகமின்மை ஏற்பட்டது - அணில்கள் கிடைக்காத காரணத்தால் அல்ல - என்னமோ எனக்கு உற்சாகமின்மை தோன்றினது. நான் வீடு திரும்ப வேண்டுமென்று ஏதோ ஒன்று என்னிடம் கூறினது. திரும்பி வரும்போது, நான் காரில் உறங்கினேன். 12சென்ற ஆண்டு நான் இந்தியானாவிலுள்ள ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, தேவனாகிய கர்த்தர் இறங்கி வந்து, என் இரண்டாம் ஊழியம் வெகு விரைவில் தொடங்கும் என்று என்னிடம் கூறினாரென்று உங்களெல்லாருக்கும் தெரியும். அது அச்சடிக்கப்பட்டு சாட்சியிலும், ஒலிநாடாக்களிலும் உள்ளது. அப்பொழுது மூன்று அணில்கள் பேசி சிருஷ்டிக்கப்பட்டன. உங்கள் அனைவருக்கும் அந்த வரலாறு தெரியும் என்பதை நான் உறுதியாய் அறிந்திருக்கிறேன். எப்படியோ நான் பாதையில் மேலே சென்று கொண்டிருந்தபோது…. வேட்டைக்காக மற்ற பையன்களை அனுப்பிவிட்ட பிறகு, இந்த இடத்துக்கு மறுபடியும் செல்ல வேண்டுமெனும் வினோதமான உணர்ச்சி எனக்குண்டானது. அது காலை வெளிச்சம் தோன்றுவதற்கு முன்பு. அப்பொழுது மழை பெய்து கொண்டிருந்தது. அவர்கள் வேட்டையாடுவார்களோ இல்லயோ என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அந்த திறந்த வெளிக்குச் செல்ல வேண்டுமென்று தீர்மானித்தேன். வேட்டை என்றால், “தனியே சென்று ஜெபம் செய்தல்” என்று அர்த்தம். நான் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி, பாதையைக் கடந்து அந்த புதரை அடைந்தேன். அது காலை வெளிச்சம் தோன்றுவதற்கு சற்று முன்பு. ஒரு விதமான சாம்பல் நிறம், சூரியன் உதயமாக வேண்டிய நேரம். 13நான் நின்று வழக்கம் போல் சிறு ஜெபம் செய்து, “எனக்குத் தேவையானதை எனக்குத் தந்தருளும்” என்று பிதாவிடம் கூறினேன். எதையுமே வீணாக்குவதில் அல்லது அழிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இலக்கை நோக்கி சுடும் பயிற்சிக்காக நான் ஒரு பறவையையோ அல்லது வேறெதையோ என் வாழ்க்கையில் சுட்டது கிடையாது. நான் வேட்டையாடுவதை புசிப்பேன், அல்லது அதை புசிக்கும் வேறு யாருக்காகிலும் கொடுப்பேன். எதையும் வீணாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை அப்படிப்பட்ட காரியங்களை நான் செய்வதில்லை, ஏனெனில் அது முறையல்ல. புல்லுள்ள இடத்திற்கு பக்கத்திலுள்ள எனக்கு நன்றாக தெரிந்த பாதையின் வழியாக நடந்து சென்று காட்டிலுள்ள 'L' வடிவுள்ள ஒரு இடத்தை நான் அடைந்த போது, விசித்திரமான ஒன்று நிகழ்ந்தது. அப்படிப்பட்ட ஒரு அனுபவம் எனக்கு அதற்கு முன்பு இருந்ததில்லை. நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு இடது பாகத்திலிருந்த மலையின் உச்சியை நான் நோக்கினபோது, மூன்று வானவில்கள் மலையின் உச்சியிலிருந்து புறப்பட்டு வருவது போல் காணப்பட்டது. அவை ஏறக்குறைய முப்பது அடி உயரத்தில் இருந்தன. முதலில் நான் வெளிச்சத்தை மாத்திரம் கண்டு, சூரியன் உதயமாவதால் உண்டான வெளிச்சமாயிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இரண்டாம் முறை யோசித்துப் பார்த்தபோது, அந்த வெளிச்சம் சூரியனை நோக்கி இருக்கவில்லை, அது தெற்கு திசையில் இருந்தது. வேருறொரு காரியம், அது மிருதுவாகவும். மேகங்கள் சூழ்ந்ததாகவும், எல்லாவிடங்களிலும் மழை பெய்து கொண்டுமிருந்தது. அது ஆகஸ்டு இருபத்தைந்தாம் தேதி, சென்ற வெள்ளி காலை நிகழ்ந்தது. அன்று எப்படி மழை பெய்து கொண்டிருந்ததென்று நீங்கள் அறிவீர்கள் எல்லாவிடங்களிலும் மிருதுவான மேகங்கள் சூழ்ந்திருந்தன 14நான் மறுபடியும் பார்த்த போது, இந்த மூன்று வானவில்களும் உயரமாக வளர்ந்து கொண்டே சென்றன. நான் என் தொப்பியைக் கழற்றி, என் துப்பாக்கியை கீழே வைத்து விட்டு என் கைகளை உயர்த்தினைவாறு அதை நோக்கி நடந்து சென்றேன் “இந்த அருகாமை போதும்” என்று ஏதோ ஒன்று என்னிடம் கூறுவது போல் தோன்றினது. நான் உட்கார்ந்து, நான் போட்டுக் கொண்டிருந்த காலணிகளைக் கழற்றி, அதற்கு இன்னும் அருகில் செல்ல முடியுமா என்று பார்க்கலாம் என்று நினைத்தேன். அதற்கு சில கெஜங்கள் தூரத்துக்கு நான் வந்தபோது, அதன் வர்ணத்தை என்னால் பார்க்கமுடிந்தது. அது மூடுபனியைப் போல் சுற்றிலும் நகர்ந்து கொண்டிருந்தது. நான் சிறிது நேரம் அமைதியாக நின்றேன். அது மலையின் உச்சியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நான் கவனித்துக் கொண்டிருந்தபோது, இம்மூன்று வானவில்களும் (ஒன்று வலது புறம், ஒன்று இடது புறம், ஒன்று நடுவில்) ஒன்றாக இணைந்து ஒரே வானவில்லாக ஆயின. அது என்னவாயிருப்பினும், அது உயிருள்ளது போல் நகர்ந்து கொண்டிருந்தது. சூரியன் உதயமாக வேண்டிய அந்த நேரத்தில், வானம் சாம்பல் நிறமாயிருந்தபோது, நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். நான் திரும்பவும் அதை உற்று நோக்கினேன். நான், “ஓ தேவனே, உமது தாசன் எதை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறீர்?” என்று கூக்குரலிட்டேன். அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் அங்கு வந்து “பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டி இயேசு கிறிஸ்து. அவர் ஆவியின் வடிவிலிருந்து மனிதனாக ஆவதற்கென்று தமது முகமூடியை மாற்றிக்கொண்டார்” என்றார். அது அவரைக் குறித்த என் செய்தியை ஊர்ஜிதப்படுத்தினது இந்த முப்பத்து ஒன்று ஆண்டுகளும் வீணாகவில்லை என்னும் உறுதியான நம்பிக்கையை அது எனக்களித்தது. 15நான் அதை அணுக முயன்ற போது, அது அகன்று சென்று கிண்ணத்தைப் போன்று குழிந்து கீழே இறங்கி மறைந்துவிட்டது. நான் அருகில் நடந்து சென்றேன். இன்னும் அருகில் செல்ல நான் பயந்தேன். ஏனெனில் நான் அங்கு அடைவதற்கு முன்பு அவர் என்ன நிறுத்திவிட்டார். நான் திரும்பி அந்த வெளிச்சத்தைக் கண்டபோது, சென்ற ஆண்டு அந்த அணில்கள் தோன்றினை போது நான் உட்கார்ந்து கொண்டிருந்த மரத்துக்கு நேர்க் கோட்டில் அது பிரகாசித்துக் கொண்டிருந்தது. முப்பத்தைந்து அல்லது நாற்பது நிமிடங்கள் கழித்து நான் காட்டின் வழியாக கீழே சென்று, மலைகளுக்கிடையேயுள்ள குறுகிய சமவெளியில் நடந்து, முடிவில் அந்த மரத்தை அடைந்தேன். அதன் கவைக் கொம்புகள் நான்கு திக்குகளிலும் படர்ந்துள்ளன. (கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு). அந்த கவையின் மேலேறி நான் உட்கார்ந்து கொண்டேன். அப்பொழுது அவர், “அந்த மலையைப் பார்த்து: பெயர்ந்து போ என்று சொன்னால்” என்னும் வசனத்தைக் கூறினார். அங்கு நான் சற்று நேரம் நின்று கொண்டிருந்தபோது, அந்த வானவில்லின் தோற்றம் என் மனதை விட்டு அகன்றது. அதைக் குறித்து நான் நினைக்கவில்ல. அனில் வேட்டைக்கு இது மிகவும் மோசமான ஆண்டாக உள்ளது. எல்லாமே தாமதம், அணில்கள் இல்ல. 16“இதே இடத்தில் தான் சென்ற ஆண்டு தேவன் பேசி சிருஷ்டிக்கும்படி செய்து, அந்த அனில்களை எனக்களித்தார்” எனறு மனதில் எண்ணினேன். நான் என் தொப்பியை மறுபடியும் கழற்றினேன். நான், “தேவனாகிய கர்த்தாவே, நீர் இன்னும் அதே இயேசுவாக இருக்கிறீர், நீர் இன்னும் தேவனுயிருக்கிறீர்” என்றேன். ஏதோ ஒன்று, “இம்முறை உனக்கு எத்தனை வேண்டும்?” என்றது. நான், “சென்ற முறை நான் செய்தவாறே, அதே அளவு” என்று கூறிவிட்டு, “இந்த அளவை இன்று பத்து மணிக்கு முன்பு நான் பெறவேண்டும்” என்றேன். இது விசித்திரமாகத் தோன்றலாம். நான் கொசுக்கள் நிறைந்த ஒரிடத்தில் இருந்தேன் - ஒருவகை சேறுள்ள இடம். ஒரு பெரிய கொசு பறந்து வந்து என் கண் அருகே கடித்துவிட்டது. நான், “இன்று ஒரு கொசுவும் என்னைத் தொல்லப்படுத்தக் கூடாது” என்றேன். என்னிடம் கொசு விரட்டி தைலம் எதுவுமில்ல. அதை நான் அறியும் முன்னர், நான், “இன்னும் முப்பது நிமிடங்களுக்குள் சூரியன் பிரகாசிக்கக்கடவது” என்றேன். 17அதை நான் சொல்லி முடிப்பதற்குள் எனக்குப் பின்னால், சென்ற ஆண்டு தோன்றிது போன்ற அதேவிதமான ஒரு சிறய சிகப்பு அணில், எழுபது கெஜம் தூரத்தில் ஒரு கிளையிலிருந்து குதித்து சத்தமிடத் தொடங்கினது. நான் திரும்பிப் பார்த்தேன். அந்த நீண்ட தூரத்தில் சக்தி வாய்ந்த தொலை நோக்கியின் வழியாகவும் கூட அதன் கண்ணை என்னால் காண முடியவில்லை. நான் சும்மா சுட்டேன், அவ்வளவு தான். நான் எந்த குறியும் வைக்கவில்லை. சென்ற முறை நடந்தது போன்றே, தோட்டா சரியாக அதன் கண்ணைத் துளத்தது. நான் காட்டின் வழியாக நடந்து சென்றேன். சரியாக பத்து மணிக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு, நான் என் மூன்றாம் அணிலைச் சுட்டேன் - சென்ற ஆண்டு நடந்த அதேவிதமாக; பத்து மணிக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு. தேவன் என் நியாயாதிபதி. அந்த இடத்தில் இருந்த கொசுக்களை தராசில் நிறுத்தினால். அவைகளின் எடை டன்கள் கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவைகளில் ஒன்று கூட நாள் முழுவதும் என்னை தொல்லைப்படுத்தவில்லை. அவைகளில் ஒன்றையும் கூட நான் பார்க்கவுமில்லை, அதன் ரீங்கார சத்தத்தைக் கேட்கவுமில்லை. சத்தம் எங்காகிலும் கேட்கின்றதா என்று உற்று கேட்டேன், ஒரு சத்தம் கேட்டது. “எங்கோ ஒரு கொசு உள்ளது” என்று நினைத்தேன். ஆனால் நான் கவனமாய் கேட்டபோது, அது தூரத்திலுள்ள நெடுஞ்சாலயில் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் வாகனத்தின் சத்தம். சரியாக முப்பது நிமிடங்களில், சூரியன் நன்றாக பிரகாசித்தது. 18நான் அந்த இடத்திற்கு திரும்பி வந்தேன். நான் “அளவு” என்று கூறினபோது, இந்தியானாவில் சுடுவதற்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவாகிய ஐந்து அணில்கள் என்னும் அர்த்தத்தில் நான் கூறினதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு ஞாபகம் வருகிறது, என் சாப்பாட்டுக்கு எவ்வளவு அணில்கள் தேவைப்படும் என்று அவர் என்னிடம் கேட்டபோது, நான் “மூன்று” என்று கூறினேன். எனக்கு மூன்று அணில்கள் கிடைத்தன. நேற்று நான் அதே இடத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, ஏதோ ஒன்று என்னிடம், “போகாதே, சாலையைக் கடக்காதே” என்றது. சரியாக பத்து மணிக்கு, என் கடிகாரத்தில் சரியாக பத்துமணி ஆனபோது, நான் இந்தியானாவின் நிர்ணய அளவாகிய ஐந்தாம் அணிலைச் சுட்டேன். அங்கு மூன்று வானவில்கள் இருந்தன, மூன்று காரியங்கள் கூறப்பட்டன. மூன்று அணில்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அங்கு மூன்று காரியங்கள் நிகழ்ந்தன. பத்து மணிக்குள் மூன்று அணில்கள், கொசுக்கள் எதுவுமில்ல, முப்பது நிமிடங்களுக்குள் சூரியன் பிரகாசித்தது. இவைகளுக்கு சாட்சியாக மூன்று பேர் இருந்தனர்; சகோ. பாங்க்ஸ் உட், என் மகன் பில்லி பால், அவனுடைய மகன் டேவிட். 19அந்த மூன்று வானவில்களை நான் கண்டபோது, அவை கர்த்தருடைய தூதன் தோன்றின ஒளி வட்டத்தின் விட்டத்துக்கு இணையாக அகலத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அவை மூன்றும் ஒன்றாக இணைந்தன. ஒ, அந்த தேவனை அறிந்துகொள்ள அது எனக்கு எவ்வளவு உதவியாயிருந்தது! ஜனங்கள் நினைக்கிறபடி இயேசு ஒரு மனிதன் மாத்திரமல்ல. இயேசு ஒரு தீர்க்கத்தரிசியென்னும் நவீன கருத்தொன்று நிலவி வருகின்றது, அவர் மாம்சத்தில் தோன்றி நமது மத்தியில் வாசம் செய்த பழைய ஏற்பாட்டின் யேகோவா. அது நிச்சயம் என்னை ஆறுதல்படுத்துகின்றது. அந்த பொருளின் பேரில் நான் நினைத்துப் பார்க்கும்போது, தேவன் எத்தனையோ... பேர்களை தேடி வந்தார்.... 20தாங்களை “ஒருத்துவம்” அல்லது “இயேசு மாத்திரம்” என்று அழைத்துக் கொள்ளும் ஒரு சாரார் உள்ளனர். அவர்களுடைய தத்துவத்துடன் நான் இணங்குவதில்லை. மூன்று வெவ்வேறு கடவுள்கள் உள்ளதாகக் கூறும் திரித்துவக்காரரின் கொள்கையுடனும் நான் இணங்குவதில்லை. அது திரித்துவக் கொள்கையின் எல்லைக் கருத்து. ஆனால் நான், பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்னும் மூன்றும் ஒன்றே என்றும், அவை ஒரே தேவனின் மூன்று உத்தியோகங்கள் என்றும் விகவாசிக்கிறேன். அவர் பிதாத்துவத்தில் அக்கினி ஸ்தம்பத்தில் வாசம் செய்தார், குமாரத்துவத்தில் இயேசு கிறிஸ்துவில் வாசம் செய்தார். இப்பொழுது பரிசுத்த ஆவியில் தமது சபையில் வாசம் செய்கிறார். மாம்சத்தில் வெளிப்பட்டு நமது மத்தியில் வாசம் செய்த அதே கர்த்தராகிய இயேசு இன்று நமது மத்தியில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கிறார். எல்லா அனுபவங்களைக் காட்டிலும் நான் முதலில் திரும்பிப் பார்த்தபோது, சூரியன் மேகத்தின் வழியாய் எட்டிப் பார்க்கிறது என்று நினைத்தேன். ஆனல் அது சூரியன் உதயமாவதற்கு முன்பு: நான் மறுபடியும் திரும்பிப் பார்த்தபோது அது வெளிச்சமல்ல, வானவில்கள். அதை நான் பார்த்தபோது, என் உடல் முழுவதும் மரத்துப் போனது. யாரோ ஒருவர், “உங்களுக்குச் சத்தமிட வேண்டுமெனும் உணர்ச்சி தோன்றவில்லையா?” என்று கேட்டார். இல்லை, எனக்கு சத்தமிட வேண்டும் போல் தோன்றவில்லை. இத்தகைய அனுபவங்கள் உங்களுக்கு சத்தமிடச் செய்யும் உணர்ச்சியைத் தருவதில்லை. அது உங்களை நங்கூரமிடச் செய்து உங்களுக்கு திருப்திகொண்ட உணர்வை அளிக்கின்றது. 21இவையாவும் சத்தியமானவை. நாம் கூறினவைகளை சில ஜனங்கள் கேட்டு, “ஒ, அப்படிப்பட்ட ஒன்றை என்னால் நம்ப முடியாது” என்று கூறுகின்றனர் என்று எனக்குத் தெரியும். அதைக் குறித்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் உண்மையென்று நான் அறிந்துள்ளவைகளுக்கு நான் உறுதியளிக்க முடியும். இது உண்மையென்று வேதாகமத்தை எழுதின சர்வ வல்லமையுள்ள தேவன் அறிவார். நான் அவருடைய ஊழியக்காரன். நாம் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு சற்று முன்புள்ள நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்தித்து பாருங்கள். “வானத்திலும் பூமியிலும் பெரிய அடையாளங்கள் காணப்படும் - பறக்கும் தட்டுகள், ஏவுகணைகள்; கலக்கமடையும் நேரம், ராஜ்யங்களுக்கிடையே துன்பம், பூமியின்மேல் பயங்கரமான தோற்றங்கள் உண்டாகும்” என்று இயேசு கூறினார் இவைகளைக் காணும் அந்த நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 22இன்று காலை பேசுவதற்காக நான் தெரிந்து கொண்ட செய்திக்கு அடிப்படையாக, என்னுடன் நீங்கள் சகரியா புத்தகத்துக்கு வேதாகமத்தை திருப்ப விரும்புகிறேன். அது என்னுடைய…. சகரியா 4-ம் அதிகாரம் இவைகளை உங்களிடம் கூறவேண்டுமென்று விரும்பினேன். அநேக முறை சம்பவங்கள் நிகழ்கின்றன, அவைகளை நான் உங்களிடம் கூறுவதில்லை. ஆனால் இது மிகவும் முக்கியம் வாய்ந்ததால், இதை சபைக்கு கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை இது கூறப்பட்டே ஆக வேண்டும் தேவனுக்கு முன்பாக நான் நிற்கிறேன், இது சத்தியம். தேவன் இருக்கிறார் என்றும், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன், இம்மானுவேல் என்றும் இன்று அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் ஜனங்களின் மத்தியில் வாசம் செய்கிறார் என்றும் நானறிவேன், அடையாளங்களும் அற்புதங்களும் காணப்பட்டு, கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்றும் நானறிவேன். 23இப்பொழுது தான் நாம் ஏழு சபை காலங்களை பிரசங்கித்து முடித்தோம். நாம் கடைசி சபை காலமாகிய லவோதிக்கேயா சபை காலத்தில் இருக்கிறோமென்றும், அந்த சபை சிரத்தையற்று குளிரடைந்து ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளுமென்றும் நாம் கற்றறிந்தோம். ஸ்தாபனங்கள் இதை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு விழுங்கிவிடும். ஆனால் மீதியான கூட்டம் ஒன்றிருக்கும் என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் எல்லாவிடங்களிலும் சிதறியுள்ள ஒரு சபையிருக்கும். தேவன் அதை ஒன்று கூட்டி, மகிமைக்கு எடுத்துக் கொள்வார் பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் எங்கோ இருந்து கொண்டு, கர்த்தருக்காக காத்திருக்கிறது 24அன்றொரு நாள் இதே பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஏதோ ஒன்று என் மனதில் எழுந்தது. அதைவிட்டு என்னால் அகன்று செல்லவே முடியவில்லை. நாம் வாழும் இந்த நேரத்தை பார்க்கும்போது என் மனதை விட்டு அதை அகலச்செய்ய, நான் எங்காவது சென்று வேறெதையாவது செய்ய விரும்புகிறேன். எனக்கு அன்பார்ந்த அநேகர் இரட்சிக்கப்படாமல் உள்ளனர், அதை அறிந்தவனாய், அவர்கள் இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும் நான் செய்யக் கூடியது என்ன? நான் சுவிசேஷத்தை பிரசங்கித்துவிட்டேன். உலகம் உண்டான முதற்கு, கர்த்தராகிய இயேசுவின் காலத்திற்கு பிறகு, தேவன் இப்படிப்பட்ட அடையாளங்களையும் அற்புதங்களையும் இக்காலத்தில் செய்தது போல் எப்பொழுதுமே செய்ததில்லை. கால வரலாற்றிலேயே அவர் இத்தகைய காரியங்களைச் செய்ததில்லை, அது உலகம் முழுவதும் சென்றது. இருப்பினும் உலகம் தொடர்ச்சியாக மோசமாகிக் கொண்டே வருகின்றது. ஆனால், அவர்கள் மோசமடைந்துகொண்டே வருவார்கள் என்று கூறப்பட்டுள்ள லவோதிக்கேயா சபையின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் நினைவுகூர வேண்டியதாயுள்ளது. 25இன்று காலை நான் தெரிந்து கொண்டுள்ள செய்தி மக்களால் அதிகமாக தாக்கப்படக் கூடியது. ஆனால் என்னை அதிகமாக கவர்ந்தது, கிருபையைக் குறித்து பிரசங்கித்தலாகும். நான் சகரியா 4-ம் அதிகாரத்தில் ஒரு பாகத்தை வாசித்து, கிருபையைக் குறித்து பேச விரும்புகிறேன். என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவது போல் என்னை எழுப்பி. நீ காண்கிறது என்னவென்று கேட்டார்: அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்: அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின் மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப் போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. அதின் அருகில் கிண்ணத்திற்கு வலது புறமாக ஒன்றும், அதற்கு இடது புறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்: ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். அப்பொழுது அவர், செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பார்த்தீர்களா? செய்தியானது பராக்கிரமத்தினாலோ பலத்தினாலோ வராது, அது தேவனுடைய ஆவியினாலே வரும். 7-ம் வசனம் கடைசி வசனம்…. பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம் செருபாபேலுக்கு முன்பாக நீ சம பூமியாவாய்: தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். (கிருபை, அதற்குக் கிருபையுண்டவதாக) 26வேதத்திலிருந்து வாசிக்கப்பட்ட - இந்த வேதபாகத்தை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம். ஆலயத்தை புதுப்பிக்க ஆயத்தமான நேரத்தின்போது இது நடந்ததென்று நமக்குத் தெரியும். செருபாபேல் ஜனங்களின் மத்தியில் பெரிய ராஜ குமாரனாயிருந்தான். அவன் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டான். இப்பொழுது நீங்கள், அபிஷேக ஆடையை, ஆவிக்குரிய சிந்தையை இன்று காலை உடுத்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றேன். இந்த மகத்தான ராஜகுமாரன் கர்த்தருடைய வீட்டை திரும்பக் கட்டவேண்டுமென்று தீர்மானம் கொண்டான். அவன் தீர்மானம் செய்தபோது, அஸ்திபாரக் கல்லை நாட்டினான், இந்த வேதபாகத்தை நாம் தொடர்ந்து படிப்போமானால், “செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது, அவனே தலக்கல்லைக் கொண்டு வருவான்” என்று தேவன் கூறினதாக நாம் காணலாம். இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அவன் “மூலக்கல்லைக்” கொண்டு வருவான் என்று அவர் கூறவில்லை. அவன் “தலைக்கல்லை” கொண்டு வருவான். 27இயேசுவே மூலைக்கல்லாகவும், தலைக்கல்லாகவும் இருக்கிறார் என்று வேதம் கூறியுள்ளதை நாமறிவோம். நாம் சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்ப்போமானால், ஏழாம் சபையின் தூதன் பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடத்தில் திருப்ப வேண்டியவனாயிருக்கிறான். வேறு விதமாகக் கூறினால். அவன் ஆவியின் வல்லமையினால் சபையைத் திரும்பக் கட்டுவான் “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும்” என்று கர்த்தர் சொல்லுகிறார், “ஸ்தாபனத்தினால் அல்ல நிறுவனங்களினால் அல்ல, என்னுடைய பரிசுத்த ஆவியினாலே” தேவன் கடைசி நாளில் தமது சபையை மீண்டும் கொண்டு வருவான். 28யோசுவாவுடன் (Joshua) கூட இருந்த ராஜகுமாரனாகிய செருபாபேல் இந்த தலைக்கல்லைக் கொண்டு வரவேண்டும். அவன் அஸ்திபாரம் போட்டான். அவன் ஜனங்களை அஸ்திபாரத்துக்கு திரும்பக் கொண்டு சென்றான் - ஒரு முன்னடையாளம் இந்த குத்துவிளக்குகள் போன்றவை யூதர்கள், சபை இருவரையுமே குறிக்கின்றன என்று நாமனைவரும் அறிவோம். அவர்கள் “ஒலிவமரக் கிளைகள்” என்று வேதம் கூறுகின்றது. புறஜாதிகளாகிய நாம் ஒலிவமரத்தின் வேர்களில் ஒட்டு போடப்பட்ட காட்டு மரத்துகிளைகள். இந்த இரண்டு கிளைகளிலுமிருந்தும் குழாய்கள் புறப்பட்டு ஏழு பொன்குத்து விளக்குகளுக்குச் சென்று, ஏழுசபை காலங்களில் வெளிச்சம் உண்டாகுகின்றது 29கவனியுங்கள் நாம் அண்மையில் கற்று கொடுத்த பாடங்களில், நாம் அந்த மகத்தான கூர்நுனிக் கோபுரத்தை எடுத்துக் கொண்டு சற்று படித்தோம். ஏனோக்கு அதை கட்டியிருக்க வேண்டும். கூர்நுனிக் கோபுரத்தின் மேல் தலைக்கல் வைக்கப்படவில்லை. நான் அங்கு சென்று பார்த்திருக்கிறேன். அதைக் கட்டும் திறன் இன்று வரை நம்மிடையே காணப்படவில்லை. கூர்நுனிக் கோபுரத்தைக் கட்ட இயந்திரங்கள் நம்மிடம் கிடையாது. அதை கட்டுவதற்கு நம்மிடம் எந்த சக்தியும் இல்லை (அணு சக்தியைத் தவிர). ஏனெனில் அது மிகவும் பிரம்மாண்டமானது. நிறைய டன்கள் எடையுள்ள கற்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. ஒரு மெல்லிய சவரக் கத்தியும் கூட உள்ளே நுழையக் கூடாதபடிக்கு அவை ஒன்றாக பொருத்தப்பட்டுள்ளன. அவை “சிமெண்டினால்” ஒன்று சேர்க்கப்படவில்லை. அவை வெட்டப்பட்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. 30அப்படித்தான் இயேசு கிறிஸ்துவின் சரீரமும் இருக்கவேண்டும். அது தேவனுடைய மகத்தான ஆயுதமாகிய பரிசுத்த ஆவியினால் வெட்டப்பட்ட, ஒரே நபராக நாம் இசைவாக இணைக்கப்படவேண்டும். எந்த இயந்திரமும் அதை செய்ய முடியாது என்பதை அது காண்பிக்கின்றது. தேவன் மாத்திரமே அதை செய்ய முடியும். ஸ்தாபனங்கள், விடுதிகள் என்பவைகளின் ஆயுதத்திறன், அவர்களுடைய நோக்கங்கள் எவ்வளவு நல்லதாக இருப்பினும், இதை செய்ய முடியாது. அவர்களால் அதை செய்யவே முடியாது. ஏனெனில் அதை செய்ய தேவனால் மாத்திரமே முடியும் - பரிசுத்த ஆவி. 31என் ஜேபியில் ஒரு டாலர் நோட்டு இல்லயென்று நினைக்கிறேன். இருக்கிறது. ஆம், என்னிடம் உள்ளது. என்னிடம் ஒரு டாலர் நோட்டு உள்ளது. மன்னிக்கவும். இந்த டாலர் நோட்டின் பின்பாகத்தில், நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முத்திரையை அதன் இடது பக்கத்தில் காணலாம். அது உங்களை நோக்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு இடது பக்கத்தில் அது உள்ளது, உங்களுக்கு வலது பக்கத்தில். அது ஒரு கழுகு. மேலும் அதில் இராணுவ உடைகள் போன்றவை உள்ளன. ஆனால் இந்த பக்கம், எனது வலது பக்கத்தில் நீங்கள் கூர்நுனிக் கோபுரத்தைக் காண்கிறீர்கள் கூர்நுனிக் கோபுரத்தின் மேல் தலைக்கல்லை நீங்கள் கவனிக்கலாம். கீழே, “மகத்தான முத்திரை” என்று எழுதப்பட்டுள்ளது. நமது டாலர் நோட்டிலும் கூட அதை நாம் காண்கிறோம். எந்த நாத்திகணும் கிறிஸ்தவ மார்க்கத்தை ஒழித்துவிட முடியாது, ஒவ்வொரு கடிதத்திலும் நீங்கள் குறிப்பிடும் தேதி, நமது கர்த்தர் பிறந்த ஆண்டை அறிவிக்கிறது. ஒவ்வொரு நாள் காட்டியும் (Calendar) அவரைக் குறித்து பேசுகிறது. நமது டாலர் நோட்டிலும் கூட தலைக்கல் உள்ளது, அது கிறிஸ்து கூர்நுனிக் கோபுரத்தின் மேல் அவர்கள் ஏன் தலைக்கல்லை வைக்கவில்லை? ஏனெனில் தலைக்கல் வந்தபோது, அவர்கள் அதை புறக்கணித்தனர். 32ஆனால் இப்பொழுது, தீர்க்கதரிசனத்தின்படி, தலைக்கல் வரும். இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். தலைக்கல் வரும் போது, செய்தியை அறிவிக்கப்போகும் ராஜகுமாரன், “கிருபையுண்டாவதாக கிருபையுண்டாவதாக” என்று ஆர்ப்பரிப்பான். ஏனெனில் கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டோம், ஒருவனும் பெருமை பாராட்டாதபடிக்கு, இது கிரியைகளினால் உண்டானதல்ல. கிருபையின் செய்தியானது மனிதரின் கால்களின் கீழ் மிதிக்கப்பட்டு அவமானமடைந்துள்ளது. சிலர் நித்திய பாதுகாப்பு என்பதற்குள் சென்றுவிட்டனர், வேறு சிலர் வேறு காரியங்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால் உண்மையான கிருபையின் செய்தி மாறாததாய் உள்ளது. அதை சாத்தான் சபையிலிருந்து புறம்பாக்கப் பார்க்கிறான். ஆனால் தேவனுடைய கிருபையினாலே நாம் இரட்சிக்கப்பட்டோம் 33எனவே, இயேசு கிறிஸ்து தேவன் என்னும் விஷயத்தில் தேவனாகிய கர்த்தர் அங்கு வந்து அது உண்மையென்பதை உறுதிப்படுத்தினார். அது மாத்திரமல்ல, அது உண்மையென்று அவர் வார்த்தையின் மூலமாகவும் உறுதிப்படுத்துகிறார்: அற்புதங்கள் அடையாளங்களின் மூலமாகவும் அது உண்மையென்று உறுதிப்படுத்துகிறார். அவ்வாறே கிருபை என்பதும் சத்தியம், அப்படியிருக்க ஏன் கிருபை தவறென்றும், “நாம் கிரியைகளினால் இரட்சிக்கப்பட்டோம்” என்றும் கூறி, அதை மற்றவர் குற்றப்படுத்த வேண்டும்? நாம் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம். நாம் இரட்சிக்கப்பட்டோம் என்பதை கிரியைகள் காண்பிக்கின்றன. ஆனால் உங்களை இரட்சிப்பது தேவனுடைய கிருபை மாத்திரமே. கிருபை மாத்திரமே உங்களை இரட்சிக்கிறது. கிருபை என்பது தேவன் உங்களுக்குச் செய்வதாகும். கிரியைகள் என்பது தேவன் உங்களுக்குச் செய்ததை எண்ணி அதற்கு பாராட்டுதலைத் தெரிவிக்க நீங்கள் தேவனுக்குச் செய்யும் ஒன்றாகும். ஆனால் நீங்கள் கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். 34“நான் சபையைச் சேர்ந்து கொண்டு, என் பெயரை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டேன். அவ்வளவு தான் நான் செய்ய வேண்டியது” என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், “நான் கூச்சலிடுகிறேன், அவ்வளவு தான் நான் செய்ய வேண்டியது” என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர், “நான் அந்நிய பாஷை பேசுகின்றேன், அவ்வளவுதான் நான் செய்ய வேண்டியது” என்று நினைக்கின்றனர். மற்றும சிலர், “வியாதியஸ்தர்களை சுகப்படுத்த எனக்கு வல்லமை உள்ளது. அவ்வளவுதான் நான் செய்ய வேண்டியது” என்று எண்ணுகின்றனர். அதுவல்ல தேவனுடைய கிருபையே உங்களை இரட்சிக்கிறது. தேவனுடைய திகைப்பூட்டும் கிருபை. நான் எந்த தகுதிகளையும் நம்பமுடியாது. சிலர், “அங்கு ஒரு பெரிய மனிதன் இருக்கிறார். அவர் இதை செய்வதை, அதை செய்வதை நான் கண்டிருக்கிறேன்” என்கின்றனர் ஆனால் பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் சகல இரகசியங்களையும் அறிந்தாலும், வரத்தை உடையவனாயிருந்தாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், சகல அறிவையும் அறிந்திருந்தாலும், அன்பு - அதாவது கிருபை - எனக்குள் வரும் வரைக்கும் நான் ஒன்றுமில்லை” என்று 1 கொரிந்தியர் 13ம் அதிகாரத்தில் கூறியுள்ளான். தேவன் அதை செய்ய வேண்டும். இவையனைத்தும் நீங்கள் செய்தும், இழந்து போனவர்களாக இருக்கலாம். உங்களை இரட்சிப்பது கிருபையே மானிடவர்க்கத்துக்கு தேவனுடைய கிருபை. 35அவரை சிந்தித்துப் பார்க்கும்போது... வெள்ளியன்று விடியற்காலையில் அந்த திறந்த வெளியில் அது தோன்றின பிறகு, நான் உடனே அந்த கிருபையை சிந்தித்துப் பார்த்தேன், நான் பின்பு ஒரு மரக்கட்டையின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. நான், “ஓ, தேவனே என்னை இரட்சிக்க உமது கிருபை இவ்வளவாகத் தன்னை தாழ்த்தினது. ஒரு எளிய, படிப்பறிவில்லாத ஈனனின் மீது நீர் ஏன் அனுதாபங்கொள்ள வேண்டும் எங்கள் தாழ்மையுள்ள சிறு கூடாரத்துக்கு நீர் எப்படி வர நினைத்தீர் அங்கு சமாதானம் நிலவுகின்றது. அங்கு எளிய ஜனங்கள், இவ்வுலகின் ஐசுவரியம் எதையும் பெற்றிராமல் வாழ்க்கையில் தாழ்ந்து காணப்படுகின்றவர்கள் வருகின்றனர், இருப்பினும் பரிசுத்த ஆவியினாலே உமது கிருபை எங்கள் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. நீர் எங்கள் வியாதியை சுகப்படுத்துகிறீர் எங்கள் பாவங்களிலிருந்து எங்களை இரட்சித்து எங்களை உமது ஜனங்களாக்கிக் கொண்டீர். எங்களுடன் ஈடுபடும்” என்று கூறினேன். 36அப்பொழுது தாவீதைக் குறித்து நான் சிந்தித்தேன். கர்த்தருக்கென்று ஒருவீட்டைக் கட்டவேண்டும் என்னும் எண்ணம் அவன் மனதில் தோன்றினது. அவன், “கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும் போது, தேவனுடைய பெட்டி ஆட்டுத் தோல்களில் செய்யப்பட்ட கூடாரத்தில் வாசமாயிருப்பது நல்லதல்ல” என்றான். அப்பொழுது கர்த்தர் தீர்க்கதரிசியிடம், “நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி, ”ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டு மந்தையை விட்டு எடுத்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன், என்று சொல்“ என்றார். 37அவர் எப்படி அதை செய்ய முடிந்ததென்று, நான் தேவனுடைய கிருபையைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானேன் - முடிவுபரியந்தம் இரட்சிப்பவர்! என்னைப் போன்ற ஒர் ஏழை ஈனனை அவர் தெரிந்துகொண்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எனக்குத் தருணம் அளித்து, மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதையும், சுகம் பெறுவதையும், பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேருவதையும் பாழான வாழ்க்கை மீண்டும் சரியான நிலயில் வருவதையும் காண எனக்குக் கிருபை அளித்தார். ஓ, அது திகைப்பூட்டும் கிருபை! இழிவான, தாழ்ந்த, காட்டில் அணில் வேட்டையாடும் வேட்டைக்காரனிடம், அவர் வானவில் வடிவில் வந்து - அது “உடன்படிக்கைக்கு” அடையாளமாயுள்ளது - நான் பிரசங்கிக்க ஒரு செய்தியையளித்து, அவர் அதற்கு பின்னால் இருந்துகொண்டு அதை உறுதிபடுத்துகிறார் என்பதற்கு அடையாளமாக ஒரு உடன்படிக்கையின் உருவில் காட்சியளித்தார். அவர் எப்பொழுதுமே அதன் பின்னால் இருந்து கொண்டு தாங்குவார். ஏனெனில் செய்தியானது இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் அவருடைய மகிமையைக் குறித்துமே. 38அவர் என்னை உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளுக்கு போகும்படி செய்தார். இலட்சக்கணக்கான மக்கள் கர்த்தரிடம் வந்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருடைய நன்மையினால் நிறைக்கப்பட்டு, அவருடைய வல்லமையினால் பரிசுத்தமாக்கப்பட்டு, அவருடைய மகத்தான சர்வ வல்லமையினால் அவர்கள் ககம் பெறுவதை நான் காணும்படி செய்தார் நானும் தீர்க்கதரிசியுடன் கூட சேர்ந்து, “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலே” என்று சத்தமிட முடியும். படிப்பினால் அல்ல, வேத சாஸ்திரத்தினால் அல்ல, ஆனால் தேவனுடைய ஆவியினால் அவர் ஜங்களை இரட்சிக்கிறார், தேவனுடைய ஆவியினால் அவர் ஜனங்களை சுகமாக்குகிறார். தேவனுடைய ஆவியே ஜனங்களுக்கு செய்தியையளிக்கிறது. தேவனுடைய ஆவியே வார்த்தையை உறுதிப்படுத்துகின்றது 39இன்று நமக்கு வேதபண்டிதர்கள் உள்ளனர் இன்று நமக்கு வேதசாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் உள்ளனர். புத்தியுள்ள, கல்வி கற்ற மேதைகள் உலகம் முழுவதும் நமக்குள்ளனர். ஆனால் அவருடைய வார்த்தையை பேசச் செய்து இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் காண்பிக்க தேவன் பேரிலுள்ள எளிய விசுவாசம் தான் அவசியம். இயேசு கிறிஸ்துவை நிகழ்காலத்தில், கொண்டு வர, ஒரு எளிய, தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட இருதயமே அவசியமாயுள்ளது. அதற்கு வேத சாஸ்திரம் அவசியமாயிருக்குமானால், பிரிஸ்பிடேரியன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்கர் போன்றவர்கள்; படிக்காத, எளிய ஜனங்களாகிய நமக்கு தருணம் இருந்திருக்காது. ஆனால் இதற்கு மனித அறிவு அவசியமில்லை. பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே மாத்திரம் நான் இரகசியங்களை வெளிப்படுத்துவேன்“ என்று கர்த்தர் சொல்லுகிறார். அவன், ”கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக“ என்று ஆர்ப்பரிப்பான். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. தேவனுடைய திகைப்பூட்டும் கிருபை தமது மக்களின் மேல் தங்கியுள்ளது. அவர் படிக்காதவர்களையும், எழுத்தறிவில்லாதவர்களையும் தெரிந்து கொண்டு. இயேசு கிறிஸ்து மாறாதவர் என்பதைக் காண்பிக்கிறார் 40இயேசு இவ்வுலகில் வந்தபோது, அவர் சிறந்த வேத பண்டிதர்களிடம் செல்லவில்லை, அவர் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிடமும் செல்லவில்லை, அவன் அவர் பேரில் குற்றஞ் சாட்டினான். ஆனால் அவர் மீன் பிடிப்பவர்களையும் ஏழை ஜனங்களையும் தெரிந்து கொண்டு, எளிய வாழ்க்கையை கடைபிடித்தார். அவர்களுக்கு அவர் தம்மை வெளிப்படுத்தி, “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன்” என்றார், அவருடைய கிருபை யூதர்களிலிருந்து புறஜாதிகளுக்கு இப்பொழுதும் சென்று, நாம் இப்பொழுது பார்த்த விதமாக, இந்த கடைசி நாட்களில் அவருடைய நாமத்துக்கென்று ஒரு கூட்டம் ஜனங்களை அழைத்துக் கொண்டிருக்கிறது. திகைப்பூட்டும் கிருபை, எவ்வளவு இனிமையான தொனி. 41கிருபை பழமையானது. உலகம் எவ்வளவு பழமையானதோ, கிருபையும் அவ்வளவு பழமையானது. மானிடவர்க்கம் தொடங்கின முதற்கே, கிருபையானது மானிடவர்க்கத்துக்குக் காண்பிக்கப்பட்டு வருகின்றது. ஏதேன் தோட்டத்தில் முதலாவதாக மானிடவர்க்கம் சிருஷ்டிக்கப்பட்டபோது, அந்த இருளான காலையில் அந்த ஸ்திரீ பிரிவினைக் கோட்டைத் தாண்டி, தேவனுடைய கற்பனைகளை மீறி, அவள் புரிந்த செயலையே அவளுடைய கணவனும் செய்யும்படி அவளைத் தூண்டியபோது, பிரமாணம் மீறப்பட்டது. ஒரு பிரமாணத்துக்கு ஒரு தண்டனை இருந்தே தீரவேண்டும், இல்லையென்றால் அது பிரமாணம் அல்ல அங்கு கொடுக்கப்பட்டிருந்த பிரமாணம், “நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்பதே. முதலாம் நியாயாசனம் பூமியின் மேல் இருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது ஏதேன் தோட்டத்தில் இருந்தது. கடைசி நியாயாசனம் பூமியின் மேல் முடிவு காலத்தில் இருக்கும் வெள்ளை சிங்காசனம் 42யேகோவா இறங்கி வந்தபோது, ஒரு நட்சத்திரமும் கூட பிரகாசிக்கவில்லையென்று எண்ணுகிறேன். ஒரு காலத்தில் வெளிச்சமாயிருந்த அந்த ஏதேன் தோட்டம் இருளாயிருந்தது. ஏனெனில் பாவம் அங்கிருந்து வெளிச்சத்தைப் போக்கிவிட்டது. இன்றைய சபைகளின் நிலையும் அதுவே. இன்றைய ஜனங்களின் நிலையும் அதுவே. கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்; அவர் முற்றும் முடிய இரட்சிக்கவும் எளிய மனிதர் வரைக்கும் வியாதியுள்ளவர்களை சுகமாக்கவும் ஜீவிக்கிறார் என்று காண்பிக்கும் ஜீவனுள்ள தேவனுடைய வெளிச்சத்தை பாவமானது போக்கிவிட்டது. 43ஒ, அன்று காலை இருள் ஏதேன் தோட்டத்தை சூழ்ந்து கொண்டபோது, அது எவ்வளவு பயங்கரமாய் இருந்திருக்கும், ஒரு கறுப்பு இரட்டுத் துணியை போன்ற கார்மேகம் மூடிக்கொண்டிருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு இலையும் அங்கு அசைந்திருக்காது. அதை அசையச் செய்ய காற்று இல்லை. அது பயங்கரமான இருள். ஏனெனில் பாவம் வெளிச்சத்தைப் போக்கியது . யேகோவா இடிமுழக்கம் போல் இறங்கி வந்து, தோட்டத்தின் வழியாக நடந்து, “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்றார் அப்பொழுது ஆதாம், தான் நிர்வாணியென்றும், தான் தேவனுக்கு முன்பாக பாவம் செய்தான் என்பதையும் உணர்ந்திருந்தான். அவன் தன்னை மறைத்துக் கொண்டு தனக்கென்று ஒரு மார்க்கம் உண்டாக்கிக் கொள்ள முயன்றான். ஆனால் அது முடியவில்லை. தேவன் சில ஆடுகளைக் கொன்று, அவைகளின் தோல்களை எடுத்து அவனை மூடி, பாவத்தை மூட ஏதாவதொன்று சாகவேண்டும் என்பதைக் காண்பித்தார் ஒரு சபையைச் சேர்ந்து கொள்ளுதல் பாவத்தை ஒருபோதும் மூடாது. உலர்ந்த கண்களைக் கொண்டு செய்யப்படும் அறிக்கை பாவத்தை ஒருபோதும் மூடாது. மஸ்தாபமும், மனந்திரும்புதலும், தேவனுடைய கிருபையுமே பாவத்தை மூடுவதற்கு அவசியமாயுள்ளன. தேவன் கல்வாரியில் கொன்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தமே பாவத்தை மூடும். 44அன்று காலை ஏதேன் தோட்டத்தில் பாவம் மிகவும் இருளாக இருந்தபோது, யேகோவா அங்கு வந்தார். அவருடைய தம்பதிகள் ஆக்கினக்குட்பட்டவர்களாய் அங்கு நின்று கொண்டிருந்தனர் அவர்கள் மரிக்க வேண்டும், அப்பொழுது மானிடவர்க்கமே இராது. மானிடவர்க்கத்துக்கு மரணம் என்பது உலகத்தை காட்டு மிருகங்களுக்கு கொண்டு சென்றுவிடும். பிறகு மானிடவர்க்கம் என்பதே இருந்திருக்காது. ஆனால் மிகுந்த இருள் சூழ்ந்த அந்த நேரத்தில், எல்லா நம்பிக்கையும் போய்விட்ட அந்த நேரத்தில், கிருபை பொழிந்து, “நான் உங்களுக்கு ஒரு இரட்சகரை - ஒரு மேசியாவை - தருவேன்” என்று வாக்களித்தது. தேவன் அதை எப்படி செய்ய முடிந்தது என்பது மிகவும் ஆச்சரியமானது. ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய திகைப்பூட்டும் கிருபை ஒரு நீதிமான் ஸ்திரீயின் மூலம் தோன்றுவார் என்பதை அவர்களுக்கு வாக்களித்தது. “ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவார்” குற்றவாளியான அவனை, “அவன் அவருடைய குதிங்காலை நசுக்குவான்” சபைக்கு துன்பம் வரும் என்பதை அது காண்பிக்கின்றது. ஆனால் அவர் வெற்றியை வாக்களித்தார். இரட்சகரை தந்தது எது? கிருபை! 45கிருபைக்குத் தகுதியாயிருப்பதற்கு அவர்கள் எதை காண்பிக்க முடியும்? அதை செய்ய அவர்கள் எதைக் காண்பிக்க முடியும்? இராணுவத்தில் இவ்வாறு கூறுவது வழக்கம். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை இந்த பிரசங்க பீடத்திலிருந்து கூற விரும்புகிறேன். அதாவது “ரூபாயை ஒருவர் கையிலிருந்து மற்றவருக்குத் தந்துவிடுவது” (passing the buck) (அதாவது தாங்கள் ஏற்கவேண்டிய பழியை மற்றவர் பேரில் சுமத்துவது- தமிழாக்கியோன்). ஆதாம், “நீர் தந்த ஸ்திரியானவள் அதை செய்தாள்” என்றான். ஸ்தரீ, “சர்ப்பம் என்னை வஞ்சித்தது” என்றாள். ஒருவர் மற்றவர் பேரில் பழியை சுமத்துதல். அவர்களுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் தேவன் கிருபையை அருளினார். அது பிரவாகித்துக் கொண்டு வந்தது. அவர், “நான் எப்படியாவது ஒரு வழியை உண்டாக்குவேன். உங்களை எப்படியாயினும் இரட்சிப்பேன். நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். நீங்கள் என் கற்பனையை மீறினீர்கள். என் கற்பனையை மீறினதற்காக உங்களுக்கு நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதை மீறினால் ”மரணம்“ என்று நான் கூறின காரணத்தால், மரணம் நேரிடவேண்டும்” என்றார். 46என் கிறிஸ்தவ நண்பர்களே, இங்கு ஒலிப்பதிவாகும் ஒலி நாடாக்கள் உலகம் பூராவும் செல்லும். தேவனை மூன்று தெய்வங்களாக செய்ய முயல்பவர்களே, அல்லது உங்கள் விரலைப் போல் ஒருவராக செய்ய முயல்பவர்களே அவர் மனித ரூபத்தில் ஒருவர் தான் - உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒரு தேவதூதனை மரிக்கச் செய்வது தேவனுக்கு நியாயமாயிராது. ஒரு மனிதனுக்காக ஒரு தேவதூதனை அவர் மரிக்கச் செய்தால், அவர் நீதியுள்ள நியாயாதிபதியாக இருக்க முடியாது. அதனால் உபயோகமிராது. அவருடைய மகத்தான பிரமாணம் மரணத்தை கேட்கிறது. யாராகிலும் ஒருவர் மரிக்க வேண்டும். ஆனால் தேவதூதன் அவர்களுக்குப் பதிலாக மரிக்க முடியாது. ஏவாளே, ஆதாம் இதை செய்ய நீ காரணமாயிருந்தபடியால் நீ மரிக்கும்படி செய்கிறேன், ஆதாம் உயிர் வாழட்டும்“ என்றும், அவர் சொல்ல முடியவில்லை. ஏனெனில் ஆதாமும் அதில் பங்கு கொண்டவனாயிருந்தான். 47யாரோ ஒருவர் “பிலாத்து கைகளைக் கழுவினதால் நீதிமானாகிவிட்டான்” என்று கூறினார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை உங்கள் கைகளிலிருந்து நீங்கள் கழுவி விட முடியாது. இன்று காலை இக்கட்டிடத்தை விட்டு நீங்கள் வெளியே சென்று, உங்கள் பாவங்களில் மரிக்க நேர்ந்தால், நீங்கள் பரலோகம் செல்ல முடியாது. அது உங்கள் கைகளின் மேல் உள்ளது. எனவே, அப்படி கூறுவது சரியல்ல. ஒரே ஒரு நியாயமான வழி இருந்தது. ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்க முடியும். தேவனுடைய மகத்தான பிரமாணம் கூறுவது நிறைவேற்றப்பட வேண்டும். அவரே அதை ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற வேண்டியதாயிருந்தது. அவரே அதை செய்ய வேண்டியதாயிருந்தது. தேவன் ஆவியாயிருப்பதனால் அவரால் மரிக்க முடியாது. எனவே இதற்கென்று அவர் மனிதனாக வேண்டியிருந்தது. அவர் மனித சரீரத்தில், “இயேசு கிறிஸ்து” என்றழைக்கப்பட்ட மனிதனாக மரித்தார். கிருபையைக் கொண்டு வந்த வாக்களிக்கப்பட்ட மேசியா இவரே. அங்குதான் தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பதை உங்களால் காணமுடியும். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார். “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள் வாசமாயிருக்கிறார். இதை நான் என் சுயமாய் பேசவில்லை, எனக்குள் வாசமாயிருக்கிற பிதாவே இவைகளைச் சொன்னார். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தல் நிச்சயமாக. 48ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கிருபை வாக்களிக்கப்பட்டது. கிருபை வந்தது. அவர்களுக்கு போக இடமில்ல, எந்தப் பக்கம் திரும்ப வேண்டுமென்று தெரியவில்லை. ஆயினும் கிருபை ஒரு வழியை உண்டு பண்ணினது . பாவியான என் நண்பனே, இதைக்கூற விரும்புகிறேன். நீ ஒரு வேசியாக இன்று காலை இங்கிருக்கலாம், பெண்களின் பின்னால் செல்லும் ஒருவனாக இன்று கால இங்கிருக்கலாம், ஒரு குடிகாரனாகவோ அல்லது சூதாடுபவனாகவோ அல்லது கொலைகாரனாகவோ இங்கிருக்கலாம். தூய்மையற்ற ஒரு கணவனாகவோ அல்லது தூய்மையற்ற மனைவியாகவோ இங்கிருக்கலாம். நீ மிகவும் கேடுகெட்ட பாவியாக இருக்கலாம். நீ, “நான், மீட்கப்படும் கட்டத்தை கடந்து விட்டேன்” என்று கூறலாம். இல்லை, நீ அப்படி இல்லை, அப்படியானால் இன்று காலை நீ சபையில் இருந்திருக்கமாட்டாய். நீ மாத்திரம் அதை ஏற்றுக் கொள்வாயானால், இந்த அந்தகார நேரத்தில் கிருபை உனக்கு ஒரு வழியை உண்டுபண்ணும். அதை ஏற்றுக் கொள்ள ஆதாம் சித்தங்கொண்டவனாக இருக்க வேண்டியதாயிருந்தது. நீயும் அப்படித் தான். அதை ஏற்றுக்கொள். 49தேவனுடைய கிருபை நோவாவின் காலத்தை அடைந்தது. நோவா ஒரு சாதாரண மனிதன் - அவனும் அவன் குடும்பத்தினரும். நோவா தேவனுக்குப் பயந்திருந்தான், அவன் தேவனை விசுவாசித்தான். நீங்கள் தேவனை விசுவாசிக்காமல் அவருக்கு பயந்திருக்க முடியாது. நீங்கள் விசுவாசிக்காத ஒன்றுக்கு எவ்வாறு பயப்படமுடியும்? நீங்கள் தேவனுக்கு பயந்திருக்க வேண்டும் “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” எனறு சாலொமோன் கூறினான். நீங்கள் தேவனுக்குப் பயப்படும்போது தான், ஞானத்தைப் பெற்றுக் கொள்ளத் தொடங்குகின்றீர்கள். நோவா கர்த்தருக்குப் பயந்து அவரை விசுவாசித்தான். அவர் பேரில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தையே தேவன் கனப்படுத்துகிறார். அது உண்மை. நோவா தேவனுக்குப் பயந்தபோது, தேவன் கிருபையினால் அவனை அழைத்து, அவனையும் அவன் வீட்டாரையும் இரட்சித்தார். கிருபையே அதை செய்தது. நோவா மற்றவர்களைக் காட்டிலும் பெரியவனாயும் அழகுள்ளவனாயும் இருந்தான் என்பதனால் அல்ல, தேசத்திலேயே மிகச் சிறந்து விளங்கிய சபைக்கு அவன் சென்றான் என்பதனால் அல்ல, மிகச் சிறந்த ஸ்தாபனத்தை அவன் சேர்ந்திருந்தான் என்பதனால் அல்ல, அவன் சிறந்த உடைகளை உடுத்தினான் என்பதனால் அல்ல, அவனுக்கு நிறைய பணம் இருந்தது என்பதனால் அல்ல, அவன் விசேஷமான ஆள் என்பதனால் அல்ல, ஆனால் தேவனுடைய கிருபையே தேவன் நோவாவை இரட்சிக்கக் காரணமாயிருந்தது. கிருபை நோவாவை இரட்சித்தது (அவனுடைய கிரியைகள் அல்ல, ஆனால் அவருடைய கிருபை). அது அவனுடைய குடும்பத்தாரையும் இரட்சித்தது. 50அநேகருக்கு தேவனுடைய கிருபை அருளப்பட்டது, அவர்களில் சிலரைக் குறித்து மாத்திரம் நாம் பேசுவோம். வேறொரு நபரைக் குறித்து நாம் பார்ப்போம் - ஆபிரகாம். ஆபிரகாம் விசேஷித்த ஆள் அல்ல. அவன் பாபேல் கோபுரத்தை விட்டு இறங்கி வந்தவன், விக்கிரக வழிபாடு செய்யும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவன் (அவனுடைய தந்தை). அவன் சீனார் தேசத்திலிருந்து புறப்பட்டு வந்து, ஊர் என்னும் பட்டினத்தில் வசித்தான். அவன் அங்கு வசித்துக் கொண்டிருந்தபோது, தேவன் கிருபையினால் அவனுடன் பேசினார். அவன் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்தான் என்பதனால் அல்ல, அவன் மேலானவனாக இருந்தான் என்பதனால் அல்ல. ஆனால் கிருபையினால் தேவன் அவனை அழைத்தார். வேதம் அதை தெளிவாக அறிவிக்கிறது. ஓ, ஆபிரகாம் எவ்வளவாக தேவனுடைய பொறுமையை சோதித்தான்! கர்த்தர் அவனிடம் “ஆபிரகாமே, இந்த தேசத்தில் தங்கியிரு. இதை விட்டு வெளியே போகாதே” என்றார். ஆனால் பஞ்சம் வந்தவுடனே, ஆபிரகாம் அங்கிருந்து ஒடிப்போனான். 51ஆபிரகாம் நமக்கு அடையாளமாயிருக்கிறான். தேவன் கிருபையினால் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனை இரட்சித்தார். அதே விதமாகத்தான் அவர் உங்களையும் கிருபையினால் தெரிந்துகொள்கிறார், நாம் எப்படி அவருடைய பொறுமையைச் சோதிக்கிறோம்? இன்றைக்கு நாம் உற்சாகம் கொண்டிருக்கிறோம், நாளை சோர்ந்து போனவர்களாக காணப்படுகிறோம். இன்றைக்கு நாம் விசுவாசிக்கிறோம், நாளை நாம் சந்தேகப்படுகிறோம். இன்றைக்கு நாம் மெதோடிஸ்டாக இருக்கிறோம், நாளை நாம் பாப்டிஸ்டாக மாறிவிடுகிறோம். இன்றைக்கு நாம் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிருக்கிறோம், நாளை வயிற்று வலி நமக்கு வந்தால், நாம் அதில் விசுவாசம் கொண்டிருக்கிறோமா இல்லையாவென்று நமக்குத் தெரியவில்லை. ஆயினும் இவையனைத்தின் மத்தியிலும் நாம் நிலைத்திருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் எப்படியாயினும் நம்மை இரட்சிக்கிறார். தேவனுடைய கிருபை இராவிட்டால், நாம் எல்லோரும் போயிருப்போம். நிச்சயமாக. தேவன் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். 52ஆபிரகாம் அந்த தேசத்தில் தங்கியிருக்க வேண்டியவன், ஆனால் அவன் கல்தேயரிடம் சென்றான் - கல்தேயரிடம் இல்ல, பெலிஸ்தியரிடம் சென்றான். பஞ்சத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அவன் அங்கு சென்று சஞ்சரித்தான். அவனுடைய தேசத்தில் சற்று கடினமா நிலை வந்தவுடன், அவன் புறப்பட்டு பிரயாணம் செய்து அவர்களுடன் தங்கினான். எதைச் செய்யக் கூடாதென்று தேவன் அவனிடம் கூறியிருந்தாரோ, அவன் அதையே செய்தான். ஆயினும் தேவனுடைய கிருபை அவனிடம் தோன்றி, பார்வோன்…. ராஜா அவனுடைய மனைவியை எடுத்துக் கொள்ளாதபடிக்கு காப்பாற்றியது. ஆபிரகாம், “அவள் என் சகோதரி” என்று பொய் சொன்னான். ஆயினும் தேவனுடைய கிருபை அவனைப் பற்றிக் கொண்டது. ஏனெனில் அவன் மனந்திரும்பினான். அவன் மனந்திரும்ப சித்தமாயிருத்தான். அவ்வாறே நீங்கள் யாராகிலும் மனந்திரும்ப சித்தமாயிருந்தால், தேவனுடைய கிருபை உங்களுடன் செல்லும். தேவனுடைய கிருபை உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. பின்வாங்கிப் போனவர்களாக இன்று காலை இங்குள்ளவர்களுக்கும் அது பொருந்தும். தேவனுடைய கிருபை உங்களையும் தேடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் மாத்திரம் மனந்திரும்பினால், தேவனுடைய கிருபை உங்களுக்கு போதுமானதாயுள்ளது. அவர் எப்படி மறுபடியும் ஆபிரகாமை திரும்பக் கொண்டு வந்தார்! ஞாபகம் கொள்ளுங்கள், ஆபிரகாம் கிரியைகளினால் இரட்சிக்கப்படவில்லை, கிருபையினால்இரட்சிக்கப்பட்டான். ஆபிரகாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டான். விசுவாசம் என்பது கிருபை. தேவன் தமது கிருபையின் நிமித்தம் ஆபிரகாமை இரட்சித்தார், அவனுடைய நல்நடத்தையின் காரணமாக அல்ல. அவருடைய கிருபையின் காரணமாக அவர் அவனை இரட்சித்தார். ஓ, எவ்வளவு நல்லது! அவன் கிருபையினால் இரட்சிக்கப்பட்டான். 53இஸ்ரவேல் ஜனங்களை நாம் எடுத்துக் கொள்வோம். ஒரு வேதவாக்கியத்தை இங்கு எழுதி வைத்துள்ளேன், அது என் ஞாபகத்தில் உள்ளது. நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், இது ஞாபகம் வைத்துக் கொள்ள மிகவும் நல்ல வசனம் - உபாகமம் 7:7. தேவன் ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்தம் அளித்திருந்தார். ஆபிரகாமுக்கு அல்லது என்னை மன்னிக்கவும் - இஸ்ரவேலருக்கு வாக்குத்தத்தம் அளித்திருந்தார். அவர் அவர்களிடம் நீங்கள் விக்கிரகாராதனையில் பங்கு கொள்ளாமலும், இவைகளைச் செய்யாமலும், அஞ்ஞான பண்டிகைகளில் கலந்து கொள்ளாமலும் இருப்பீர்களானால், உங்களை நன்மையான தேசத்துக்கு கொண்டு வந்து, உங்களைப் பாதுகாத்து, உங்களைப் போஷித்து, உங்களை வழிநடத்துவேன், நீங்கள் இன்னின்ன காரியங்களைச் செய்து, என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும், கைக்கொண்டு, என்மேல் அன்புக் கூருவீர்களானால், இவைகளை நான் உங்களுக்குச் செய்வேன்“ என்றார், 54ஒரு கணவன் தன் மனைவியை ஏற்றுக்கொள்ளும்போது, “நீ நல்ல பெண்ணாக இருந்து, வீட்டைக் கவனித்து, எனக்கு உண்மையாயிருந்து, என் துணிகளை சுத்தமாக வெளுத்து, நமக்கு குழந்தைகள் பிறந்தால், அவர்களுக்கு நல்ல ஒரு தாயாக அமைவாயானால் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கு என் கரங்களிலிருந்து இரத்தம் வரும் வரைக்கும் நான் உழைப்பேன்” என்று கூறுவது போல. ஓ தேவனே தமது குடும்பத்தை ஒன்றாக கட்டிக்காக்க யேகோவாவின் கிருபை அவசியமாயுள்ளது, இயேசு கிறிஸ்துவின் கிருபையின் காரணமாகவே நாம் யேகோவாவின் குடும்பத்தினராய் இருக்கிறோம். இல்லயென்றால் நாம் எல்லோரும் போயிருப்போம். அது கிருபை, ஓ, கிருபை! 55ஆனால் இஸ்ரவேலரோ அதைக் கைக்கொள்ளவில்லை, வாக்களிக்கப்பட்ட அந்த சந்ததி முழு வாக்குத்தத்தத்தையும் சுதந்தரிக்கவில்லை. இல்லை, யாருக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டதோ, அந்த சந்ததி வனாந்தரத்தில் அழிந்து போனது. ஆனால் தேவன் அவர்களைப் போஷித்தார், அவர்களைப் பாதுகாத்து வந்தார். தேவன் அவர்களை நேசித்தார். அவர் அங்கு சுற்றிக் கொண்டேயிருந்தார். ஏன்? அவருடைய கிருபை அதை செய்தது. அவருடைய வாக்குத்தத்தத்தினிமித்தம் அவருடைய கிருபை! அவருடைய கிருபை அவருடைய வாக்குத்தத்தத்துடன் கூட சென்றது, ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் முழுமைக்குள் அவர்கள் வரவில்லை. அவ்வாறே ஸ்தாபன சபையும் அதன் முழுமைக்குள் வர முடியாது. தேவனுடைய கிருபை நம்மைத் தாங்குகிறது. ஆனால் அவருக்கு கீழ்ப்படியும் ஒரு சபையை; ஸ்தாபனங்கள் என்ன கூறின போதிலும், அவருடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, “அது உண்மை” என்று கூறும் ஜனங்களைப் பெற்றுக்கொள்ள அவர் விரும்புகிறார். “உங்களைப் போல் நானும் நல்லவன். நான் பிரஸ்பிடேரியன், நான் மெதோடிஸ்டு, நான் கத்தோலிக்கன்” என்று கூறாதவர்களே அவருக்குத் தேவையாயுள்ளது. அது கிருபையல்ல. எங்கோ தவறுள்ளதென்பதை அது காண்பிக்கிறது. 56ஆனால் ஒருவன், அது என்னவாயிருப்பினும், தேவனுடைய வார்த்தையை படித்து, அவன் மறுபடியும் பிறக்க வேண்டுமென்றும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட வேண்டுமென்றும் கண்டு கொண்டு அதை விசுவாசிப்பானானால் அப்படிப்பட்டவர்கள் வார்த்தை என்ன கூறுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். தெளித்தல் ஞாஸ்நானம் என்பதைக் குறித்த விஷயத்தில்; ஞானஸ்நானம் சரியே. ஆனால் யாரும் தண்ணீர் தெளித்து ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதத்தில் சான்று எதுவுமே கிடையாது. அவ்வாறே, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி”யின் நாமத்தில் யாரும் ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதத்தில் எங்குமே காணப்படவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் இயேக கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். வரலாற்றில் எந்தவித சான்றும் இல்லை…. கடைசி அப்போஸ்தலன் மரித்து முன்னுாறு ஆண்டுகள் கழித்து கத்தோலிக்க சபை நிறுவப்படும் வரையிலான காலத்தில் எவராவது தெளித்தல் மூலமாகவோ அல்லது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி”யின் நாமத்தினாலோ ஞானஸ்நானம் பெற்றதாக வரலாற்றில் யாராவது எனக்குக் காண்பிக்கக் கூடுமானால், நீங்கள் என்னிடம் அதைக் கூற ஆத்துமக் கடன்பட்டிருக்கிறீர்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒன்று வரலாற்றிலே இல்லை. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? 57நாம் சபை காலங்களைக்குறித்து பார்த்தோம். அவர்கள் அதை எங்கு செய்யத் தொடங்கினர் என்பதை நாம் கண்டோம். எனவே, பாருங்கள், தேவனுக்கு தமக்குக் கீழ்ப்படியும் ஒருவர் அவசியமாயுள்ளது. அது வேதத்தில் காணப்படவில்லயென்றால், அது மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசமேயன்றி, வேத உபதேசம் அல்ல. பாருங்கள்? எனவே சபை எதுவாயிருப்பினும், நீங்கள் எவ்வளவு தவறாக இருந்தாலும், அதனால் வித்தியாசம் என்ன? இப்பொழுது நீங்கள் எவ்வளவு சரியாயிருக்கிறீர்கள் என்பதே முக்கியம் வாய்ந்தது. தேவனுடைய கிருபை அதை உங்களுக்கு காண்பித்துள்ளது. அப்படியானால் அதில் நடவுங்கள். தேவனுடைய கிருபை 58அந்த மகத்தான தலைவன் மோசேயை நினைத்துப் பாருங்கள். அவன் தன்னை மகிமைப்படுத்துவதற்கென அங்கு சென்று கன்மலையை அடித்து, “என்னால் என்ன செய்ய முடியுமென்று பாருங்கள்” என்று கூறினபோது, தேவன் அவனை கொன்றிருக்க வேண்டும். அவன் “கலகக்காரரே, இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமோ” என்று கூறி, கன்மலையை அடித்தான். அப்பொழுது தண்ணீர் வரவில்லை. அவன் மறுபடியும் அடித்தான். அவன் என்ன செய்தான் கிறிஸ்து பலவீனமுள்ளவர் என்பதைப்போல் அவன் சாட்சி பகர முனைந்தான். ஏனெனில் கிறிஸ்துவே அந்த கன்மலை. அதுதான் தலைக்கல் அதனிடம் பேசுவதற்கு பதிலாக... அதை அடித்தான்..... அது ஏற்கனவே ஒருமுறை அடிக்கப்பட்டுவிட்டது. தேவன் யாத்திராகமத்தில் மோசேயிடம் “நீ போ. நான் உனக்கு முன்பாக கன்மலையின் மேல் நிற்பேன். நீ அந்தக் கன்மலையை அடி” என்றார். அவன் கன்மலையை அடித்தான். அப்பொழுது தண்ணீர் அதிலிருந்து புறப்பட்டு வந்தது. அடுத்தமுறை தேவன் மோசேயிடம், “கன்மலையைப் பார்த்து பேசு, அப்பொழுது அது அதனுடைய தண்ணீரைக் கொண்டுவரும்”, என்றார். ஆனால் மோசே தனக்கு சிறிது அதிகாரம், சிறிது வல்லமை உண்டென்று காண்பிக்க விரும்பி, “இந்த கன்மலையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் கொண்டு வருகிறேன்” என்று சொல்லி அதை அடித்தான். அதற்காக தேவன் அவனைக் கொன்றிருக்க வேண்டும். தேவனுடைய கட்டளையை அவன் மீறின காரணத்தால் தேவன் அவனைப் பிரித்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் தேவன் பலவீனமானவர் என்றும், அவர் இரண்டாந்தரம் அடிக்கப்படவேண்டும் என்பது போல் ஜனங்களுக்குக் காண்பித்தான். கிறிஸ்து ஒருதரம் தான் அடிக்கப்பட்டார் இப்பொழுது நாம் அந்த கன்மலையிடம் பேசுகின்றோம். அப்பொழுது அதிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வருகின்றது. அது என்ன? அந்த வயோதிபனை நாம் பார்ப்போம், அவனுக்கு வயது நூற்றிருபது. 59அண்மையில் ஒருவர் என்னிடம், “தேவன் அநியாயமானவர், அவர் மோசேயைக் கைவிட்டார். அவன் அந்த எபிரெயர்களுடன் வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் கஷ்டப்பட்ட பிறகு, அவர் அவனைக் கைவிட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்காதபடிக்கு செய்துவிட்டார்” என்றார், நான், “ஓ, அர்த்தமற்ற பேச்சு” என்றேன். இல்லை, அவர் மோசேயைக் கைவிடவில்லை. அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்றான். சுமார் எழுநூறு ஆண்டுகள் கழித்து, அவன் மறுரூப மலையின் மேல் எப்பொழுதும் போல உயிருள்ளவனாக காணப்பட்டு, இயேசு கல்வாரிக்குச் செல்வதற்கு முன்பு அவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தான். எலியாவும் அங்கு அவர்களுடன் கூட நின்று பேசிக் கொண்டிருந்தான். மோசேயும் எலியாவும் மறுரூபமலையில் இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் இவர்களுக்குக் காணப்பட்டனர். மோசே மரித்தவனாக இல்லை. அவன் உயிரோடிருந்தான். தேவன் அவனைக் கைவிடவில்லை. அவன் பாலஸ்தீனாவில் இருந்தான். 60கவனியுங்கள், அவன் மரிக்கும் முன்பு, அவன் மரிக்கப் போகின்றான் என்று அறிந்தவனாய், அன்று காலை நேபோ பர்வதத்தின்மேல் ஏறினான். அவன் ஆரோனின் வஸ்திரத்தைக் கழற்றி வேறொருவனுக்கு அந்த வஸ்திரத்தை அணிவித்தான். அவன் தன் அங்கியை கழற்றி, யோசுவாவை உடுத்தி, அவன் கட்டளைகளின்படி நடக்க வேண்டுமென்று ஆலோசனை கூறினன். அவன் நேபோ பள்ளத்தாக்கிலுள்ள சமவெளியின் வழியாக பர்வதத்தை அடைந்து அதன் மேலேறி, பிஸ்கா வரை சென்றான். அவன் அங்கு நின்று கொண்டிருந்தபோது தேவன், “மோசே, அந்த தேசத்தைப்பார் அதை நீ பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். நீ அதற்குள் பிரவேசித்திருக்கலாம். ஆனால் அன்று அந்த கன்மலையருகே நீ என்ன செய்தாய் தெரியுமா? உன்னை நீ மகிமைப்படுத்திக் கொண்டாய்” என்றார். இன்று நம்மில் அநேகரிடையேயுள்ள தொல்லை அதுவே என்று எண்ணுகிறேன். “நீ அந்த கன்மலையினிடம் சென்று உன்னை மகிமைப்படுத்திக் கொண்டாய்” ஆனால் கவனியுங்கள், அவன் மரிக்க ஆயத்தமானபோது, அந்த கன்மலை அங்கு நின்று கொண்டிருந்தது. அவன் பிஸ்காவில் அந்த கன்மலையின் மேல் காலடி வைத்து ஏறியிருக்க வேண்டும். தேவன் அவனை அடக்கம் செய்தார். (ஒலிநாடாவில் காலி இடம்…. ஆசி)…. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து பாலஸ்தீனாவில், மறுரூபமலையில். பாருங்கள், தேவனுடைய கிருபை அந்த கன்மலையை அருளினது. ஓ, என்னே! 61ஆபிரகாம் செய்த எல்லா தவறுகளையும் நான் எண்ணிப் பார்க்கிறேன் - மோசேயையும் அவன் தவறுகளையும், ஆபிரகாமைக் குறித்த தெய்வீக வர்ணனை எழுதப்பட்டபோது, பவுல் ஆபிரகாமைக் குறித்த வர்ணனையை எழுதினபோது; ஆபிரகாமின் அவிசுவாசத்தைக் குறித்து அவன் ஒரு வார்த்தையும் கூறவில்லை; இல்லை, இல்லை, அது அவன் கணக்கில் எடுக்கப்படவேயில்லை. அவன். “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து ஆபிரகாம் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” என்று கூறினான். இன்று காலை தேவனுடைய கிருபையின் சமூகத்தின் முன்னிலையில், என் தாழ்மையான ஜெபம் என்னவெனில்; அவர் என்னுடைய தவறுகளைப் பாராமல், என்னுடையதும் அவ்வாறே எழுதப்படும் என்று நம்புகிறேன். என் மரணத்துக்குப் பிறகு வர்ணனை எழுதப்படும்போது, நான் தவறுகள் புரிந்தேன் என்று அதிலிருந்து வசிக்கப்படாமல், அவருக்காக நான் செய்ய முயன்றதை மாத்திரம் அவர் காண்பாராக, அவை…. அதை செய்வது எது? நான் விசுவாசிக்கின்ற தேவனுடைய கிருபையை அவர் கணக்கில் எடுத்துக் கொள்வார். அதில் மாத்திரமே நான் முழு நம்பிக்கையுள்ளவனாயிருக்கிறேன். என் சொந்த தகுதிகளின் அடிப்படையில் நான் உள்ளே செல்ல முடியாது, மற்றவர் யாருமே செல்ல முடியாது. ஆனால் நான் சார்ந்திருக்கிற தேவனுடைய கிருபையின் அடிப்படையில் மாத்திரமே நான் உள்ளே செல்ல முடியும். ஆம், நான் கிருபையின் மேல் சார்ந்திருக்கிறேன். மோசே மரிக்க ஆயத்தமான போது, அங்கு கன்மலை இருந்தது. 62தாவீதைக் குறித்து நாம் என்ன சொல்ல முடியும் தேவனுடைய கிருபை அந்த மகத்தான போர் வீரனைக் குறித்து தேவனே…. அவர், “தாவீது என் இருதயத்துக்கு ஏற்றவன்” என்றார். அந்த மகத்தான போர் வீரர்களில் ஒருவனாகிய உரியாவை கொன்று போட்ட செயலை எப்படி புரிய முடிந்தது? இந்த சிறிய வரலாற்றை சற்று நேரம் கூர்ந்து கவனியுங்கள். அங்கு போர்வீரர்கள் நின்று கொண்டிருந்தபோது, உரியா தாவீதின் பக்கத்தில் இருந்தான். அவன் ஒரு ஏத்தியன். அவன் மதம் மாறி யூத மார்க்கத்தைத் தழுவினவன். அவர்கள் தாவீதை அதிகமாக நேசித்தனர். அவன் நாட்டை விட்டு ஒடிப் போனவனாயிருந்தபோதிலும், அவன் மேல் அபிஷேகம் தங்கியிருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர், அவன் தன் சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டு பெலிஸ்தியர்களுடன் வாழ வேண்டியதாயிருந்தது. சவுல் அவனை வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஆயினும் இவர்கள் அவன் மேலிருந்து அபிஷேகத்தை அறிந்துகொண்டனர்! அவன் ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். தேவனுக்கு மகிமை! இன்றைக்கு நானும் அவ்வாறே அகதியாயிருப்பதனால், மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் கிறிஸ்து ராஜாவாக வரப்போகிறார் என்பதைக் காண்கிறேன். நீங்கள் எல்லா கென்னடிகளயும் தேர்ந்தெடுக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கிறிஸ்து ராஜவாயிருப்பார் அபிஷேகம் அவர் மேல் உள்ளது, அவருடைய வருகையின் செய்தியின் மேல் உள்ளது. அவர் ராஜாவாயிருப்பார்! 63அவர்கள் என்ன செய்தனர்? ஒரு நாள் அவன் பெத்லகேமின் வாசலினருகே தாகங்கொண்டு தண்ணீர் பருக விரும்பினான். அங்கு தான் அவன் முன்பு ஆடுகளை மேய்ப்பது வழக்கம். என்ன நடந்தது தெரியுமா? அவர்களில் இரண்டு பேர் பட்டயங்களை எடுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர, வழியிலே பதினைந்து மைல் தூரம் வரைக்கும் மனிதரை வெட்டி வீழ்த்திக் கொண்டு சென்றனர். ஏன்? ஏனெனில் அவனுடைய சிறு விருப்பமும் கூட அவர்களுக்கு ஒரு கட்டளையாக அமைந்திருந்தது. அதை யோசித்துப் பாருங்கள் அவர்கள் வழியிலே மனிதரை வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்று மலையின் உச்சியை அடைந்தனர். அது அவனிருந்த இடத்திலிருந்து பதினைந்துமைல் தொலைவில் இருந்தது. அவர்கள் அதன் வழியாக கடந்து சென்றனர். அவர்களுக்கு எதிராக எழும்பின ஒவ்வொரு மனிதனுடனும் அவர்கள் சண்டையிட்டுக் கொன்றனர். இப்படியாக அவர்கள் கடந்து சென்றனர். அவர்கள் இருவரும் ஒரு வாளியை எடுத்துக் கொண்டு, சத்துருக்களின் சேனையின் வழியாக ஒரு வாளி தண்ணீரை சுமந்துகொண்டு, அவர்களுடைய ராஜாவுக்கு, அவர்களுடைய சகோதரனுக்கு குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்தனர். அவனுக்கு அவ்விடத்திலே குடிக்கத் தண்ணீர் இருந்த போதிலும், அவன் அந்த தண்ணீரை விரும்பினான். 64ஓ தேவனே, நானும் தேவனுடைய வார்த்தையின் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு ஸ்தாபனத்தின் வழியாக கடந்து சென்று, என்ன நேர்ந்த போதிலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தையும், உயிர்த்தெழுதலின் வல்லமையையும், பரிசுத்த ஆவியையும், ஜங்களுக்கு கொண்டு வந்து தருவேனாக... ஏனெனில் அவர் அதிகாரத்துக்கு வரப்போகிறார். அவர் அதிகாரத்துக்கு வரப் போகிறார், அவர் தனிமையாக நிற்பார். ஆனால் இரட்சகருக்கு வழி தப்பிப்போன ஒரு ஆட்டைக்கொண்டு வர, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் வேத உபதேசங்களை மீண்டும் அளிக்க, ஒவ்வொரு ஸ்தாபனத்தின் வழியாகவும், ஒவ்வொரு கொள்கையின் வழியாகவும், மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு கோட்பாட்டின் வழியாகவும் வெட்டிக்கொண்டு கடந்துசெல்ல வேண்டியதாயுள்ளது. தேவனுடைய கிருபை! 65தாவீதைப் பாருங்கள். அவன் எப்படி இத்தகைய செயலைப் புரியலாம். குழியில் குதித்து சிங்கத்தைக் கொன்றவன். தாவீதுக்கு ஐந்நூறு மனைவிகள் இருந்தபோது, அவன் எப்படி உரியாவின் அழகிய மனைவியாகிய பத்சேபாளை எடுத்துக் கொள்ளலாம்? அவள் குளித்துக் கொண்டிருக்கும்போது அவன் அவளைப் பார்த்துவிட்டான். அது அஜாக்கிரதை! அவள் குளிக்கச் சென்றபோது, ராஜா ஒவ்வொரு நாளும் அந்த சுவற்றின் அருகே வருகிறான் என்பதை அவள் அறிந்த போதிலும், திரையை கீழே இழுத்து மூட அவள் மறந்துவிட்டாள். அது தான் இன்றும் நேரிடுகிறது. இன்றைய ஸ்திரீகள் அஜாக்கிரதையின் காரணமாயல்ல, வேண்டுமென்றே தெருக்களில் சிறிது ஆடைகளை மாத்திரம் அணிந்து நிர்வாணமாக நடக்கின்றனர் என்று எண்ணுகின்றேன். அது அவமானம் இப்படி செய்து விட்டு, ஆண்கள் ஏன் அவர்களப் பார்த்து சீட்டியடிக்க வேண்டும் என்று வியக்கின்றனர். அவர்கள சீட்டி அடிக்கச்செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். அவர்களுக்கு அது தெரியும். அதை தெரிந்து கொள்ள அவர்களுக்கு போதிய ஞானம் உள்ளது. அவர்கள் இவ்வாறு செய்ய விருப்பங்கொண்டுள்ளதால், இப்படி செய்கின்றனர். அது அவர்களுடைய இருதயத்திலுள்ளது. அவர்கள் நடத்தை கெட்டவர்கள் என்று நீங்கள் அவர்களிடம் கூறுவீர்களானால், அவர்கள் வாக்குவாதம் செய்வார்கள். அவர்கள் உடலுறவு விஷயத்தில் நடத்தை கெட்டவர்களாயிராமல், லீலிப் புஷ்பத்தைப்போல அவ்வளவு தூய்மையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் மேல் ஒரு ஆவி தங்கியுள்ளது. பிசாசின் அபிஷேகம் தங்கியுள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது ஏதாவது ஒரு மனிதனின் ஆத்துமாவை நரகத்துக்கு அனுப்பும். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” எனறு வேதம் கூறுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சகோதரியே, ஞாபகம் கொள், நீ உன் வாழ்க்கையில் உண்மையாக விபச்சாரஞ் செய்யாமலிருந்த போதிலும், விபச்சாரஞ் செய்த குற்றத்துக்காக நீ பதில் கூறவேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் நீ உடுத்திக் கொண்டிருந்த விதத்தில் உன்னைப் பார்த்த அந்த பாவி விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாவான். நியாயத்தீர்ப்பு நாளிலே விபச்சாரம் செய்த குற்றத்துக்காக நீ பதில் கூற வேண்டியிருக்கும். அவன் குற்றவாளியாக தீர்க்கப்படும்போது….. 66அவர் அந்த புத்தகத்தில் “விபச்சாரம் செய்தான்” என்று எழுதி வைத்திருப்பார். “யாருடன்” “திருமதி. ஜான் டோவுடன்”, “திருமதி ஜான் டோ, அதைக் குறித்து என்ன?” “நான் சத்தியம் செய்கிறேன்…. என் வாழ்க்கை குறிப்பு உங்களுக்குத் தெரியும். என் சொந்த கணவரையன்றி வேறு யாருடனும் நான் வாழவில்லை”. “ஆனால் இந்த மனிதன் விபச்சாரம் செய்யக் காரணமாயிருக்கும் அளவுக்கு நீ உடை உடுத்தியிருந்தாய். எனவே அவனுடன் நீ விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாகின்றாய், அவன் உன்னை இச்சையோடு பார்த்தான் என்றால், நீ தான் அதற்கு பொறுப்பு. நீ அந்த விதமாக உன்னை காண்பித்துக் கொண்டாய்.” 67ஏவாளப் போலவே பத்சேபாளும் தவறு செய்தாள். ஏவாளின் தவறில் ஆதாம் சம்பந்தப்பட்டிருந்தான். நாம் எப்பொழுதுமே பெண்களை குறைகூறிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். தேவனுடைய புத்திரரே, மனிதர்களே, நீங்கள் பெண்களைக் காட்டிலும் பெலமான இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். அது உண்மை. நீங்கள் பெண்களைக் காட்டிலும் பெலமானவர்கள். அது உண்மை. எனவே அது போல் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சிறு பெண்ணைக் கொண்டு சென்று, அவளை பலவந்தப்படுத்தி, அவள் வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள். நீங்கள் தேவனுடைய புத்திரராக, அவள் தவறு செய்கிறாள் என்பதை அவளுக்கு உணர்த்துங்கள். தேவனுடைய புத்திரனைப் போல் நில்லுங்கள். அவள் உங்களுடைய சகோதரி, ஆம் ஐயா, நாம் செய்வது என்னவெனில், தேவனுடைய புத்திரர் என்று அழைக்கப்படும் ஸ்தாபன அங்கத்தினராகிய நாம், ஒவ்வொரு பெண்ணையும் வெளியே அழைத்துச் செல்கிறோம். விவாகமான ஒரு மனிதன் ஒரு பெண்ணை கெடுத்துவிட்ட காரணத்தாலும் கூட, அவள் நடத்தை கெட்டவளாக மாறியிருக்கக் கூடும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எனவே பானை கெண்டியை (Kettle) பார்த்து, அது கறுப்பாயுள்ளது என்று கூற முடியாது. எனவே ஞாபகம் கொள்ளுங்கள், பாவம் தான் இவையனைத்தையும் செய்கிறது. நாம் அனைவருமே மரணத்துக்கு கீழ்ப்படுத்தப்பட்டு, அதன் காரணமாக மரிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 68தாவீது அந்த பொல்லாத செயலைப் புரிந்தபோது, அவனுடைய நியாயத்தீர்ப்பே அவனைக் கொன்றிருக்க வேண்டும். தீர்க்கதரிசி அவனிடம் வந்தபோது, அது மறைந்திருக்கிறது என்று அவன் எண்ணினான். தீர்க்கதரிசி அவன் முன்னால் நின்று, “தாவீதே, எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கிறதா?” என்று கேட்டான். தாவீது, “எல்லாமே நன்றாய் நடக்கிறது” என்று விடையளித்தான் . தாவீது நீண்ட அங்கியும் பெரிய கிரீடமும் அணிந்திருந்தான். அங்கு அவனுடைய சிறந்த தளபதியான யோவாப் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் சத்துருக்கள் அனைவரையும் எல்லைக்குள் புகாதபடிக்கு அப்பால் வைத்திருந்தான். எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருந்தது, பத்சேபாள் தாவீதின் மூலம் கர்ப்பவதியானாள். அவன் உரியாவை போர்க்களத்துக்கு அனுப்பி, யோவாபை அவன் பக்கத்தில் நிறுத்தி, பின்பு யோவாப் அவனிடமிருந்து விலகும்படி செய்தான். உரியா பட்டயத்தைக் கையில் ஏந்தினவனாய், கேடயத்தில் இரத்தம் படிந்து, சூரிய அஸ்தமனத்தின்போது மரித்துப் போனான். அவன் யூத மார்க்கத்தை தழுவினவனாய், இஸ்ரவேலருக்காக நின்று சண்டையிட்டான். யோவாப் திரும்பி வந்து உரியா மரித்து போனான் என்று சொன்னபோது, தாவீது, “எல்லாமே நல்ல விதமாக முடிந்துவிட்டது. அவனுடைய மனைவியை நான் எடுத்துக் கொண்டேன். எல்லாமே சரியாகிவிடும். அவன் மூலம் எனக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது” என்று எண்ணினான், ஆனால் குழந்தை வியாதிப்பட்டது. அது மரிக்கத் தொடங்கினது. உயிரைக் காப்பாற்ற தாவீது தன்னால் இயன்ற அனைத்தும் செய்தான். ஒருக்கால் எல்லா மருத்துவர்களும் வந்திருப்பார்கள். ஆனால் பயனில்லை. முடிவில் அந்த குழந்தை மரித்துப் போனது. குழந்தை மரித்த விஷயத்தை அவர்கள் தாவீதினிடம் கூறப் பயந்தனர். எல்லாமே மறைந்திருந்ததாக தாவீது எண்ணியிருந்தான். அவன் பத்சேபாளை ஆறுதல்படுத்தினான். அவனுக்கு இத்தனை மனைவிகள் இருந்தபோதிலும் கூட, பத்சேபாளையும் தன் மனைவியாக சேர்த்துக் கொண்டான். 69அந்த வழுக்கை தலை கிழவன் நாத்தான் தீர்க்கதரிசி வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்து, “தாவீதே, எல்லாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டான். “அருமை! அருமை! தேவனுடைய வயோதிப தீர்க்கதரிசியே, நீவிர் நீடுழி வாழ்க! அல்லேலூயா” என்று தாவீது கூறினான். ஓ, அவன்…. எல்லாமே நன்றாயிருக்கிறது என்று அவன் எண்ணினான். அவன் அதை மறைத்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் தேவனிடத்திலிருந்து நீங்கள் ஒன்றையும் மறைக்க முடியாது! நீங்கள் இப்பொழுது மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் அறிவார். உங்கள் சிந்தனைகளை அவர் அறிவார். ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். இன்று காலை இக்கட்டிடத்திலுள்ள பரிசுத்த ஆவியானவருக்கு, நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் யாரென்றும் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும் தெரியும். ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 70தேவன் அதை அந்த தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தினர். அவன், “தாவீதே, சாலையின் இந்தப் பக்கத்தில் ஒரு ஐசுவரியவான் வாழ்ந்து வந்தான், அவனுக்கு ஆடுகள் வெகு திரளாயிருந்தன. அவன் மிகுந்த ஐசுவரியம் படைத்தவனாக இருந்தான். சாலையின் மறுபுறத்தில் ஒரு தரித்திரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டி மாத்திரமே இருந்தது. அவனுடைய குமாரத்தியைப் போல் அவன் அதை செல்லமாக வளர்த்தான். அவன் சாப்பிட்ட அதே கரண்டியினால் அதற்கு ஊட்டினான். அவன் அந்த ஆட்டுக் குட்டியுடன் படுத்து உறங்கினான். எல்லாமே…. அது அவனுடைய குமாரத்தியைப் போல் வளர்ந்து வந்தது. ஒரு நாள் வழிப்போக்கன் ஒருவன் ஐசுவரியவானிடத்தில் வந்தான். அந்த வழிப்போக்கனுக்கு சமையல் செய்ய தன்னுடைய ஆடுகளில் ஒன்றைப்பிடிக்க அந்த ஐசுவரியவானுக்கு மனதில்லை. எனவே அவன் மறுபுறம் சென்று அந்த தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை பலவந்தமாய்கொண்டு வந்து, அதைக் கொன்று, விருந்து பண்ணினான்” என்றான். 71அது தாவீதின் மாம்ச இச்சை. அவனுக்கு ஐந்நூறு மனைவிகள் இருந்தனர். ஆயினும் அவன் உரியாவின் மனைவியைக் கண்ட போது, தன் மாம்ச இச்சையைத் தீர்த்துக்கொள்ள தன் ஐந்நூறு மனைவிகளில் ஒருவளிடம் பிரவேசிக்க அவனுக்கு மனதில்லாமல், வேருறொரு மனிதனுடைய மனைவியிடம் பிரவேசித்து, அவள் கர்ப்பவதியானாள் என்று கண்டபோது, உரியாவைக் கொன்று போட்டான். தான் செய்தது இன்னதென்று தாவீது அறிந்திருக்கவில்லை. எனவே தாவீது தீர்ப்புக் கூற ஆயத்தமாயிருந்தான். நாமும் அந்நிலையில் தான் உள்ளோம். நாம் எப்பொழுதுமே மற்றவனைக் குறித்து தீர்ப்பு கூறுகின்றோம். ஆனால் அது நமக்கென்று வரும் போது, ஓ, அது வித்தியாசமாகிவிடுகின்றது. “இதைச் செய்தவன் மரணத்துக்குப் பாத்திரன்” என்றான் தாவீது. அந்த வயோதிப தீர்க்கதரிசியினுடைய கண்கள் குறுகின. அவன், “தாவீதே, நீ நிச்சயமாக சாகமாட்டாய்” என்றான். கிருபை உடனடியாக வேகமாக கிரியை செய்வதைக் கவனியுங்கள். தீர்க்கதரிசியின் மீது ஆவியானவர் இறங்கி, தாவீதின் ஜீவனைக் காப்பாற்றினார். கிருபை. “நிச்சயமாக நீ சாகமாட்டாய். ஆனால் உன் இருதயம் சுத்திகரிக்கப்படும் வரைக்கும் பட்டயம் உன் வீட்டை விட்டு நீங்குவதில்லை. ஏனெனில் நீயே அந்த ஐசுவரியவான். ”ஓ, அது அப்பொழுது வித்தியாசமாக இருந்தது. இல்லயா?“ தாவீதின் சொந்த தீர்ப்பே, “இந்த மனிதன் சாகவேண்டும், அவன் திரும்பச் செலுத்த வேண்டும், அவன் தன் உயிரையே அதற்கு பதிலாக செலுத்த வேண்டும்” என்று கூறினபோது, தாவீதைக் காத்தது எது? தீர்க்கதரிசி, “நிச்சயமாக (கிருபை) நீ சாகமாட்டாய். தாவீதே, நீ சாகவே மாட்டாய். கிருபை உன்னைக் காத்தது” என்றான், தாவீதுக்கு உண்டான கிருபையே அவனைக் காத்தது. ஓ, என்னே! கிருபை இல்லாமல் போயிருந்தால், நாமெல்லாரும் எங்கே இருந்திருப்போம்? அது சரியா? நிச்சயமாக, 72இராஜாதிபத்திய கிருபை (sovereign grace) இராஜாதி பத்தியம் கொண்ட ஒருவரிடமிருந்து வருகிறது, இராஜாதிபத்திய கிருபை (sovereign grace) இராஜாதி பத்தியம் கொண்ட ஒருவரிடமிருந்து வருகிறது, இராஜாதிபத்தியம் என்ன செய்யும்? அது என்ன வேண்டுமானாலும் செய்யும். இதை இப்பொழுது கவனியுங்கள். இராஜாதிபத்தியம் கொண்டவர் மாத்திரமே இராஜாதிபத்திய கிருபையை அளிக்கக்கூடும். தேவன் இராஜாதிபத்தியமுள்ளவர், எனவே அவரால் இராஜாதிபத்திய கிருபையை அளிக்க முடியும். கிருபை இராஜாதிபத்தியமுள்ளதாய் இருக்கிறபடியால், அது யாரையும் கேட்கவேண்டிய அவசியமில்லை. அது தன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யும். அது அற்புதமானதல்லவா? அது, “நான் இதை செய்யலாமா, இதை செய்யட்டுமா? நான் செய்யலாமா, நான் செய்ய வேண்டுமா?” என்றெல்லாம் கேட்கவேண்டிய அவசியமில்லை. அது அப்படி செய்வதில்லை. அது தன் விருப்பப்படி செய்கிறது. கிருபை இராஜாதிபத்தியமுள்ளது. எனவே அவர் மிகவும் கேடு கெட்டவனையும், மிகவும் மோசமானவனையும், மிகவும் நன்னடத்தை கெட்டவனையும் இரட்சிக்க முடியும். அவர் மிகவும் வியாதிப்பட்டவனையும் சுகமாக்க முடியும். அல்லேலூயா! 73என்னைப் போன்ற ஈனனை அவரால் இரட்சிக்க முடியும். அவர் அப்படி செய்தார். அது என்ன? கிருபை! வில்லியம் பிரன்ஹாம், ஒரு குடிகாரனின் மகன். அதனால் ஒன்றுமில்லை. தேவனுடைய கிருபை என்னை இரட்சித்தது. “நான் கெட்ட ஸ்திரீயின் மகள்”அதனால் ஒன்றுமில்லை. தேவனுடைய கிருபை உன்னை இரட்சித்தது. அது இராஜாதிபத்தியமுள்ளது. அது யாரையும் ஒன்றும் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆமென்! அதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அல்லேலூயா! அது மிகுந்த கேடுகெட்ட பாவியையும் எடுத்து அவனை உறைந்த மழையைப்போல் வெண்மையாக்க முடியும். அது யாரையும் கேட்கவேண்டிய அவசியமில்லை. ஓ, அது இராஜாதிபத்தியமுள்ளது. கவனியுங்கள், வேகமாக பார்ப்போம். இப்பொழுது சீக்கிரமாக கவனியுங்கள், அது சிலுவையில் நிரூபிக்கப்பட்டது. அங்கு மிகவும் கேடு கெட்ட ஒரு கள்ளன் தொங்கிக் கொண்டிருந்தான். அவன் மரிக்கத் தகுதி வாய்ந்தவன். அவனுடைய சிந்தையில் தேவன் இருக்கவேயில்லை. அவன் அதைக் குறித்து ஒன்றுமே நினைத்தது கிடையாது. ஆனால் சிலுவையிலிருந்து, அவனுடைய முனகுகளுக்கிடையே, இரத்தம் தோய்ந்த அவனுடைய உதடுகளிலிருந்து, “ஆண்டவரே, என் மேல் கிருபையாயிரும்” என்னும் சத்தம் எழுந்தது. அப்பொழுது வேறொரு சத்தம் இரத்தம், கண்ணீர், வேதனை இவைகளுக்கிடையே எழுந்தது. கிருபை அதை இறுகப்பற்றிக் கொண்டு, “இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்” என்றது. கிருபை அவ்வாறு செய்தது. அந்த கள்ளன் எப்படி தனக்குத்தானே உதவி செய்து கொண்டிருக்க முடியும்? ஆதாம் எப்படி தனக்கு தானே உதவி செய்து கொள்ள முடியாமலிருந்ததோ, எப்படி ஏவாள் தனக்குத்தானே உதவி செய்ய முடியாத நிலையிலிருந்தாளோ, எப்படி நான் எனக்கு உதவிசெய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளேனோ, நமது காலணிகளை அணிந்து எப்படி நாம் ஆகாய விரிவில் நடந்து செல்ல இயலாதோ, அதே நிலையில் தான் அந்த கள்ளனும் இருந்தான். நம்மால் அப்படி செய்ய முடியாது. ஆனால் தேவனுடைய கிருபை அதைக் குறித்து ஏதாவதொன்றை செய்ய முடியும். அது செய்கின்றது! தேவனுடைய இராஜாதிபத்திய கிருபை மரித்துக் கொண்டிருந்த அந்த கள்ளனிடம் வந்து, ''இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்“ என்றது, ஓ அதை சிந்தித்து பாருங்கள்! அது அற்புதமானது. 74அதை சிந்தித்துப் பாருங்கள். அன்பும் கிருபையும் இரட்டை சகோதரிகள். அன்பைப் பெறாமல் நீங்கள் கிருபையைப் பெற முடியாது. அவை இரட்டை சகோதரிகள். முற்றிலும் உண்மை. நீங்கள் கிருபையைப் பெறுவதற்கு முன், அன்பைப் பெற வேண்டும். நீங்கள் ஒருவருக்கு தயை காண்பிப்பதற்கு முன், அவரிடம் அன்பு பாராட்டுகின்றீர்கள். அது சரியோ தவறோ, நீங்கள் எப்படியாயினும் அவரில் அன்பு கூர வேண்டும். இல்லையென்றால் உங்களால் தயை காண்பிக்க முடியாது. பாருங்கள்? எனவே, அன்பும் கிருபையும் ஒன்றே, அவை இரட்டை சகோதரிகள். அவ்வளவு தான் - அன்பும் கிருபையும். அவை, நாம்... ஒன்றில்லாமல் மற்றதை நாம் காண முடியாது “தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்து, தம்முடைய ஒரே பேறான குமாரனைத் தந்தருளினார். அவர் தமது கிருபையை ஊற்றி பரிசுத்த ஆவியின் மூலம் அதை நமது இருதயங்களில் கொண்டு வந்தார். பாருங்கள்? ஒன்று மற்றொன்றுடன் கிரியை செய்யாவிட்டால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது, கிருபை, தேவனுடைய கிருபையே நம்மை இரட்சிக்கிறது. 75மரித்துக் கொண்டிருந்த கள்ளனிடம் அந்த கிருபை வந்ததென்று நாம் பார்க்கிறோம், அது கவிஞர்களை ஊக்கம் பெறச் செய்ததில் வியப்பொன்றுமில்லை. ஒரு கவிஞன் இவ்வாறு கூறியுள்ளான். மரித்துக் கொண்டிருந்த கள்ளன் தன் நாளில் அந்த ஊற்றைக் காண மகிழ்ச்சி கொண்டான் நான் அவனைப் போல் இழிவானவனாயிருப்பினும் அங்கு என் பாவங்களை கழுவிக் கொள்கிறேன். காயங்களிலிருந்து பெருக்கெடுத்து வந்த அந்த நதியை நான் விசுவாசத்தில் கண்டமுதற்கு மீட்கும் அன்பே என் சிந்தனையாயுள்ளது நான் மரிக்கும் வரைக்கும் அது அவ்வாறிருக்கும் பின்பு கண்ணியமான, இனிமையான பாடலினால் இரட்சிக்கும் உமது வல்லமையைப் பாடுவேன் அப்பொழுது இந்த எளிய, மழலைச் சொல் பேசும் திக்குவாய் நாவு அமைதியாக கல்லறையில் படுத்துறங்கும். கிருபை, ஆச்சரியமான கிருபை! அல்லேலூயா! ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார். ஓ, தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐசுவரியமும் தூய்மையுமானது எவ்வளவு ஆழம் காண இயலாதது, பெலமானது! பரிசுத்தவான்களும் தேவதூதர்களும் அதை எக்காலத்தும் பாடிக் கொண்டிருப்பர். நாம் கடலை மையினால் நிறைத்து வானத்தை தோல் காகிதமாக உபயோகித்து பூமியிலுள்ள ஒவ்வொரு தண்டையும் இறகாக உபயோகித்து ஒவ்வொரு மனிதனையும் எழுதும் தொழிலில் அமர்த்தினால் தேவனுடைய அன்பை எழுதுவதென்பது கடலை உலரச் செய்து விடும். வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை படர்ந்துள்ள தோல் சுருள் தேவனுடைய அன்பு அனைத்தையும் கொள்ளுமா. 76அது தான் அது. கிருபை, தேவனுடைய கிருபை. தேவனுடைய அன்பு ஒரு நிழலை கொண்டு வந்துள்ளது…. தேவன் நம் மேல் கொண்டுள்ள அன்பின் மூலம் நமது வாழ்க்கையில் கிருபையைக் கொணர்ந்தார். கிருபை, ஒன்றை செய்ய முடியாது. கிருபையை வாங்க முடியாது, அதை விற்கவும் முடியாது. அது கிருபை! அது இராஜாதிபத்தியம் கொண்டுள்ள ஒருவர் அளித்தது. ஆம், ஐயா. அதை நீங்கள் பேரம் பேசமுடியாது. நீங்கள் ''தேவனே. நீர் இன்னின்னதை செய்வீரானால், நான் இன்னின்னதை செய்வேன்'' என்று கூற முடியாது. அப்படி நீங்கள் செய்ய முடியாது. தேவன் அப்படி செய்யமாட்டார். நீங்கள் தேவனிடமிருந்து எதையும் பறித்துக்கொள்ள முடியாது. தேவன் தமது கிருபையினால் அதை உங்களுக்குத் தருகிறார். ஓ, ஓ, ஓ, என்னே ! “விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்”, அது உண்மை. 77ஜனங்கள் முகங்குப்புறபடுத்து கிடக்கின்றனர். ஒரு மனிதன் என்னிடம் வந்து... இன்று இந்த கட்டிடத்தின் பின் பாகத்தில் ஒரு பையனைக் கண்டேன் என்று நினைக்கிறேன். ஒரு மெதோடிஸ்டு பையன் உள்ளே வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டான்... அந்த பையன்கள் என்னிடம் வந்து, ''சகோ. பிரன்ஹாமே, நாங்கள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதனால், வரங்களை நாடலாமா?'' என்று கேட்டனர். நான், “அப்படி செய்யாதீர்கள், அப்படி செய்யாதீர்கள்'' என்றேன். தேவன் இராஜாதிபத்தியத்தின்படி தமது வரங்களை தமது விருப்பப்படி அளிக்கிறார். வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலின்றி அளிக்கப்படுகின்றன. முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், நீங்கள் ஒன்றை நாடிச் சென்று, “தேவனே, என்னை ஒரு போதகராக்கும், இதை எனக்குச் செய்யும்” என்று கூறுவீர்களானால், நீங்கள் என்னவாயிருப்பீர்கள்? ஒரு பெரிய ஆளாக. அவ்வளவுதான். நீங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வேதசாஸ்திரம் பயிலச் சென்று, ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்து கொண்டு, அங்கேயே ஒரு தூணைப் போல் ஸ்தம்பித்து நின்று, கெட்டுப் போவீர்கள். தேவன் உங்களை அழைக்கட்டும். தேவன் உங்களை அழைப்பார், தேவன் உங்களை பரிசுத்தப்படுத்துவார், உங்களுக்கு என்ன தேவையென்று தேவன் எண்ணுகிறாரோ, அதை உங்களுக்குத் தந்தருளுவார், ஆம், ஐயா, 78நீங்கள் கிருபைக்காக பேரம் பேச முடியாது. இல்லை, ஐயா, அதை விற்கமுடியாது, அதை பேரம் பேசவும் முடியாது. அதை வாங்கவும் முடியாது, அதை வியாபாரமாக்க முடியாது. நீங்கள், “ஆண்டவரே, நீர் இதை எனக்குச் செய்வீரானால், நான் போய் இந்த பெரிய பாப்டிஸ்டு சபையை சேர்ந்து கொள்வேன், அல்லது இந்த பெரிய மெதோடிஸ்டு சபையை அல்லது இந்த பெரிய பெந்தெகொஸ்தே சபையை, அல்லது இந்த பெரிய நசரின் சபையை சேர்ந்து கொள்வேன்” என்று கூற முடியாது. அதை பேரம் பேச முடியாது. இல்லை, ஐயா, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா ஒருவனை முதலில் அழைத்தாலொழிய, அவன் என்னிடத்தில் வரமாட்டான்”. நீங்கள் அந்த பெரிய சபையின் அங்கத்தினராகிவிடுவீர்கள். அவ்வளவுதான். நீங்கள் இரட்சிக்கப்பட மாட்டீர்கள். கிருபை உங்களை இரட்சிக்க வேண்டும். 79நமது தாலந்துகள் அதை சார்ந்ததல்ல. நாம் பெற்றுள்ள தாலந்துகளின் மூலம் கிருபையை சம்பாதிக்க முடியாது. தேவன் என்னை ஒரு போதகராக அமர்த்தியிருந்தால், அவருடைய கிருபை என்னோடுள்ளது என்பதை அது காண்பிப்பதில்லை, இல்லை, இல்லை, அவருடைய கிருபை மாத்திரமே என்னை இரட்சித்தது. நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறேன் என்பதனால் நான் இரட்சிக்கப்படவில்லை. ஓ, இல்லை, நீங்கள் பிரசங்கிப்பதனால் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் அந்நியபாஷை பேசுவதினால் இரட்சிக்கப்படவில்லை. இவை எவைகளையும் நீங்கள் செய்வதனால் இரட்சிக்கப்படவில்லை. 1 கொரிந்தியர் 13 அதை நிரூபிக்கிறது. ''நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், சகல இரகசியங்களையும் அறிந்தாலும் (போதகராக), மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை“ அன்பு என்பது கிருபை, தேவனுடைய கிருபையே அனைத்தையும் செய்கின்றது. 80உங்களில் சிலருக்கு ராக் அண்டு ரோல் பாடகர்களுக்கிருப்பது போல, தாலந்துகள் உள்ளன. அது எனக்கு குமட்டல் உண்டாக்குகிறது - ஆவிக்குரிய குமட்டல். இதை கூற விரும்புகிறேன். ராக் அண்டு ரோல் பாடகர்கள் சனிக்கிழமை இரவு முழுவதும் ராக் அண்டு ரோல் பாடல்களைப் பாடி நடனமாடி விட்டு, அடுத்த நாள் காலையில் சபையோருக்கு முன்பாக பக்தியுள்ளவர்கள் போன்ற முகங்கொண்டவர்களாய், ஏதோ ஒரு கிறிஸ்தவ பாடலைப் பாடி விட்டு, அவர்கள் பரலோகத்துக்கு செல்லப் போவதாக எண்ணியுள்ளனர். நான் அநேக பெயர்களைக் குறிப்பிடலாம். ஆனால் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை, இந்த ஒலி நாடா எல்லாவிடங்களுக்கும் செல்கின்றது. உங்கள் எல்லோருக்கும் தெரியும். அண்மையில் ஹாலிவுட்டிலுள்ள ஒரு பையன், அவன் ''மார்க்கம்“ அதற்கு எதிராயுள்ளது என்னும் காரணத்தால் ஒரு பெண்ணை முத்தமிட மறுத்துவிட்டான். அது அவனுடைய மார்க்கத்துக்கு விரோதம் என்பதற்காக. ஆனால் அதே சமயத்தில் அவன் அவமானமாய் தோன்றும் ராக் அண்டு ரோல் திரைப் படங்களை எடுக்கிறான். யூதாஸே, உன் முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு சென்று, தேவனுடைய கிருபைக்கு பாத்திரவானாகிவிடலாமென்று நினைக்கிறாயா? அது நரகத்தில் உனக்கு ஒரு இடத்தை வாங்கித் தருமேயன்றி வேறொன்றும் செய்யாது. 81தேவனுடைய கிருபையை நாம் பேரம் பேச முடியாது... தாலந்துகளைக் கொண்டும் வாங்க முடியாது. அது இராஜாதிபத்திய கிருபை! “என் கரங்களில் நான் ஒன்றும் கொண்டு வரவில்லை, உம் சிலுவையை மாத்திரமே நான் கட்டித்தழுவிக் கொண்டிருக்கிறேன்” நிர்வாணமாக, காயப்பட்டவனாக, நான் இருக்கும் நிலையிலே வருகின்றேன். நான் இருக்கும் நிலையிலே, எந்த சாக்கு போக்குமின்றி வருகிறேன். ஏனெனில் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது. உம்மிடம் வரும்படியாக நீர் என்னை அழைக்கிறீர் ஓ, தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன். அவ்வளவுதான், கிருபை தான் என்னைக் கொண்டு வந்தது. கிருபை அதை செய்தது. வேறொரு காரியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன், சில நேரங்களில் கிருபை... 82இந்த பெரிய சபைகள், நீங்கள் அங்கு செல்ல வேண்டுமென்று நினைக்கின்றன. அவர்கள், “நகரத்திலேயே மிகப்பெரிய ஆலயத்தை நாங்கள் கட்டியிருக்கிறோம். பெண்கள் உதவி சங்கம் ஒன்றை அமைத்து, ஏழைகளுக்கு துணிகளை வழங்குகிறோம். அவைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். நாங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கின்றோம். இவையனைத்தும் செய்கின்றோம்'' என்கின்றனர். பவுல், ''நானும் கூட அவைகளைச் செய்யலாம், ஆனால் அவை ஒன்றுமில்லை'' என்கின்றான். அவர்கள், ''நாங்கள் பழமையான ஸ்தாபனம். நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறோம். எங்கள் ஸ்தாபனம் ஐந்நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஜான் வெஸ்லி, அலெக்ஸாண்டர் காம்ப்பெல் போன்ற மகத்தான ஸ்தாபனகர்கள் எங்கள் சபையை ஸ்தாபித்தனர். அல்லேலூயா!“ என்கின்றனர். சரி, இயேசு கிறிஸ்து இந்த சபையை நிறுவி, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையளித்து, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், அவர்கள் பெந்தெகொஸ்தே வரைக்கும் சென்று அங்கு காத்திருக்க வேண்டுமென்று கட்டளையிட்டார். 83நீங்கள் பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்து, அதே சமயத்தில் இழந்து போன நிலையில் இருக்கக்கூடும். பெந்தெகொஸ்தே சபை மற்ற சபைகளைப் போல் ஆகிவிட்டது. உண்மை என்னவெனில், ஒரே ஒரு சபை மாத்திரமே உள்ளது. நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் அதில் பிறக்கின்றீர்கள். ''ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறீர்கள்“ 1 கொரிந்தியர் 12:13. அது உண்மை, 1 கொரிந்தியர், 12- நாம் அந்த சபைக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். 84ஆனால் ஜனங்களோ தங்கள் தகுதியினால் அதை பெறலாமென்று எண்ணுகின்றனர். “நான் பள்ளிக்குச் சென்று இதை செய்ய கற்றுக்கொண்டேன். நான் வேதசாஸ்திர கல்லூரிக்குச் சென்று அதை செய்துள்ளேன்” என்கின்றனர். அதனால் ஒன்றுமில்லை. தேவனுடைய கிருபையை நீங்கள் விலைக்கு வாங்க முடியாது. தேவனுடைய கிருபை இவ்வாறு உள்ளது. முடிக்கும் தருணத்தில் ஒரு கதையைக் கூற விரும்புகிறேன். ஒரு காலத்தில் ஒரு பெரிய ராஜா இருந்தான். அந்த பெரிய ராஜாவுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். ஒரு நாள் ஒரு கொலைகாரன் அவன் மகனைக் கொன்று போட்டான். அந்த கொலையாளியைக் கண்டு பிடிக்க ஆட்கள் தேசம் பூராவும் தேடி அலைந்து, முடிவில் அவனைக் கண்டு பிடித்தனர். அவனைக் கொண்டு வந்து சிறையிலடைத்தனர். அவன் மேல் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பு கூறப்பட்டது. அவன் பயங்கரமான செயலைப் புரிந்தான். அவன் ராஜாவின் மகனைக் கொன்று போட்டான். எனவே அவனுக்கு என்ன நேரிடப் போகிறதென்பதை அறிந்திருந்தான். 85அவர்கள் அவனை உட்சிறையில் அடைத்து, கதவுகளை பாதுகாப்பாக அடைத்து, காவல்காரர்களை சுற்றிலும் நிறுத்தினர். அவன் ராஜாவின் மகனைக் கொன்றதால், அவனுக்கு எவ்வளவு பயங்கரமான தண்டனை விதிக்கப்படுமென்று நாமறிவோம். சிறைக் கதவுகளைச் சுற்றிலும் காவல்காரர் நிறுத்தப்பட்டனர். அவனை சிறையின் உள் அறையில் வைத்து பூட்டினர், அவனுடைய உடைகளைக் கழற்றினர். அவனுடைய அரைக் கச்சையைத் தவிர வேறொன்றும் உடுத்தியிருக்கவில்லை, அவன் அந்த நிலையில் உட்கார்ந்துகொண்டு, பசியால் வாடினான். உண்ண அவர்கள் அவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. அவன் அந்நிலையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வழக்குக்காக அவர்கள் அவனைக் கொண்டு வந்தனர். அவன் குற்றவாளியென்று நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. அவனுடைய உயிர் அவனை விட்டுப் போகும் வரைக்கும்அவன் சிறிது சிறிதாக கொல்லப்பட வேண்டுமென்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அவன் அழுது கெஞ்சினான். அவன், “நான் குற்றவாளியாயிருந்தாலும், நான் புரிந்த செயலுக்காக வருந்துகிறேன். அதை செய்யாமலிருந்திருந்தால் நலமாயிருக்கும். அதற்காக நான் வருந்துகிறேன், கோபம் மேலிட்ட போது, ஒரு நொடிப் பொழுதில் அதை செய்துவிட்டேன். அப்படி செய்ய வேண்டுமென்று நான் நினைக்கவில்லை” என்றான். 86ஒரு நாள் ராஜா அந்த பையனைக் காணவும், அவனிடம் பேசவும், அவனுடைய சொந்த மகனை, அவனுடைய ஒரே மகனை அவன் கொன்றதைக் குறித்து அவனிடம் பேசவும் அந்த இடத்திற்கு சென்றான். அவன் அந்த பையனைக் கொன்றான். ராஜா, “நான் சென்று அவனுடன் பேசப் போகின்றேன்” என்றான். அவன் அங்கு சென்றபோது, மிருகம் கூட்டில் அடைக்கப்பட்டது போல அந்த பையன் அடைப்பட்டிருந்ததைக் கண்டான். அவனுடைய மெலிந்த சரீரம் ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருப்பதை அவன் கண்டான். அவனுடைய முகத்தில் குழி விழுந்திருந்தது, அவனுடைய தாடை எலும்புகள் உள்ளே சென்றிருந்தன, அவனுடைய கண்கள் குழி விழுந்திருந்தன. அவனுடைய வாய் வெளுத்திருந்தது. அவனுக்குக் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தாகமாயிருந்தான். அவன் முகங்குப்புற விழுந்து அழுது கொண்டிருந்தான். ராஜா அவனை நோக்கி, “எழுந்து நில்” என்றான். அவன் அவனுக்கருகாமையில் சென்று அவனை உற்று நோக்கினான், அவன், ''நீ ஏன் என் மகனைக் கொன்றாய்? அவன் உனக்கு என்ன செய்தான்? அவனை நீ ஈட்டியால் குத்திக் கொன்றாயே, அப்படிப்பட்ட மரணம் எய்வதற்கு தகுதியாயிருக்க அவன் என்னசெய்தான்?“ என்று கேட்டான். அவன், “என் ஆண்டவரே, அவன் ஒன்றும் செய்யவில்லை. என்னுடைய அகம்பாவமும் என் சொந்த வழிகளுமே அதற்கு காரணம். அவன் மேல் நான் பொறாமை கொண்டிருந்ததால், நான் கோபங்கொண்டு அவனைக் கொன்றேன். ஐயா, உம்முடைய நீதியின்படி நான் மரிக்க வேண்டுமென்று உணருகிறேன். அப்படி செய்வது எனக்குத் தகுதியானது. நான் அழுது கொண்டிருக்கும் ஒரே காரணம் என்னவெனில், ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை நான் எந்தவித காரணமுமின்றி கொன்று போட்டேனே என்பது தான்” என்றான். 87ராஜா வெளியே நடந்து மேசையினருகே சென்று, ''எல்லா தஸ்தாவேஜுகளையும் நிர்மூலமாக்குங்கள்“ என்றான். உங்களுக்குத் தெரியும், மறதியின் கடலில் போட்டு விடுதல், ”எல்லா தஸ்தாவேஜுகளையும் நிர்மூலமாக்குங்கள். அவனைக் குளிப்பாட்டி இங்கு கொண்டு வாருங்கள், அவனுக்கு ஒரு அங்கியை அனுப்பி வைக்கிறேன்“ என்றான். சற்று கழிந்து, ஒரு பெரிய மோட்டார் வாகனம் வாசல் வரை ஒட்டிக் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது ஒரு கம்பளம் சிறை வரைக்கும் விரிக்கப்பட்டது. ராஜா மோட்டார் வாகனத்தின் அருகே நின்று கொண்டு, “என் மகனே, வா. அரண்மனைக்கு என்னுடன் காரில் சவாரி செய்து வா” என்றான். அவன் ராஜாவின் அங்கியை அவனுக்கு உடுத்தினான், அவன், “இன்று முதல் நீ என் மகன்” என்றான். அவன் மேல் அவனுக்கு அனுதாபம் ஏற்பட்டது. அதுதான் கிருபை, அதுதான் நான், அது தான் நீங்கள். நாம் நம்முடைய பாவங்களினால் தேவனுடைய குமாரனைக் கொன்றோம். நாம் அந்நியரும், அசுத்தமுள்ளவர்களாக உலகம் என்னும் சிறையில் படுத்துக்கிடந்தோம். தேவன் தமது சொந்த குமாரனின் இரத்தத்தினால் நம்மைக் கழுவி, சுத்திகரித்து, பரிசுத்த ஆவி என்னும் அங்கியை நமக்கு அணிவித்தார். என்றாவது ஒரு நாள் தேவனுடைய மகத்தான ரதம் நம்முடைய வாசலில் வந்து நிற்கும். நாம் வீடு சென்று அவருடன் வாழுவோம். எல்லா தஸ்தாவேஜுகளும் நிர்மூலமாக்கப்பட்டன, நாம் இனிமேல் நியாயந்தீர்க்கப்பட முடியாது. அவை சுட்டெரிக்கப்பட்டுவிட்டன. அவைகளை அவர் மறதி என்னும் கடலில் போட்டுவிட்டு அவைகளை இனி ஒருக்காலும் நினையாமல் இருக்கிறார். ஆச்சரியமானகிருபை! எவ்வளவு இனிமையானது என்னைப்போன்றஈனனை இரட்சித்தது ஒருகாலத்தில் காணாமற் போனேன், இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டேன் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன் என் இருதயம் பயப்பட கிருபை கற்பித்தது கிருபை என் பயங்களைப் போக்கியது நான் முதலில் விசுவாசித்த அந்நேரத்தில் கிருபை எவ்வளவு விலையுயர்ந்ததாக காணப்பட்டது. 88பாவியான நண்பனே, இது உன் நேரமாயிருக்க நீ அனுமதிக்க மாட்டாயா? ஜெபத்திற்காக நமது தலைகளை நாம் சற்று நேரம் வணங்கப்போகும் இந்நேரத்தில், இதுவே நீங்கள் முதலில் விசுவாசித்த நேரமாக இருப்பதாக. உங்கள் இருதயத்தில் தீர்மானம் செய்து, ''தேவனாகிய கர்த்தாவே, நான் குற்றவாளி. என்னை இரட்சிக்க கிருபை அவசியமென்பதை உணருகிறேன். என்னை நான் இரட்சித்துக் கொள்ள முடியாது. நான் இழந்து போன நிலையில் உள்ளேன். என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. நான் தேவனில்லாமல் முற்றிலும் உதவியற்றவனாய், நம்பிக்கையற்றவனாய் உள்ளேன். நான் கிறிஸ்துவில்லாமல் இந்த உலகத்தில் அன்னியனாக, யாராலும் இரக்கம் காட்டப்படாதவனாக இருக்கிறேன். ஓ, கர்த்தாவே, என் மேல் இரங்கி, இன்று நான் உள்ள பாவம் என்னும் சிறையிலிருந்து என்னை வெளியே கொண்டு வரமாட்டீரா? பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்'' என்று கூறுங்கள். உங்கள் கையையுயர்த்தி, ''தேவனாகிய கர்த்தாவே, உமது கிருபை அவசியமாயுள்ளவன் நானே'' என்று கூறுவீர்களா? உங்கள் கையையுயர்த்தி, ''சகோ. பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள், நான் இப்பொழுது விசுவாசிப்பேன்“ என்று கூறுவீர்களா? பின்னால் உள்ள என் சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 89வேறு யாராகிலும், ''சகோ. பிரன்ஹாமே, இப்பொழுது என்னை ஜெபத்தில் நினைவு கூருங்கள். ஓ, சகோதரனே, தயவு கூர்ந்து நினைவு கூருங்கள்'' என்று சொல்லுங்கள். ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ''ஜெபியுங்கள்...“ சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஜன்னலின் அருகில் உள்ள சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, பின்னால் உள்ள சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள மற்ற சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ”சகோ. பிரன்ஹாமே, என்னை நினைவு கூருங்கள். “ அங்குள்ள சகோதரனை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆம், மற்றவரையும், சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களை இப்பொழுது பார்க்கிறார். அதை நான் உண்மையாக கூறுகிறேன். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அவர் காண்கிறார் என்று அறியுங்கள். சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சுவற்றில் சாய்ந்து கொண்டிருக்கிற ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சுற்றில் சாய்ந்து கொண்டிருக்கும் சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் இருக்கும் நிலையிலே... (வேறு யாராகிலும் உண்டா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன் கையை நான் பின்னால் காண்கிறேன்). ஏனெனில் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது (ஆம், ஆண்டவரே, சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக) உம்மிடம் வரும்படியாக... (சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக)... என்னை அழைக்கிறீர் (பின்னால் உள்ளவரே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக) கிருபை, கிருபை, நான்.. (வாலிபப் பெண்ணே , தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக)... நான் வருகிறேன். நான் இருக்கும் நிலையிலே, என் ஆத்துமாவிலுள்ள ஒரு அந்தகார அழுக்கையும் நீக்க உம்முடைய இரத்தம் ஒவ்வொரு அழுக்கையும் நீக்குவதற்காக ஓ, தேவாட்டுக்குட்டியே... (கிருபை, ஓ, கிருபை) நான் வருகிறேன். 90இப்பொழுது பதினைந்து அல்லது இருபது கைகள் உயர்த்தப்பட்டன. இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கியிருக்கும்போது, உங்களுக்காக நான் ஜெபத்தை ஏறெடுக்கும் போது, கைகளை உயர்த்தின நீங்கள் அமைதியாக எழுந்து நிற்கும்படியாக கேட்டுக் கொள்ளப் போகின்றேன், பீடத்தினருகில் இடமில்லை. கைகளை உயர்த்தின ஒவ்வொருவரும், இப்பொழுது ஜெபம் ஏறெடுக்கப்பட விரும்புகிறவர் அனைவரும் எழுந்து நிற்கவும். நான் ஜெபத்தை ஏறெடுக்கும்போது, எல்லாவிடங்களிலும் நில்லுங்கள். ... எனக்காக சிந்தப்பட்டது உம்மிடம் வரும்படியாக (அது அருமை, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக...) என்ன அழைக்கிறீர் ஓ, தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன். கிருபையே இல்லாத ஒரு நாள் வரக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்குக் கிருபையே பெருகாது, காலதாமதமாகியிருக்கும். இப்பொழுது காலதாமதமாகிவிடவில்லை. 91ஓ, தேவனே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவே, எங்கள் இரட்சகரை மரித்தோரிலிருந்து உயரோடெழுப்பினவரே, இப்பொழுது அவர் உயிரோடிருக்கிறார். நீர் மகிமையில் பிரதானமானவராயிருந்து, கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியை எங்கள் மேல் அனுப்பி, பாவிக்கு பாவ உணர்வைத் தருகிறீர், தேவனே, நின்று கொண்டிருப்பவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அது உண்மை, “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பிதாவுக்கு முன்பாகவும் தேவதூதர் முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன்” என்று நீர் கூறியிருக்கிறீர். நாங்கள் நியாயத்தீர்ப்பு காலையில் நிற்கும்போது, அது எப்படிப்பட்ட நேரமாயிருக்கும் என்பதை அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, இப்பொழுது அவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர், அவர்களுடைய பாவங்கள் அவர்களுக்கு முன்பாக சென்று கொண்டிருக்கின்றன. சிலருக்கு பாவங்கள் அவர்களைத் தொடரும். இந்த ஜனங்கள் இன்று காலை நின்று கொண்டு, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவர்கள் தவறு செய்துள்ளனர் என்றும், நீர் இரட்சகராக அவர்களுக்கு அவசியம் என்பதையும் அறிந்துள்ளனர். இருதயங்களின் கடிவாளங்களை நீர் பிடித்துக்கொள்ளும். அவர்களைக் குறித்து நீர் எல்லாம் அறிந்திருக்கிறீர். 92பிதாவே, அவர்களுடைய வேண்டுகோள்களை அருளவேண்டுமாய் ஜெபிக்கிறேன். அவர்களை இரட்சியும். இன்று காலை தேவனுடைய கிருபையைக் குறித்து அளிக்கப்பட்ட சிறுசெய்திக்கு இவர்கள் விருதுகளாயுள்ளனர். நாங்கள் என்ன செய்த போதிலும், கிருபை குனிந்து எங்களைப் பிடித்துக் கொள்கிறது, கர்த்தாவே, அதை அருளும். இந்த இருதயங்களுக்கு கிருபையை அருள்வீராக. அவர்கள் எப்பொழுதும் இயேசுவை தங்கள் இரட்சகராகக் காண்பார்களாக. அவர்கள் ஒரு செயலைப் புரிந்துள்ளார்கள். அவர்கள் எழுந்து நிற்கும்படிக்கு பரிசுத்த ஆவி அவர்களிடம் கூறினார், அவர்கள் அதைச் செய்தனர். பரிசுத்த ஆவி எழுந்து நிற்கக் கூறினபோது, அவர்கள் பரிசுத்த ஆவிக்குக் கீழ்ப் படிந்தவர்களாய் எழுந்து நின்றனர். இப்பொழுது கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நிறைவேற்றும். ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்“ என்று நீர் கூறியிருக்கிறீர். எனவே, கர்த்தாவே, உமது வேத வாக்கியங்களின் அடிப்படையில்; அவை உம்முடைய சொந்த வார்த்தைகள், கர்த்தாவே, ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று நீர் கூறியுள்ளதாக நாங்கள் யோவான் 5:24ல் வாசிக்கிறோம். ஏன்? ஏனெனில் கிருபையே இதை செய்ததென்று அவன் விசுவாசிக்கிறான். ''நித்திய ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறான். அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் (நியாயத் தீர்ப்புக்கு முன்பு அவன் சென்று விடுவான்) மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். “ஓ, தேவனே, அதற்காக நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! 93அவர்களை வாழ்க்கையில் நீர் காத்துக்கொள்ள வேண்டுமாய் இப்பொழுது ஜெபிக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டு ஞானஸ்நானம் பெற்று, தங்கள் பாவங்கள் நீங்க கழுவப்படுவார்களாக. கர்த்தாவே, அதை அருளும், உம்முடைய ஊழியன் என்னும் முறையில், இவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன், அங்கு பிரத்தியட்சமான மகத்தான கர்த்தருடைய தூதனை விசுவாசித்து, பிதாவே, அந்த வரலாறு உமக்குத் தெரியும், வெள்ளிக்கிழமை காலையன்று, சூரிய உதயத்தின் போது அந்த மகத்தான தூதன் மலையின் உச்சியிலிருந்து எழும்பி வரும் மூன்று வானவில்கள் வடிவில் பிரத்தியட்சமானார். கர்த்தராகிய தேவனே, வானவில்களில் பிரத்தியட்சமான அந்த தேவன் அவருடைய கிருபையினால் இந்த ஜனங்களை இரட்சிப்பாராக. நீர் உம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவீர் என்று எதிர்பார்த்து இவர்களை உமக்களிக்கிறேன். நீர் நிறைவேற்றுவீர். அவர்களுடைய ஆத்துமாவில் கறைதிரை இல்லாதவர்களாய், அந்த மகத்தான நாளில் அவர்களை நான் சந்திப்பேன். அதை அருள்வீராக. இயேசுவின் நாமத்தில் அவர்களை உமக்களிக்கிறேன். ஆமென். 94தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உட்காரும்போது; அவர்களுக்கருகாமையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அவர்களுடன் கைகுலுக்குங்கள். அவர்களிடம் பேசுங்கள், அவர்கள் சபைக்கு வரும்படி அழைப்பு கொடுங்கள். வேறென்ன, அவர்கள்... ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? ஆச்சரியமான கிருபை! எவ்வளவு இனிமையானது என்னைப் போன்ற ஈனனை இரட்சித்தது ஒரு காலத்தில் காணாமற் போனேன், இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டேன் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன் என் இருதயம் பயப்பட கிருபை கற்பித்தது கிருபை என் பயங்களைப் போக்கியது. நான் முதலில் விசுவாசித்த அந்நேரத்தில் கிருபை எவ்வளவு விலையுயர்ந்ததாக காணப்பட்டது! நீங்கள்விசுவாசித்து விட்டீர்களா? அப்படியானால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன் ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன் ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன் ஏனெனில் அவர்முதலில் என்னை நேசித்தார். அங்கு நாம் பத்தாயிரம் ஆண்டுகள் இருந்தபோது வெளிச்சம் சூரியனைப் போல் பிரகாசித்தது தேவனுடைய துதியைப் பாடிட நாம் முதலில் தொடங்கினதைக் காட்டிலும் குறைந்த நாட்கள் நமக்கிருக்கவில்லை (தேவனுக்கு ஸ்தோத்திரம்!) 95அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? நாம் மறுபடியும் அதைப் பாடும் போது, பக்கத்திலுள்ள ஒருவருடன் கைகுலுக்கி, அமைதியாக, ''யாத்திரீகனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக“ என்று கூறுங்கள். அங்கு நாம்... (சகோ. பிரன்ஹாமும் சபையோரும் கைகுலுக்குகின்றனர்- ஆசி)... தேவனுடையதுதியை... நமக்கிருக்கவில்லை, சிலுவையண்டையில், சிலுவையண்டையில் நான் முதலில் வெளிச்சத்தைக் கண்டேன் அப்பொழுது என் இருதயத்திலுள்ள பாரம் உருண்டு போய் விட்டது. அங்கு தான் விசுவாசத்தினால் நான் பார்வையடைந்தேன் இப்பொழுது நாள் முழுவதும் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஓ, சிலுவையண்டையில், சிலுவையண்டையில் நான் முதலில் வெளிச்சத்தைக் கண்டேன் அப்பொழுது என் இருதயத்திலுள்ள பாரம் உருண்டு போய்விட்டது அங்கு தான் விசுவாசத்தினால் நான் பார்வையடைந்தேன். இப்பொழுது நாள் முழுவதும் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள் அல்லவா? இயேசு என்னை விடுவித்ததால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் இயேசு என்னை விடுவித்ததால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் இயேசு என்னை விடுவித்ததால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் மகிமை, அல்லேலூயா பாடுவேன், இயேசு என்னை விடுவித்தார். ஓ, இயேசு என்னை விடுவித்ததால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் இயேசு என்னை விடுவித்ததால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் இயேசு என்னை விடுவித்ததால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் மகிமை, அல்லேலூயா பாடுவேன், இயேசு என்னை விடுவித்தார். 96அவரை நீங்கள் நேசிக்கிறீர்கள் அல்லவா? அவர் அற்புதமானவர் அல்லவா? ஓ, அவர் அற்புதமானவர் என்று நான் நினைக்கிறேன். சற்று யோசித்து பாருங்கள். இந்த வேதாகமம் அவருடைய சத்தியம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று இந்த வேதாகமம் போதிக்கிறது. உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பாரானால்... “இருப்பாரானால்” என்று நான் கூறின தேவதூஷணமான வார்த்தைக்காக தேவன் என்னை மன்னிப்பாராக. அவர் மாறாதவராய் இருக்கிறார். அவர் மாறாதவராயிருப்பாரானால்- நான் இப்படி அதை கூறட்டும்- அவர் எப்படிப்பட்ட நபராக இருப்பார்? அவர் முன்பு எப்படி இருந்தாரோ, அப்படியே இன்றும். 97இன்று காலை அவர் இங்கு இருப்பதற்கும், அன்று கலிலேயாவில் ஜனங்களிடையே அவர் இருந்ததற்கும் ஒரே ஒருவித்தியாசம் உண்டு. அன்று அவர் தமது சொந்த சரீரத்தில் இருந்தார். அவருடைய மனித சரீரத்தில். அது உயிரோடெழுப்பப்பட்டு (அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?), உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராய், நமது அறிக்கைகளுக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார். நாம் அவரை முதலில் ஏற்றுக் கொண்டு அவரை விசுவாசித்து, அவரை அறிக்கை பண்ணாமல், அவரால் நமக்கு ஒன்றையும் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அவர், நாம் அறிக்கை பண்ணுகிற பிரதான ஆசாரியராயிருக்கிறார். 98வேதாகம் வாசகராகிய உங்களில் அநேகர், ''ஒத்துக் கொள்ளுதல்“ (Profess) என்றல்லவா எழுதப்பட்டுள்ளது என்று கூறுவீர்கள். ஒத்துக்கொள்ளுதலும் அறிக்கை பண்ணுதலும் (Confess) ஒரே வார்த்தைதான். பாருங்கள்? ”பிரதான ஆசாரியராக்கப்பட்டார்“ எபிரெயர் 3ம் அதிகாரத்தில், ”நாம் அறிக்கை பண்ணுகிற பிரதான ஆசாரியர்“ என்று எழுதப்பட்டுள்ளது. அவர் அதை செய்து முடித்துவிட்டார் என்று நாம் முதலில் அறிக்கை பண்ணாமல், அவரால் ஒன்றும் செய்ய முடியாது. பாருங்கள், நீங்கள் பீடத்தண்டையில் வந்து, இரவு முழுவதும் ஜெபம் செய்தாலும், அவர் உங்களை மன்னிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கும் வரைக்கும், உங்களுக்கு எந்த நன்மையும் உண்டாகாது. அப்பொழுது நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள். உங்களுக்கிருக்கும் விசுவாசத்தின் அளவின்படி; அங்குதான்...நீங்கள் பாவச் சேற்றில் உழன்று வாழ்ந்து வந்தீர்கள். இரட்சிக்கப்பட்ட வாலிபர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? அப்பொழுது நீங்கள் இங்கு சிறிது உயர்ந்தீர்கள். அதை செய்தது எது? உங்கள் விசுவாசம். ஏனெனில் இப்பொழுது நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று விசுவாசிக்கின்றீர்கள், அதற்கு மேலாக நீங்கள் இப்பொழுது வாழ்வீர்கள், பாருங்கள்? உங்களை இன்னும் சற்று உயர்த்திக்கொள்ள விரும்பினால், இன்னும் அதிகமாக விசுவாசம் கொண்டிருங்கள். ஏனெனில் விசுவாசம் என்பது அளவில்லாதது, இப்படி முன்னேறிக் கொண்டேயிருங்கள். ஓ, கூடாத காரியம் கைகூடிவிடும். விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். அது உண்மை. ''நீங்கள் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து போ என்று சொல்லி, நீங்கள் சொன்ன படியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும்“. 99இயேசு கிறிஸ்து தமது ஜனங்களில் வாசமாயிருக்கிறார். ஒரு காலத்தில் கிறிஸ்து அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தார், அது புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அது யேகோவா தேவன் என்று நாம் விசுவாசிக்கிறோம். அதைத்தான் தூதன் நமக்கு விளக்க முயன்றார். அவர் அப்பொழுது பிதாத்துவத்தில் இருந்தார். அவர் இஸ்ரவேலுக்கு தேசத்துக்கு பிதாவாயிருந்தார். பின்பு அவர் குமாரனாகிய கிறிஸ்துவாக வந்து, தமது ஜனங்களின் மத்தியில் வாசம் பண்ணினார். அது சரியா? கிறிஸ்து தேவனுடைய குமாரன். இப்பொழுது அவர் கிறிஸ்துவாக, பரிசுத்த ஆவியாக இருக்கிறார். அது அபிஷேகம். கிறிஸ்து என்றால், “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள். அவர் ஜனங்களின் மேல் அபிஷேகமாக தங்கியிருக்கிறார். கிறிஸ்து பரிசுத்த ஆவியாக நம்மோடிருக்கிறார். அது நம்மோடிருக்கும் கிறிஸ்து, நமக்குள் இருப்பவர். அதை விசுவாசிக்கிறீர்களா? சிறிது நேரம் மிகவும் பயபக்தியாக, அமைதியாயிருங்கள். அவர் மாறாதவராயிருக்கிறாரா? 100ஜனங்கள் இருக்கைகளுக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பதாக சற்று முன்பு என்னிடம் கூறப்பட்டது. அதைக் குறித்து பின்பு ஒரு சபை ஆராதனையில் பேசுவோம். நான் பில்லியிடம் வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் செய்ய போதிய பேர் இருப்பார்களானால், அவர்களுக்கு ஜெப அட்டைகளை விநியோகிக்கும்படி கூறினேன். அவன் அவ்வாறு செய்வதாகக் கூறினான். அவன் செய்திருப்பானென்று நினைக்கிறேன். 101கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒரு சம்பவத்துக்கு பிறகு, இந்த ஊழியம் என் கையை விட்டு சிறிது போய்விட்ட நிலையை அடைந்துள்ளது. அவர்கள் சிந்தனைகள் பகுத்தறிதலைக் கண்டனர். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் இருந்தபோது செய்த அதேவிதமாக, அது பேசி ஜனங்களிடம் கூறினது. நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது கிரியை செய்வதை காணாதவர் எத்தனை பேர் இங்குள்ளனர்? உங்கள் கைகளையுயர்த்துங்கள் பார்க்கலாம். ஓ! கிரியை செய்வதை பார்த்ததேயில்லை. இங்கு ஒரு கூட்டத்தார் அதை கண்டதில்லை, அவர்கள் அந்நியர்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் எங்கிருந்து வந்துள்ளனர் என்று எனக்குத் தெரியாது. இது எல்லா ஸ்தாபனத்தவருக்கும் உரிய ஒரு கூடாரம். நாங்கள் ஸ்தாபனங்களுக்கு விரோதமில்லை, அதே சமயத்தில் நாங்கள் ஸ்தாபனங்களின் சார்பிலும் இல்லை. அவர்களுடைய வழியில் அவர்கள் செல்லும்படி நாங்கள் விட்டுவிடுகிறோம். நாங்கள் ஜனங்களை... அவர்கள் ஸ்தாபனத்திற்கு திரும்பிச் செல்ல விரும்பினால், பரவாயில்லை- அவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழும் வரைக்கும். இது ஆத்தும இரட்சிப்பு ஸ்தலமே. அது தான் எனக்கு அவர்களிடமுள்ள ஊழியம். 102இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் எபி. 13:8-ல் கூறுகிறது என்று நம்புகிறேன். அதை நீங்களும் நம்புகிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்- ஆசி.) சரி, அவர் மாறாதவராயிருப்பாரானால்... நீங்கள் ஒரு நிமிடம் அமைதியாக உட்கார்ந்திருக்கும்போது, என் இருதயத்திலிருந்து உங்களிடம் பேச விரும்புகிறேன். அதன் பிறகு நாம் சுகமளிக்கும் ஆராதனையை நடத்துவோம். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரானால், அவர் எப்படி... அதை நாம் அறிந்து கொள்ளக்கூடிய ஒரே வழி. அவர் ஆவியாயிருந்தால், அவர் நேற்று நடந்து கொண்டது போலவே இன்றும் நடந்து கொள்வார். அது சரியா? அவர் நேற்று எப்படி நடந்து கொண்டார்? 103அவர் நேற்று எப்படி நடந்து கொண்டார்? அவர் மற்ற மனிதர்களைவிட வித்தியாசமாயிருந்தாரா? அவர் ஒரு மனிதன். அவர் காண்பதற்கு மனிதனைப் போலிருந்தார். அவர் ஒரு மனிதன். அவர் பிறந்தார். அவர் மனிதன். அவருக்கு மாம்சமும் இரத்தமும் இருந்தது. அவர் துன்பப்பட்டார், வலி தாங்காமல் முனகினார். அவர் சோதிக்கப்பட்டார். அவர் ஒரு மனிதன். அது உண்மை, இல்லையா? ஆனால் அவரை தேவனாக்கியது எது? தேவனுடைய ஆவி அவர் மேல் தங்கியிருந்தது. அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா. அவர் அவ்வாறிருந்தார் என்று அவர்கள் எப்படி அறிந்துகொண்டனர்? மோசே, ''உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார். அந்த தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்“ என்றான். அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார். அப்படியானால் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு தீர்க்கதரிசி வருவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்கள் மேசியாவை எதிர்நோக்கியிருந்தால், அப்படி செய்திருக்க வேண்டும். மேசியா தீர்க்கதரிசியாயிருப்பார். 104இதை இன்னும் சிறிது நேரம் சில வினாடிகள் பார்ப்போம். கூர்ந்து கவனியுங்கள். உங்கள் சிந்தையை தேவன் மேல் வைத்திருங்கள். ஏனெனில் தேவன் என்ன செய்யப் போகிறரென்று நமக்குத் தெரியாது. நான் என்ன செய்ய வேண்டுமென்று அவர் என்னிடம் கூறுவாரென்று நமக்குத் தெரியாது. சபையில் நமக்கு தீர்க்கதரிசனவரம் உள்ளதென்று நாமறிவோம். நமது சகோதரன். நெவில் ஜனங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார். அது அருமையானது. அதை நாம் பாராட்டுகிறோம். அதை நாம் குறிப்பிட்டு வந்திருக்கிறோம். அந்நிய பாஷை பேசுபவர் சிலர் நம்மிடையே உள்ளனர், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள ஜனங்கள் அந்நிய பாஷை பேசவேண்டும் என்று நாங்கள் நம்புவது கிடையாது. அப்படிப்பட்ட வேத வாக்கியம் எதுவுமில்லை. ஆனால் அந்நிய பாஷை பேசும் பரிசுத்த ஆவியின் வரம் ஒன்றுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். அது எங்கள் சபையில் உள்ளது. ஆனால் நாங்கள் அவர்களை... நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்வதில்லை, அது தேவனுடைய சத்தம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பரிசுத்த ஆவி பேசும்போது நாங்கள் பேசுகிறோம். அதை மூன்று முறை மாத்திரமே நாங்கள் அனுமதிக்கிறோம். அது... நான் பிரசங்கம் செய்யும் போது அது வரக்கூடாது. அப்படி வருவது ஒழுங்கல்ல. ஏனெனில் தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. பாருங்கள்? அது வேதப்பிரகாரமாக சரியாயிருக்க வேண்டும். அந்நிய பாஷைபேசும் பரிசுத்த ஆவியின் வரம் ஒன்று கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது. அது இருக்கிறதென்று நமக்கும் தெரியும். வேதம் அதை போதிக்கிறது, அதை நாம் விசுவாசிக்கிறோம். இங்குள்ள சபையில் அது உள்ளதால் தேவனுக்கு நன்றி, நம்மிடையே தீர்க்கதரிசன வரம் உள்ளது. அவை முதலில் பரிசோதிக்கப்பட்டு, சரியா இல்லையா என்று அறிந்து கொள்ள வேண்டும். 105பிறகு தீர்க்கதரிசி இருக்கிறான். அப்பொழுது நீங்கள் ஒரு உத்தியோகத்துக்கு வருகின்றீர்கள். அந்நிய பாஷை பேசுதல், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல், அறிவு, ஞானம், சிந்தனைகளைப் பகுத்தறிதல் போன்றவை அனைத்தும் வரங்களே. ஆனால் ஐந்து உத்தியோகங்கள் உள்ளன. முதலாவதாக அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர், சுவிசேஷகர், மேய்ப்பர் இவை தேவனால் நியமிக்கப்பட்ட உத்தியோகங்கள். மனிதர் அந்த உத்தியோகங்களை வகிக்கின்றனர். பாருங்கள்? அவர்களால் முடியாது. அவைகளை நீங்கள் விரும்பிப் பெறமுடியாது. அவைகளுக்காக நீங்கள் ஜெபம் பண்ண முடியாது. அவை இராஜாதிபத்தியமாக அளிக்கப்படுகின்றன. நீங்கள் அந்த உத்தியோகத்தைக் கொண்டவர்களாகவே பிறக்கின்றனர். யாராவது ஒருவர், ஒருவன் மேல் கை வைத்து அவனை தீர்க்கதரிசியாக்கினால் அவன் தீர்க்கதரிசியல்ல. ஒரு தீர்க்கதரிசி தன் தாயின் கர்ப்பத்திலிருந்தே தீர்க்கதரிசியாகப் பிறக்கிறான். பாருங்கள்? எனவே அவன் எப்பொழுதுமே தீர்க்கதரிசியாயிருக்கிறான், பாருங்கள்? 106கர்த்தர் எரேமியாவிடம், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” என்றார். அது சரி. பாருங்கள்? மோசே ஒரு குழந்தையாக பிறப்பதற்கு முன்பே அவன் ஏற்ற பிள்ளையாயிருந்தான். அவன் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருந்தான். மற்றவர்களும் கூட. ஏதேன் தோட்டம் முதற் கொண்டே கிறிஸ்து தேவனுடைய குமாரனாயிருந்தார். அது உண்மை. பாருங்கள், வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலின்றி அளிக்கப்படுகின்றன. வரங்கள் சரீரத்துக்கு அளிக்கப்படுகின்றன. அதை நாம் உணருகிறோம். இந்த வரங்கள் அனைத்தும் நாம் அறிந்திருக்கிறோம். 107இயேசு நமது மத்தியில் எவ்வாறிருக்கிறார் என்றும் முன்பு எவ்வாறிருந்தார் என்றும் நாம் பார்ப்போம். அவர் ஊழியத்தை முதலில் தொடங்கினபோது... அந்நியனே, கூர்ந்து கவனி. அவர் ஊழியத்தை முதலில் தொடங்கினபோது, நாம் யோவான் சுவிசேஷம் முதலாம் அதிகாரத்தில் காண்கிறோம், அவர் ஞானஸ்நானம் பெற்று கரையேறினவுடனே... அவர் பிறந்து, அவருக்கு முப்பது வயதானபோது, அவர் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். பரிசுத்த ஆவி புறாவைப் போல் அவர் மேல் இறங்கினது. அப்பொழுது ஒரு சத்தம், “இவர் என்னுடைய நேசகுமாரன்”.... மூல கிரேக்க மொழியில், “இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” என்று எழுதப்பட்டுள்ளது. ''இவரில் பிரியமாயிருக்கிறேன்- இவரில் வசிக்க பிரியமாயிருக்கிறேன்“ அது நமக்கு வித்தியாசமாகத் தோன்றுவது போலிருக்கின்றது. ஆனால் ”இவரில் வசிக்க பிரியமாயிருக்கிறேன்“ என்பதாகும். தேவன் கிறிஸ்துவில் வாசமாயிருந்து உலகத்தை தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார். அது நமக்குத் தெரியும். 108அவர் உடனே நாற்பது நாட்கள் வனாந்தரத்துக்கு சென்றார், அங்கு பிசாசினால் சோதிக்கப்பட்டார். அதன் பின்பு அவர் ஊழியத்தைத் தொடங்கினார். அவர் வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் பண்ணத் தொடங்கினார். சிறிது கழித்து சீமோன் பேதுரு என்னும் பெயர் கொண்ட ஒருவன் வந்தான். அவன் மீன் பிடிப்பவன், படிப்பறிவில்லாதவன், தன் சொந்த பெயரையும் கூட எழுத அறியாதவன், மேசியா என்று தான் நம்பியிருந்த ஒருவரைக் குறித்து அந்திரேயா இவனிடம் கூறினான். “மூடத்தனம்”. பேதுரு அவரிடம் வந்தான். அவன் இயேசுவின் சமுகத்தில் நடந்த மாத்திரத்திலேயே அவர், “உன் பெயர் சீமோன். நீ யோனாவின் குமாரன்” என்றார். ஏதோ ஒன்று சம்பவித்ததென்று அவன் அறிந்தான், அவர் தேவனுடைய குமாரன் என்பதை அறிந்து கொண்டான். அவனிடம் தேவனுடைய ராஜ்யத்தின் திறவுகோல்களைக் கொடுத்து, அவனை சபைக்குத் தலைவனாகச் செய்ய அவருக்கு பிரியமாயிருந்தது. 109அங்கு பிலிப்பு என்னும் பெயருள்ள ஒருவன் நின்று கொண்டிருந்தான். பிலிப்பு அதைக் கண்டு, “அற்புதமானது! வேத அறிவாளியாகிய ஒருவன் பதினைந்து மைல் தொலைவில் மலையினருகில் வசிக்கிறான். அவனுடைய பெயர் நாத்தான்வேல். அவனிடம் சென்று இதை அறிவிப்பேன்” என்று எண்ணினான். அன்று அவன் வேகமாக அங்கு ஓடினான். அடுத்த நாள் விடியற்காலையில் அவன் அங்கு போய் சேர்ந்தான். அவன் கதவைத் தட்டினவுடனே திருமதி நாத்தான்வேல், “பிலிப்புவே அவர் தோட்டத்தில் இருக்கிறார்” என்றாள். அவனுடைய நல்ல நண்பன். அவன் அங்கு சென்றபோது, நாத்தான்வேல் முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான், அவர் முழங்காலிலிருந்து எழுந்தபோது, பிலிப்பு அவனிடம் “நான் யாரைக் கண்டேன் என்று வந்து பார், அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே” என்றான். இந்த மத சம்பந்தமான பெரிய மனிதன், “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா?” என்று கேட்டான். பிலிப்பு அவனுக்கு நல்ல ஆலோசனை ஒன்றை எடுத்துக் கூறினான்: ''வீட்டில் உட்கார்ந்து கொண்டு குறை கூறிக்கொண்டிருக்காதே, அதைக் குறித்து பேசித் திரியாதே. நீயே வந்து பார். நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமோ என்று நீயே வந்து பார்“ என்றான். “நீ மேசியாவையா குறிப்பிடுகிறாய்? அவர் கீழே இறங்கி வருவார்... பரலோகத்தின் நடைபாதை இறக்கி விடப்படும். அவர் அதன் வழியாக நேராக அரண்மனைக்கு வருவார். அவர் எங்கள் மகத்தான ஸ்தாபனத்துக்கு வருவார்”. அவர்கள் இன்றைக்கும் அவ்வாறே தங்கள் ஸ்தாபனத்துக்கு வருவாரென்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். “அவர் எங்கள் ஸ்தாபனத்துக்கு நேராக வந்து, அரண்மனையின் மேல் கட்டுக்கு சென்று, வெளிப்புறத்தின் வழியாக, மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள சிங்காசனத்தை அடைந்து அதன் மேலேறி உட்கார்ந்து கொண்டு, ”நானே மேசியா என்பார்“ என்று கருதுகின்றனர். மேசியா அப்படி ஒருக்காலும் வரமாட்டார். அவர் எங்கு செல்ல விருப்பங்கொள்கிறாரோ, அங்கு தான் போவார். அவர் ராஜாதிபத்தியமுள்ளவர். அவர் விருப்பப்படி அவர் செய்கிறார். பிலிப்பு, “சரி, வந்து பார்! வந்து நீயே பார்'' என்றான். நீங்கள் நின்று கொண்டு, இந்த உருளும் பரிசுத்தரின் செயல்களில் எனக்கு நம்பிக்கையில்லை“ என்று கூறிவிடாதீர்கள். நீங்கள் வந்து, அதில் ஏதாகிலும் உண்டா என்று கண்டுகொள்ளுங்கள். 110எனவே அவர்கள் வழியில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அவர்கள் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று நீங்கள் கேட்க விரும்புகின்றீர்களா? அவர்கள் வழியில் பேசிக் கொண்டு வந்ததை நாம் உற்றுக் கேட்போம். பிலிப்பு, “நத்தான்வேலே, நீ ஒரு வேத மாணாக்கன் என்று எனக்குத் தெரியும். உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். நாம் மேசியாவை எதிர்நோக்கியிருக்கிறோம் அல்லவா?” என்றான். நாத்தான்வேல், “ஓ, ஆமாம். இந்த சந்ததியின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சந்ததி மேசியாவைக் காணுமென்று விசுவாசிக்கிறேன்” என்றான். இப்பொழுது கவனியுங்கள். “ஆனால் நாம் ஒரு தேசமாகவும் கூட இல்லை. நாம் ஜனங்களின் மத்தியில் சிதறப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்கும் போது நாம் எப்படி அவரை எதிர்பார்க்கமுடியும்?” என்றான். நீங்கள் நினையாத வேளையிலே தேவன் வருகிறார். அப்பொழுது தான் அவர் அங்கு வருகிறார். அப்பொழுது பிலிப்பு, “சற்று பொறு. அந்த மேசியா எப்படிப்பட்டவராயிருப்பார்?” என்று கேட்டான். நாத்தான்வேல்“ஓ, நமது போதகர் மோசே, அவர் தீர்க்க தரிசியாயிருப்பார் என்று கூறியுள்ளார்” 111பிலிப்பு, “இந்த நாசரேத்தூரானாகிய இயேசுவைக் குறித்து உன்னிடம் கூறப்போகின்றேன். நீ மீன் வாங்கின அந்த படிப்பறிவில்லாத மீன்பிடிப்பவனே உனக்கு ஞாபகமிருக்கிறதா? அவனுக்கு ரசீதில் கையெழுத்துகூட போட தெரியவில்லையே, அவன் படிக்கவேயில்லையே” என்றான். நாத்தான்வேல், ''ஆமாம்! ஓ, ஓ, ஆமாம். யோனாவின் குமாரன். நான் யோனாவிடம் கூட மீன் வாங்கினேன்'' என்றான். பிலிப்பு, “என்ன நடந்தது தெரியுமா? பேதுரு அங்கு வந்தான்... இல்லை, சீமோன், அவனுடைய பெயர் சீமோன். அந்திரேயா சீமோனிடம், 'இந்த கூட்டத்துக்கு வா' என்றழைத்து வந்தான். அவன் அங்கு நடந்து வந்தவுடன்... சீமோனின் தந்தை, 'உண்மையான மேசியா தோன்றுவதற்கு முன்பு அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள். எனவே வஞ்சிக்கப்படாதீர்கள்' என்று அறிவுரை கூறினதாக நம்முடன் கூறினது உனக்கு ஞாபகமிருக்கிறதா? அவர் கூறினது உண்மையே. ”அநேக கள்ளச் செய்திகள் புறப்பட்டுச் செல்லும். ஆனால் உண்மையான செய்தி வரும் போது நீ அறிந்துகொள்வாய், ஏனெனில் இந்த மேசியா தீர்க்கதரிசியாயிருப்பார் என்று யூதர்களாகிய நாம் விசுவாசிக்கிறோம்“ என்று அவர் கூறினாராம். நாம் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறோம் என்றான். 112ஒரு யூதனைக் கேட்டுப் பாருங்கள், இப்பொழுது ஈரான் போன்ற இடங்களிலிருந்து வருகிற யூதர்கள் வேதாகமத்தைப் படித்து விட்டு, ''இந்த இயேசு மேசியாவாயிருந்தால், தீர்க்கதரிசியின் அடையாளத்தை அவர் செய்து காண்பிக்கட்டும் பார்க்கலாம். அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம்'' என்கின்றனர். ஆம், ஐயா, அவர்களுடைய தீர்க்கதரிசிகள் உண்மையுள்ளவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ''ஓ, மேசியா தீர்க்கதரிசியாயிருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் மோசே, ''தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்“ என்று கூறியிருக்கிறானே'' என்று நாத்தான்வேல் கூறியிருக்கவேண்டும். பிலிப்பு, ''நாம் பேசிக் கொண்டிருக்கும் சீமோனை அவர் கண்ட போது, 'உன் பெயர் சீமோன்'. நீ யோனாவின் குமாரன்“ என்றார். அவனை அவர் அறிந்திருந்தது மாத்திரமல்ல, ”தேவ பக்தியுள்ள அவனுடைய பரிசேயர் தந்தையையும் அறிந்திருந்தார்“ என்றான். நாத்தான்வேல், ''ஆ! என்னால் நம்ப முடியாது. நீ மிகுந்த ஆழத்துக்கு சென்று விட்டாய்“ என்றான். பிலிப்பு, ''இல்லவே இல்லை. நீயே வந்து அறிந்துகொள். வந்து பார்! வா!“ என்றான். அவர்கள் பாதையின் வழியாக நடந்து சென்றனர். 113முடிவில் நாத்தான்வேல் நடந்து இயேசுவின் சமுகத்தை அடைந்தான். அவன் ஒருக்கால் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருந்திருப்பான். சற்று கழித்து இயேசு சுற்றிலும் பார்த்த போது, நாத்தான்வேல் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அவர், ''இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்றார். அது அவனை வியப்பில் ஆழ்த்தியது. அது அவனைத் தடுமாறச் செய்தது. ''இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்று அவர் கூறினது. ''அது தேவன்“ என்று அவன் கூறினான். அவன் ”ரபீ'' அதற்கு போதகர் என்று அர்த்தம். ''ரபீ, நீர் என்னை எப்படி. அறிவீர்? நான் உம்மை முன்பு சந்தித்ததில்லையே, இந்த சபையோருக்கு நான் அந்நியன்! இதற்கு முன்பு நான் இங்கு வந்தது கிடையாது. அப்படியிருக்க, நீர் என்னை எப்படி அறிவீர்?“ என்றான். அவர், ''பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே , நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்'' என்றார். அது நேற்றைய இயேசு. அது சரியா? அவர் மாறாதவராயிருந்தால், இன்றும் அவ்வாறே இருப்பார். வேறொரு ஜாதியினரை நாம் எடுத்துக் கொள்வோம். ஒரு ஜாதியினர் இருந்தனர். 114மூன்று ஜாதியினர் மாத்திரமே இருந்தனர். அவர்கள் காம், சேம், யாப்பேத் ஆகியோரின் சந்ததியினர். பாருங்கள்.. அது முற்றிலும் உண்மை. பெந்தெகொஸ்தேயன்று சுவிசேஷம் யூதர்களுக்குச் சென்றது. பிறகு சமாரியர்களுக்கு, பிறகு புறஜாதிகளுக்கு, பாருங்கள். காம், சேம், யாப்பேத்தின் சந்ததியினர்- மூன்று ஜாதிகள். இரண்டு ஜாதிகள் மேசியாவை எதிர்நோக்கியிருந்தனர்; புறஜாதிகளாகிய நாம் அல்ல. நாம் முதுகில் தண்டாயுதத்தை வைத்துக் கொண்டிருந்தோம். நாம் அஞ்ஞானிகள், நாம் விக்கிரகங்களை வழிபட்டு வந்தோம்- காம், சேம் சந்ததியினர் அல்ல. மற்றொரு ஜாதியினர் சமாரியர். அவர்கள் கோராவின் பாவத்தினால் விளைந்த விவாகத்தின் மூலம் தோன்றியவர்கள். அவர்கள் பாதி யூதர்கள், பாதி புறஜாதிகள். அவர்கள் தேவனை விசுவாசித்து, மேசியாவை எதிர்நோக்கியிருந்தனர். எனவே இயேசு அவர்களுக்கு முன்பாக சென்று தம்மை வெளிப்படுத்தினார். அவர் தமக்குச் சொந்தமான யூதர்களிடத்தில் வந்தார். அவர் சமாரியா நாட்டின் வழியாகப் போக வேண்டியதாயிருந்தது. பரி. யோவான் 4: நீங்கள் எப்பொழுதாவது வாசித்ததுண்டா? அவர் சமாரியா நாட்டின் வழியாகப் போகவேண்டியதாயிருந்தது. எனவே அவர் கோர் பட்டினத்துக்கு வந்தார். போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவருடைய சீஷர்களை அவர் அனுப்பினார். அவர்கள் போனபிறகு... 115அங்கு நீங்கள் இருந்திருப்பீர்களானால் அது அழகான இயற்கைகாட்சி, அங்கு ஒரு கிணறு இருந்தது. நகரத்துக்கு குழாய் ஒன்றிருந்தது. அதன் வழியாக தண்ணீர் பாய்ச்சப்படும். ஸ்திரீகள் அங்கு வந்து, கிணற்றில் இராட்டினத்தை மாட்டி, வாளியை கிணற்றில் இறக்கி, தண்ணீர் மொண்டு, தலையில் சுமந்து கொண்டு போவார்கள். நடத்தை கெட்ட ஸ்திரீகள் நல்ல ஸ்திரீகளுடன் தண்ணீர் மொள்ள வரக்கூடாது. அந்நாட்களில் அவர்கள் ஒன்றாக சேருவதில்லை. ஒரு ஸ்திரீ நடத்தை கெட்டவளாயிருந்தால், அவளைப் போன்றவர் உள்ள கூட்டத்தில் தான் அவள் இருக்கவேண்டும். இன்றைக்கு அப்படியில்லை. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்கின்றனர். அவர்கள்... அதுமுட்டைக் கருவை எடுப்பது போன்றது. எல்லாமே சிகப்பு விளக்கு கொண்ட தெருக்கள். எனவே அவர்கள்... 116நடத்தை கெட்ட ஸ்திரீகள் நடுப்பகல் பதினொன்றரை அல்லது பதினொன்றே முக்கால் மணிக்கு- ஏறக்குறைய இந்த நேரத்தில்- தண்ணீர் மொண்டு கொள்ள வருவார்கள். இந்த ஸ்திரீ கயிற்றையும் இராட்டினத்தையும் கிணற்றில் மாட்டிவிட்டு, கிணற்றில் தண்ணீர் மொள்ள வாளியை இறக்கி, என்னால் அவள் வாளியை மேலே இழுத்துக் கொண்டிருந்த அவள் தண்ணீரை மேலே கொண்டு வரும் சமயத்தில் யாரோ ஒருவர், “ஸ்திரீயே, தாகத்துக்குத் தா” என்று கூறுவதை அவள் கேட்டாள். அவள் திரும்பிப் பார்த்தபோது, ஒரு யூதன் அங்கிருந்தார். அவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்வது கிடையாது. அவர் நடுத்தர வயதுள்ள மனிதர், சுமார் முப்பது வயதிருக்கும். அவர் ஐம்பது வயதுள்ளவர் போல் காணப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. அதை நீங்கள் அறிவீர்கள். அவர் கூறினார்… அவர்கள், ''நீர் ஒரு மனிதன், உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டதாக கூறுகின்றாயே'' என்றனர். அவருக்கு முப்பது வயது தான் ஆகியிருந்தது. பாருங்கள்? அவருடைய ஊழியம் அவரைச் சற்று களைப்படையச் செய்துவிட்டது என்று நினைக்கிறேன். அவர்கள், “நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்கிறாயே, நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் அறிகிறோம்” என்றனர். அவர் “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். பாருங்கள், அவர் ஆபிரகாமின் தேவன். நிச்சயமாக, அவர், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். நிச்சயமாக. 117இப்பொழுது அவர் கிணற்றினருகே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர், “ஸ்திரீயே, தாகத்துக்குத் தா'' என்றார். அவள், ''அது வழக்கமில்லையே, இங்கு ஒதுக்கி வைக்கப்படுதல் (segregation) உள்ளதே“ என்றாள். தென்பகுதியில் வெள்ளையருக்கும் கறுப்பு நிறத்தவருக்குமிடையே உள்ளது போல. பாருங்கள்? அவள், ”இங்கு ஒதுக்கி வைக்கப்படுதல் உள்ளது. நீர் இவ்விதமாக கேட்பது வழக்கமில்லாத ஒன்றாகும். யூதனாகிய நீர் சமாரியா ஸ்திரீயாகிய என்னிடம் தாகத்துக்குத் தா என்று எப்படி கேட்கலாம்-? நாம் ஒருவருக்கொருவர் சம்பந்தக் கலவாதவர்கள் அல்லவா?“ என்றாள். அவள் ஒரு வேசியென்று உங்களுக்குத் தெரியும். அவள் ஒருக்கால் அழகான பெண்ணாக இருந்திருக்கலாம். அவள் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு, அன்று காலை முகத்தின் மேல் மயிரை சுருள விட்டு, தொங்க விட்டிருந்திருப்பாள். அவள் ”சமாரியா ஸ்திரீயாகிய என்னிடம் தாகத்துக்குத் தா என்று கேட்பது வழக்கமில்லையே'' என்றாள். அவர், “ஸ்திரீயே, உன்னிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறவர் இன்னார் என்றும் நீ யாரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்றும் நீ அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய்'' என்றார். அது தான் நேற்றைய மேசியா. பாருங்கள்? ''நீ என்னிடத்தில் கேட்டிருப்பாய், நீ இங்கே மொண்டு கொள்ள வராமலிருக்க, நான் உனக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுத்திருப்பேன்'' என்றார். 118அவள், “ஏன், மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே. பின்னை எங்கேயிருந்து எனக்குத் தண்ணீர் கொடுக்க முடியும்?” என்று கூறிவிட்டு, ''எங்கள் பிதாவாகிய யாக்கோபு“ என்றாள். பாருங்கள், அவள் சமாரியா ஸ்திரீ, ஆயினும் அவள் யாக்கோபை அவள் பிதாவென்று அழைத்தாள். ”எங்கள் பிதாவாகிய யாக்கோபும் அவருடைய குடும்பம் முழுவதும்அவருடைய மிருக ஜீவன்களும் இந்த கிணற்றின் தண்ணீரைக் குடித்ததுண்டே. இதைக் காட்டிலும் சிறந்த தண்ணீர் உம்மிடம் உள்ளதாகக் கூறுகின்றீரே“ என்றாள். அவள் தொடர்ந்து, ”யூதர்களாகிய நீங்கள் எருசலேமில் தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்கள். நாங்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வருகிறோம்“ என்றாள். அவர், “ஸ்திரீயே, உண்மையாகத் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. ஏனெனில் தேவன் ஆவியாயிருக்கிறார்” என்றார். பாருங்கள்? ''அவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்“ அவர் என்ன செய்துக்கொண்டிருந்தார்? அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொள்ளும்படியாய் அவர் அவளுடன் பேசிக் கொண்டிருந்தார். பாருங்கள்? இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், அவர் அந்த சமாரியருக்கு முன்பாக மேசியாவாக இருக்க வேண்டியதாயிருந்தது. 119அவர் அவளுடைய சிக்கல் என்னவென்பதை நேரடியாகக் கண்டுகொண்டார். அப்படித்தான் என்பதை எத்தனைப் பேர் அறிவீர்கள்? நிச்சயமாக. அவள் தன்னுடைய ஆறாவது புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆகவே நீங்கள் பாருங்கள், உங்களுக்கு உயிரோடிருக்கின்ற புருஷன் இருப்பானானால் அது தவறாகும், மற்றும் இன்னுமாக, மேலுமாக சென்று ஏதோ ஒரு காரணத்தால் ஒரு பெண்ணை புறம்பேதள்ளி விட்டு, பிறகு அவளை விவாகம் செய்து பிறகு இன்னொருவரை விவாகம் செய்து இன்னொருவரை விவாகம் செய்து, இன்னொருவரை விவாகம் செய்வது. அதை நீங்கள் செய்யக் கூடாது. ஆகவே அவர் அவளிடம்... செய்து கொள்ளாமலே அவள் அவர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று நான் யூகிக்கின்றேன். அவள் அவர்களோடு விவாகம் செய்து கொள்ளாமலே இருந்திருப்பாள். விவாகம் என்ற ஒன்றை செய்யாமலே அவள் இருந்திருப்பாள். ஆகவே அவள் இந்த எல்லா தீமையான காரியங்களையும் கூறியிருப்பாள், உங்களுக்கு தெரியுமா, இந்த தீமையான காரியங்களையெல்லாம் செய்திருப்பாள். ஆகவே அவர் அங்கே நின்று கொண்டு அவளை நோக்கி உற்றுப்பார்த்து கொண்டே “தாகத்துக்குத் தா” என்று அவர் கூறினார். அதற்கு அவள் கூறினாள்... “நீ பேசிக் கொண்டிருப்பது இன்னார் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் கேட்டிருப்பாய்; நான் உமக்கு தண்ணீர் கொண்டு வருகிறேன் நீர் வர வேண்டாம்... நான் உமக்குத் தருகிறேன் குடிப்பதற்கு இங்கே வரவேண்டாம்” அப்பொழுது அவர், “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அதற்கு அவள், “ஐயா, எனக்குப் புருஷன் இல்லை” என்றாள். “ஓ”, அவர், ''நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல இதை உள்ளபடி சொன்னாய்“ என்று கூறினார். 120அவள்... அந்த ஸ்திரீயைப் பாருங்கள். இப்பொழுது, அந்த.. அவர் அவ்விதமாக செய்ததை அந்த யூதர்கள் கண்ட போது அவரை என்னவென்று அழைத்தார்கள்? அவர் தான் அந்த மேசியா என்பதை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்களா? இல்லை. அவர் என்னவாயிருந்தார் என்று அவர்கள் கூறினது என்ன? பெயல்செபூல், ஒரு குறிசொல்லுகிறவன், பெயல்செபூலின் வல்லமை. பகுத்தறிதலை செய்து கொண்டிருந்த அந்த தேவனுடைய ஆவியை அசுத்தமான காரியம் என்று அவர்கள் அழைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் எனக்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினால், நான் உங்களை மன்னிப்பேன். ஆனால் இதே காரியத்தை செய்ய ஒரு நாளிலே பரிசுத்த ஆவியானவர் வருவார். அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும், உங்களுக்கு மன்னிப்பு கிடையாது” என்றார். ஆகவே நாம்இன்றைக்கு எந்நிலையிலுள்ளோம், அது இன்றைக்கு சம்பவிக்குமானால் அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை கூறப்பட்டாலும் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை. ஆகவே இந்த சந்ததி என்ன செய்துள்ளதென்று பாருங்கள். இப்பொழுது, இதைக் குறித்து சிந்தியுங்கள்; ஆழமாக சிந்தியுங்கள்; இந்த பயபக்தியான வார்த்தைகளை சீத்தூக்கிப் பாருங்கள். யூதர்கள், ''இந்த மனிதன் பெயல்செபூலினால் பிசாசுகளைத் துரத்துகிறான். இவன் பிசாசு, குறி சொல்பவன்“ என்றனர். குறிசொல்லுதல் பிசாசின் கிரியையென்று நாமறிவோம். அவர்கள், ''இந்த மனிதன் குறி சொல்பவன்” என்றனர். அவர்கள் அவரைக் குறி சொல்பவன் என்று அழைத்ததை அவர் மன்னித்துவிட்டார். ஆனால் அவர் மரித்து பரிசுத்த ஆவி திரும்பி வந்தபோது, அது வித்தியாசமாகிவிட்டது. பாருங்கள்? அதாவது புறஜாதி சந்ததியில். இப்பொழுது கவனியுங்கள். 121இப்பொழுது, கவனியுங்கள். யூதர்கள் அதை ஏற்கனவே கண்டு, அதைக் குறை கூறினர். சமாரியர் அதை ஏற்றுக் கொண்டனர். அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். சமாரியர்களே, நீங்கள் அதைக் குறித்து என்ன செய்யப் போகின்றீர்கள்?“ நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது அவர் எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்”. பாருங்கள், அவர்கள் மேசியா யாரென்பதை அறிந்திருந்தனர். ''கிறிஸ்து என்னப்பட்ட மேசியா வருகிறார் என்று அறிவேன். அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார். ஆனால் நீர் யார்? நீர் அவருடைய தீர்க்கதரிசியா?“ அவர், “நானே அவர், நானே அவர்” என்றார். இதைக் கேட்டவுடனே! இப்பொழுது கவனியுங்கள். இதைக் கேட்டவுடனே, அவள் தண்ணீர் குடத்தை வைத்து விட்டு, ஊருக்குள்ளே ஒடி, வீதியிலிருந்த மனிதரிடமும் அந்த பட்டினம் முழுவதிலும் ஒடி, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள், அவர் அந்த மேசியா அல்லவா?” என்றாள். அவர் மேசியாவென்று அந்த ஸ்திரீ கூறினதினிமித்தம் ஊரிலுள்ள ஜனங்கள் அனைவரும் அவரை விசுவாசித்தார்கள் என்று வேதம் கூறுகின்றது. இது நேற்று மேசியாவின் அடையாளமாயிருந்தது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பாரானால் இன்றைக்கும் அதுவே அடையாளமாயிருக்கும். அது சரியா? எவ்வளவு பேர் அதை ஆமோதிக்கிறீர்கள்? நிச்சயமாக, ஆம், அதே அடையாளம், சரி. அது வித்தியாசமான ஆளாயிருக்குமா? இல்லை. அவர் நேசித்தார், அவர் அழுதார், அவர் கண்ணீர் விட்டார், அவர் உறங்கினார், அவர் வனாந்தரத்துக்குச் சென்றார், அவர் மீன் பிடித்தார், மற்ற மனிதரைப்போல் நடந்துகொண்டார். அவர் ஒரு மனிதன், ஆயினும் அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா. 122“ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல, இரவுமல்ல” என்று வேதம் கூறுவதை நாம் காணலாம். அது மந்தாரமான ஒரு நாள். ஸ்தாபனங்களும் சபைகளும், இரட்சிக்கப்பட போதுமானதாயுள்ளது. “ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.” எத்தனை பேர் அதை வேதத்தில் வாசித்திருக்கிறீர்கள்? நிச்சயமாக சரி. வேறு விதமாகக் கூறினால், சூரியன் (Sun) கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றது. கிழக்கில் உதிக்கும் அதே சூரியன் தான் மேற்கில் மறைகின்றது. தேவனுடைய குமாரன்- குமாரன் (Son)| கிழக்கத்திய மக்களின் மேல் உதித்தார். நாகரீகம் சூரியனுடன் பயணம் செய்து, இப்பொழுது நாம் மேற்கு கடற்கரையில் உள்ளோம். நீங்கள் குறுக்கே சென்றால், சீனாவை-மறுபடியும் கிழக்கை- அடைகின்றீர்கள். எனவே கிழக்கில் பிரகாசித்த அதே குமாரன் இப்பொழுது மேற்கில், அதே பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே மேசியாவுடன் பிரகாசிக்கின்றார். அது சரியா? “சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும், மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டுகொள்வாய்,” அது உண்மை. 123நாம் சாயங்காலத்திலே, சாயங்கால வெளிச்சத்திலே இருக்கிறோம். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. மேசியா நமது மத்தியில் இருக்கிறார். தேவனுடைய குமாரன் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நமது மத்தியில் இருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், ''ஆமென்“ என்கின்றனர்- ஆசி). நான் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? (”ஆமென்'') நான் கூறுவது உண்மையென்று விசுவாசிக்கிறீர்களா? (''ஆமென்''). நேற்று காலையில், நேற்று முந்தின நாள் காலையில் நிகழ்ந்த தூதனின் வரலாற்றை விசுவாசிக்கிறீர்களா? (“ஆமென்''). அதை விசுவாசிக்கிறீர்களா? (”ஆமென்“). அப்படியானால், வானவில் வடிவத்தில் எனக்குப் பிரத்தியட்சமான பரலோகத்தின் தேவன் பேசட்டும். என் சரீரம் அவருக்காக பிரதிஷ்டை பண்ணப்படட்டும். என் ஆத்துமா, ஆவி, சிந்தை அவருடைய மகிமைக்காக பிரதிஷ்டை பண்ணப்படட்டும். நான் கடைசி அணிலுக்காக காத்துக் கொண்டிருந்தது, அதுவே கடைசி அணிலாக இருக்குமென்று அறிந்திருந்தபோது, மணி பத்து அடிக்க மூன்று நிமிடங்கள் இருந்தது. அது பத்து மணிக்கு நிகழுமென்று நான் கூறியிருந்தேன். அவர், ''நீ என்ன கூற விரும்புகிறாயோ, அது அவ்விதமேயிருக்கும்”, என்றார். அவர் அதனின்று மாறவேயில்லை. நீ என்ன கூறினாலும்... நீ என்ன கூறிட விரும்புகிறாயோ, அதையே கூறிவிடு என்றார். அந்த சிறு பெண்ணிடம் அது எட்டாவது தடவையாக செய்யப்பட்டது. அவள் அங்கே பின்பாக உட்கார்ந்திருக்கிறாள் என்று நான் எண்ணுகிறேன். இங்கே சகோதரன் ரைட் உட்கார்ந்திருப்பதை நான் காணுகிறேன்: ஹாட்டி ரைட், அவள் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்காக (அதோ அங்கே அவள் இருக்கிறாள்) இதற்கு எதிராக விடாப்பிடியாக செயல்பட்ட அந்த இரண்டு பிள்ளைகளின் இரட்சிப்புக்காக கேட்டபொழுது, “இயேசுவின் நாமத்தில் உன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் உனக்குநான் தருகிறேன்” என்று கூறினேன். அவர்கள் நேராக அவள் மடியின் குறுக்கே விழுந்தனர். 124கென்டக்கியிலிருந்து வந்துள்ள பாப்டிஸ்டு டால்டன் என்பவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள், எட்? பன்னிரண்டு பிள்ளைகள். இங்கு நின்று கொண்டு, அவருடைய குழந்தைகளின் இரட்சிப்பை அவர் கேட்டார். நான் கட்டிடத்தை விட்டு வெளியே சென்றபோது, எட் என்னிடம் வந்தார். நான் “எட்” என்றேன். என் மேல் தங்கியிருந்த பரிசுத்த ஆவி, “அதை அவருக்குக் கொடுத்துவிடு, அதை அவருக்கு கொடுத்துவிடு'' என்றார். நான், ''உங்கள் பிள்ளைகளை உங்களுக்கு அளிக்கிறேன்'' என்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். அவருடைய வாலிபப் பையன் ஒருவன் வீட்டில் உட்கார்ந்து, காத்துக் கொண்டு, அழுது கொண்டிருந்தான். அவர் அங்கு சென்றபோது, அவன் இரட்சிக்கப்பட்டிருந்தான். இந்த பாப்டிஸ்டு சகோதரன் டால்டன்... ஓ, ஓ, அவர் பேசும்போது எவ்வளவு அற்புதமாயுள்ளது! இப்பொழுது நான், அவர் கிறிஸ்துவென்று தம்மை காண்பிக்கும்படியாகவும், நான் கூறுவது உண்மையென்று வெளிப் படுத்தும்படியாகவும் அவருடைய மகிமைக்காக வேண்டிக் கொள்ளப் போகின்றேன். 125அவிசுவாசி தப்பித்துக் கொள்ளவே முடியாது. இங்குள்ள வியாதிப்பட்டோர், தேவையுள்ளோர், தேவன் தங்களுக்குத் தேவையென்று கருதுவோர்; நமது வாசல்களுக்குள் இருக்கும் எனக்குத் தெரியாத அந்நியர்கள், உங்களுக்குத் தேவன் தேவையாயிருப்பாரானால் உங்கள் கரங்களையுயர்த்துங்கள். எல்லாவிடங்களிலுமுள்ள ஜனங்கள் கையுயர்த்தியுள்ளனர். பொதுவாக எல்லாவிடங்களிலுமிருந்தும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியாதவர்கள் எனக்குத் தெரிந்த யாரையாகிலும் நான் அழைத்து, உங்களுக்கும் என்னை தெரிந்து, நாமிருவரும் ஒருவருக்கொருவர் பரிச்சயம் உள்ளவர்களாயிருந்தால் நீங்கள் ஒன்றும் கூற வேண்டாம். அமைதியாயிருங்கள். அவர் தேவனுடைய குமாரனாயிருந்தால் அவர் தேவனுடைய குமாரனே- என் செய்தி உண்மையாயிருந்து, அந்த தூதன்... 126பத்து மணிக்கு மூன்று நிமிடங்கள் இருந்தபோது நான், “ஓ தேவனே, சற்று முன்பு நீர் அந்த வானவில்லில் எனக்கு பிரத்தியட்சமானீர். இன்னும் மூன்று நிமிடங்கள் உள்ளன. நான் ஒரு அணிலையும் காணவில்லை. நீர் ஒரு அணிலை எனக்காக கொண்டு வர வேண்டும்” என்றேன். தேவன் எனது நியாயாதிபதி. வேதாகமத்தின் மேல் என் கையை வைத்துக்கொண்டு இதை பயபக்தியுடன் கூறுகிறேன். சத்தியம் செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி செய்யக் கூடாதென்று வேதம் கூறியுள்ளது. ஆனால் தேவன் எனது நியாயாதிபதி. ஒரு அணில் மரத்திலிருந்து கீழே ஓடிவந்து எனக்கு முன்பாக நின்றது. அவர் ஒரு போதும் தவறினதில்லை; அவர் அதைக் செய்ததேயில்லை அவைகளை அறிந்துள்ள அநேகர் இங்குள்ளனர். அதே தேவன் இங்கிருக்கிறார் என்று நானறிவேன். 127ஜெப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன, அவைகள் எனக்கு வேண்டாம். இன்னும் சில நிமிடங்களில் அவர்களுக்கு நாம் ஜெபம் செய்வோம். அவர்கள் வரிசையில் வரட்டும். இங்குள்ளவர்களை எனக்குத் தெரியும். எனக்கு அந்நியர்கள் தேவை. என்னை அறியாதவர்கள் எனக்குத் தேவை, உங்கள் சிந்தையை செலுத்த வேண்டுமென்று விரும்புகிறேன், நீங்கள் யோசித்து, ஜெபம் செய்து, ''தேவனே, அந்த மனிதனுக்கு என்னைத் தெரியாது“ என்று கூறுங்கள். 128ஒரு நாள் ஒரு ஸ்திரி கூட்டத்தில் நெருங்கிக் கொண்டு வந்தாள். அவளுக்கு உதிரப்போக்கு இருந்தது. அவள் சொன்னாள்... மற்றவர்கள் எல்லோரும் ''இதோ அவர்! அவரைப் பாருங்கள்! அதோ அந்த கலிலேயன்“ என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ரபீகளும் மற்றவர்களும் அங்கு நின்று கொண்டு, ”ரபீ, உம்மிடத்தில் ஒரு அடையாளத்தை தேடுகிறோம்“ என்றெல்லாம் கூறினர். இந்த ஸ்திரீயோ, ''அவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன். அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் நான் சொஸ்தமாவேன்“ என்றாள். எத்தனை பேருக்கு அது தெரியும்? அவள் அவரைத் தொட்டாள். அவரால் உணர முடிந்தது என்றல்ல. அவர் நின்று திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்? யாரோ என்னைத் தொட்டார்கள்'' என்றார். எல்லோரும் அமைதியாயிருந்தனர்- அவர், ''யாரோ என்னைத் தொட்டார்கள். என்னைத் தொட்டது யார்?” என்றார். அவர் சுற்றும் முற்றும் பார்த்து அந்த ஸ்திரீயைக் கண்டுபிடித்தனர். அவன் தன்னை மறைத்துக் கொள்ள முடியவில்லை. அவர் அவளைக் கண்டுபிடித்து, ''உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்றார். அவள் விசுவாசித்ததால் அவளுடைய உதிரப்போக்கு நின்று போனதென்றும், அவளுடைய விசுவாசம் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டதென்றும் கூறினார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. 129இன்று அவர் பிரதான ஆசாரியராக, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து கொண்டு, நாம் பண்ணும் அறிக்கையின் பேரில் வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார். நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராய் அவர் இருக்கிறார் என்று வேதம் கூறுகின்றதா? அது சரியா? சரி, நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், நீங்கள், “தேவனாகிய கர்த்தாவே, இப்பொழுது தான் ஒரு செய்தியைக் கேட்டேன். இந்த மனிதனை எனக்குத் தெரியாது. இந்த கூடாரத்துக்கு நான் வந்திருக்கிறேன். நான் வழக்கமாக இங்கு வருவதில்லை. இது என் இடத்திலுள்ள சபையல்ல. நான் வேறிடத்திலிருந்து வந்திருக்கிறேன். நான் இந்த நகரத்தைச் சேர்ந்தவன் அல்ல. இந்த மனிதனை எனக்குத் தெரியாது. அது நீரேயென்று அவர் அதை தத்ரூபமாக்கினார். நீர் அவருக்கு பிரத்தியட்சமானீர் என்றும், செய்தி உண்மையானதென்றும் நீர் எப்படி இவைகளைச் செய்கிறீர்என்றும் அவர் கூறினார். அந்த மனிதனை எனக்குத் தெரியாது, ஆனால் உம்மை எனக்குத் தெரியும். எனவே அவர் தம்மை உமக்கென்று பிரதிஷ்டை செய்து, உமது சொந்த வார்த்தைகளைப் பேச அவருடைய சரீரத்தை நீர் உபயோகின்றீர் என்றால், அவர் என்னுடன் பேசட்டும். கர்த்தாவே, உம்முடைய வஸ்திரத்தை நான் தொடட்டும்” என்று ஜெபம் செய்யுங்கள். அவர் செய்கிறாரா இல்லையாவென்று பாருங்கள். அவர் தேவனா என்று பாருங்கள். 130அவர் இன்னமும் தேவனாயிருப்பாரானால், அவர் பேச விரும்பும் அதே வார்த்தைகளைப் பேச என் உதடுகளை உபயோகிக்க முடியும். ஏனெனில் அவருக்கு என் உதடுகளும் உங்கள் உதடுகளும் தவிர வேறு உதடுகளும் கிடையாது. நமது கண்களைத் தவிர அவருக்குக் கண்கள் கிடையாது. எனவே அவர் இறங்கி வந்து நமது சரீரத்தின் மூலம் தமது சபையை இயக்குகிறார், அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் தம்மை இயக்குகிறார். அதை தான் அவர் சொன்னார்: “நான் செய்கிற அதே கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று. அது சரியா? ''அதே கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்“ அவர் மேசியா என்பதை நிரூபிக்க அவர் அந்த கிரியைகளைச் செய்தார். இப்பொழுது அவர் மேசியாவாகயிருப்பாரானால் - அவர் தான் மேசியா- அது சத்தியமாக இருப்பதால், அவர் அன்று செய்த அதே கிரியைகளை இப்பொழுது தமது சபையின் மூலமாகச் செய்கிறார். உங்கள் ஸ்தாபனங்கள் என்ன கூறினபோதிலும், அது சரியென்பதை அது நிரூபிக்கிறது. ஓ, அல்லேலூயா! 131வயோதிப சகோதரன். கிட்டும், சகோதரி கிட்டும் இங்கு அமர்ந்துள்ளனர். இருவருக்குமே எண்பது வயதாகிவிட்டது. நான் பிறப்பதற்கு முன்பே அவர்கள் பிரசங்கம் செய்து வருகின்றனர். அன்றொரு காலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒஹையோவில் அவர் 'பிராஸ்ட்ரேட்' (prostrate) சுரப்பிகளில் புற்றுநோய் தாக்கி மரணத்தருவாயில் இருந்தார். அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்கள், சகோதரி கிட் தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டு, “பில், துரிதமாக வாருங்கள், அவர் மரித்துக் கொண்டிருக்கிறார்”. என்றார்கள், நானும் பில்லியும் என்னுடைய பழைய காரில் விரைவாக சென்று அங்கு அடைந்தோம். அந்த அறைக்குள் நான் சென்றவுடனே பரிசுத்த ஆவியானவர், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று பேசினார். இதோ அவர் தேவனுடைய மகிமைக்கு சாட்சியாக நிற்கிறார். அது மருத்துவரையும் திகைப்பில் ஆழ்த்தினது. அவர் தேவன்! அவ்வளவுதான். அதை என்னால் செய்ய முடியுமா? முடியாது, ஐயா. என் வார்த்தைகள் வேறெந்த மனிதனின் வார்த்தைகள் போலவே உள்ளன. ஆனால் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதாக இருந்தது, ஆமென். 132அநேக ஆண்டுகளுக்கு முன்பு, கென்டக்கியின் மலைகளிலிருந்து ஒரு சிறு தேவனுடைய சபையிலிருந்த சிலர், மலைச் சரிவுகளில் இங்குமங்கும் ஒடி, தாய் கிட்டுடன் ஒரு கட்டையால் சோளத்தை அடித்து பிரித்து, குழந்தைகளைப் போஷித்து, துணிகளை சலவை செய்து, சுவிசேஷ வேலை செய்து கொண்டிருந்த அவர்களுடைய கணவருக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இதோ அவர்கள் எண்பது வயது நிரம்பியவர்களாய், இங்கு உட்கார்ந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அனுபவித்துக் கொண்டு, நான் பிரசங்கம் செய்யும் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் ஏறக்குறைய நூறு மைல் காரில் பயணம் செய்து இங்கு அடைகின்றனர் - அவர்கள் அதைக் குறித்து கேள்விப்பட்டால், அவர்கள் வரவிரும்பினால் வரட்டுமென்று அவர்களுக்கு நாங்கள் அழைப்பு அனுப்புகிறோம். அவர்களுடைய இருதயங்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள ஒவ்வொரு நபரும் இன்று காலை அவர்களுடன் கைகுலுக்கி அவர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறேன். 133இப்பொழுது ஜெபியுங்கள், ஓ, அவர் தேவனாயிருக்கிறார் என்று அறிந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். என்னே ஒரு உணர்ச்சி! நான் அவருக்காக காத்திருக்கிறேன். பாருங்கள், நான்... ''சகோதரன் பிரன்ஹாமே, எதற்காக தாமத்திதுக் கொண்டிருக்கிறீர்கள்?“ என்று நீங்கள் கூறலாம். பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். இது வேறுவிதமான அபிஷேகம். அவர் வந்து அதை செய்வாரானால், வியாதிப்பட்டுள்ள எத்தனை பேர் அவரை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்வீர்கள்? எல்லா வியாதியஸ்தர்களும் கைகளையுயர்த்துங்கள் பார்க்கலாம் - அவர் அதை செய்வாரானால். வியாதியாயிருந்து, அந்த மேசியாவாகிய கிறிஸ்து ஜனங்களின் மத்தியில் பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்ற ஒவ்வொருவரும் உங்கள் கைகளையுயர்த்துங்கள். 134ஜெபியுங்கள், விசுவாசியுங்கள். வீட்டின் இந்த பக்கத்தை நான் அற்பணிக்கிறேன்... அநேகர் அபிஷேகம் வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். கவனியுங்கள் அங்கே வாஷிங்டன் டி.சி.யில் விஞ்ஞானத்தால் மாட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கின்ற அந்த அக்கினி ஸ்தம்பத்தைக் குறித்து எத்தனைப் பேர் கேள்விப்பட்டுள்ளீர்கள்? உங்களுக்குத் தெரியுமா; அந்த புகைப்படம் இங்கேயும் தொங்கவிடப்பட்டள்ளது; மோசேயை வழி நடத்தின அதே அக்கினிஸ்தம்பம். இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றானது புகைப்படமாக எடுக்கப்பட்டது இது ஒன்றே தான்; இது ஒரு நாளிலே பத்து சென்ட்டுகள் அடுக்கில் கடையில் இருக்கும் என்று விஞ்ஞானம் கூறினது. அதே தூதன் தான் சரியாக இப்பொழுது இங்கே பிரசங்க பிடத்தண்டை இருக்கின்றார். நான் அதைக் கூறுகிறேன். நீங்கள் அதை விசுவாசிக்க நான் உங்களுக்கு சவாலிடுகின்றேன். வெளியிலிருந்து வந்திருப்பவர்களே நீங்கள் விசுவாசியுங்கள். அது எங்கே செல்கிறதென்று நான் பார்த்துக் கொண்டிருக்க மாத்திரமே நான் செய்கிறேன். எல்லோரும் பயபக்தியாயிருங்கள். அவருடைய சமூகத்தில், அந்த மரியாதை... 135நான் ஒரு மனிதனைக் காண்கிறேன்... இதோ அது... எனது இடது புறமாக, அங்கே பின்னே மூலையில் அமர்ந்து கொண்டிருப்பவர். அவர் சைனஸ் கோளாறினாலும் வயிற்றுக் கோளாறாலும் அவதிப்படுகிறார். நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? எனக்கு நீங்கள் அந்நியர்... அது...?... திரு. வெல்ஸ், அதுவே உங்கள் பெயராகும், திரு. வெல்ஸ். நீங்கள் இங்கிருந்து விரவில்லை. நீங்கள்... இல்லினாயிலுள்ள அரோரா என்னும் இடத்தைச் சேர்ந்தவர் நீர். அது உண்மை. அது உண்மைதானே? நான் உங்களுக்கு அந்நியன்; அது சரியென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். எழுந்து நில்லுங்கள்; இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கவில்லையெனில்... இப்பொழுது, அங்கே ஒரு நபர் இருக்கின்றார். அவரை நான் என்னுடைய வாழ்நாளில் கண்டதேயில்லை. நம்மிடையே இருக்கின்ற ஒரு முழு அந்நியர் அவர்; அவர் வேறொரு மாநிலத்திலிந்து வருகின்றார். ஆகவே பரிசுத்த ஆவியானவர், இப்பொழுது, அவரிடம் அது என்னவெல்லாம் கூறியிருந்ததோ, அது….?.... அந்த ஒலிநாடாவை எடுக்கும் வரைக்கும் நான் அறியமாட்டேன். என் மேல் வருகின்ற அபிஷேகம் அது, ஆனால் இந்த மனிதன் அறிவார். உங்களிடம் கூறப்பட்டதெல்லாம் உண்மைதான், ஐயா, அப்படித்தானே? நாம் அந்நியர்... அங்கே... இவர் தனக்குத்தானே சாட்சியாக இருக்கட்டும். அதைச் செய்தது யார்? மேசியா, கிறிஸ்து. 136இங்கே ஜனத்தின் மத்தியில் அமர்ந்துள்ள ஒரு பெண்மணி உள்ளார்கள், சரியாக இங்கே. அவள் மீது இருக்கும் அந்த வெளிச்சத்தைப் பாருங்கள்? தோல் கோளாறினால் அவர்கள் அவதிப்படுகிறார்கள். திருமதி. பிட் மேன், நீங்கள் ஓவன்ஸ் போரோவைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்நியராக இருந்தால் உங்கள் கரத்தை அசைத்துக் காட்டுங்கள். இவைகள் உண்மையல்லவா? உங்கள் கரத்தை அசைத்துக் காட்டுங்கள். தேவன் உங்களை சுகமாக்குகிறார். நான் இந்த தரிசனத்தில் தவிர, அந்தப் பெண்மணியைக் கண்டதேயில்லை. உங்களுக்கு அடுத்ததாக அமர்ந்துள்ளது பெண்மணி எல்லிஸ், திருமதி. எல்லிஸ் வாலிபப் பெண்மணி. அவளுக்கு ஸ்தீரிகளுக்குள்ள கோளாறு உள்ளது. அவளும் அந்நிய ஸ்திரீயே. அது உண்மையென்றால், உங்கள் கரத்தை அசையுங்கள். உங்களுக்கு அடுத்ததாக அமர்ந்திருப்பது உங்கள் தாயார் தானே? அப்பெண்மணி ஒரு விதமான பயத்தினால் அவதிப்படுகிறார்கள், அவர்களிடம் பய மனப்பான்மையானது காணப்படுகிறது. பெண்மணியே, அது சரியென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. பயமானது போய்விட்டது. நீங்கள் வீடு சென்று சுகமாக இருக்கலாம். நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று நான் சவாலிடுகின்றேன். 137அங்கே பின்புறமாக, மூலையில், இன்னும் பின்பாக, மின்னசோட்டாவிலிருந்து ஒரு மனிதன் முதுகு கோளாறு உள்ளவராக வந்துள்ளார், உங்கள் பெயர் திரு. கார்சன். எழுந்து நில்லுங்கள். உங்கள் முதுகு கோளாறு அகன்றுவிட்டது. இயேசுகிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். சரியாக இங்கே பின்புறமாக, ஒரு பெண்மணி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நகரத்திற்கு வெளியே இருப்பவர்கள், அவர்கள் புளூ ஐலண்ட் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இருதயக் கோளாறு உள்ளது. அது சிக்காகோவிற்கு அருகாமையில். திருமதி. பிரைடென், எழுந்து நின்று உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் வீடு சென்று சுகமாயிருங்கள். நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? இந்தப் பகுதியினரைக் குறித்து என்ன? அது மேசியா தான் என்பதை நீங்கள் அறிவீர்களா? எப்படி ஒரு மனிதன் இதை அறிந்கொள்வான்? இதுவரை பெயர் சொல்லி அழைக்கப்பட்ட மக்கள் எல்லோரும், உங்களைக் குறித்து எனக்கு ஒன்று தெரியாது என்பதை அறிந்தவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள், பெயர் சொல்லி அழைக்கப்பட்ட மக்கள் எல்லோரும். இதோ பாருங்கள்? 138யாரோ ஒருவர் எனக்குப் பின்புறமாக உள்ள அறைகளில் ஒன்றில் ஜெபித்துக் கொண்டிருக்கிறார், வாலிபன், இலேசான தலையுடையவன், புற்று நோயால் பாதிக்கப்பட்டு கான்சாசில் உள்ள தன் உறவினனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். முன்னே கதவிற்கு வாருங்கள். தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எல்மர், அது உன்னுடன் தொடர்புடைய ஒன்று. அங்கே உன் தந்தை அமர்திருப்பதை நான் காண்கிறேன். அது சரி. உயர் இரத்தஅழுத்தம், நீங்கள் விசுவாசிப்பிர்களானால் தேவன் உங்களை சுகமாக்குவார். எனக்கு தெரியாது. அது சரி. அப்படித்தானா? உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து மேசியா என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவருடைய சமூகம் இங்கே உள்ளது என்று விசுவாசிக்கிறீர்களா? நினைவில் கொள்ளுங்கள், ஒரு ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தை தொட்டபோது, அவர் பலவீனமடைந்தார்; அவரிடமிருந்து வல்லமை, பெலன் புறப்பட்டுச் சென்றது. நானும் இப்பொழுது சற்று சோர்வாயுள்ளேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் சற்று நேரம் நமது தலைகளை நாம் தாழ்த்துவோம். 139ஓ இயேசுவே, தேவனுடைய மேசியாவே நீர் எப்பொழுதும் அருகாமையிலே இருக்கிறீர். நீர் தேவகுமாரன் என்றும் இப்பொழுது நீர் இங்கே இருக்கிறீர் என்றும் மக்கள் அறிந்துள்ளார்கள். உம்முடைய மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. பிதாவே, இவர்களை ஆசீர்வதியும், இவர்களை ஆசீர்வதியும் என்று நான் ஜெபிக்கிறேன். இங்கே நின்று கொண்டிருக்கின்ற அந்த ஒருவர், மேசியாவாகிய நீர் தாம் என்று சரியாக இப்பொழுதே இவர்கள் எல்லாரும் தங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பார்களாக. யாராலும் அதைச் செய்ய முடியாது; மனிதப் பிரகாரமாக அது கூடாத ஒன்று, கர்த்தாவே. மேசியாவின் வல்லமை இந்த சிறிய தாழ்மையான இடமாகிய இந்த இடத்தில் வருவதைக் காண்பது ஒரு அற்புதம், ஏனெனில் கர்த்தாவே நீர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளீர். உம்முடைய கிருபையானது எங்களை சந்திக்க இங்கே இருக்கிறதென்றால், ஏனென்றால் அவ்விதமாகச் செய்வதாக இருக்கின்ற உம்முடைய வாக்குத்தத்தம், அது- அதை நீர் அதைச் செய்திருக்கின்றீர். உம்முடைய ஜனங்களை நீர் விடுவதில்லை என்று நாங்கள் காண்கிறோம். இப்பொழுது, பிதாவாகிய தேவனே, ஜெப அட்டைகள் உள்ளவர்கள் ஜெப வரிசைக்குள்ளாக வருகின்றனர், அவர்கள் தாமே நம்பத்தக்கதாக விசுவாசத்தை கொண்டிருக்கட்டும். ஓ, சர்வ வல்லமையுள்ள தேவனே, கைகள் தாமே இவர்கள் மீது வைக்கப்படும்போது, இவர்கள் தாமே இங்கிருந்து களிகூர்ந்து, சத்தமிட்டு, தாங்கள் சுகமாக்கப்பட்டதாக தேவனை ஸ்தோத்தரித்துச் செல்லட்டும். கர்த்தாவே, இதை அருளும். இரட்சிக்கப்பட்டுள்ளவர்கள் தாமே தேவனிடம் எந்த ஒரு ரகசியமும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளவார்களாக. தேவன் தாமே இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றார்; நம்முடைய மனதில் உள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் அவர் அறிந்திருக்கிறார். பிதாவே, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 140இப்பொழுது, ஜெப அட்டைகள் வைத்துள்ள நீங்கள், அங்கே ஜனக்கூட்டத்தில் உள்ளவர்கள் கூடாரத்தைச் சுற்றி இருப்பவர்கள், ஜெப அட்டைகளை வைத்துக் கொண்டு இங்கே நிற்கிறவர்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு மானிட பிறவியினால் இதைச் செய்ய முடியாதென்றும், அது தேவனிடத்திலிருந்து தான் அது வரவேண்டியுள்ளது என்றும் எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது தேவனுடைய வாக்குத்தத்தம் என்றும், தாம் அதைச் செய்வார் என்றும் தேவன் கூறியுள்ளார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. அப்படியானால் மனிதர் தவிர வேறு யாரோ ஒருவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் அறியுங்கள். நான் இந்த வார்த்தையை தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் எடுக்கின்றேன்: பேசப்பட்ட மக்களிடம், அது யாராயிருந்தாலும் சரி, எனக்கு அவர்களை தெரியாது, அவர்களுக்கும் என்னைத் தெரியாது. அவர்கள் எங்கோயிருந்து இந்த கூடாரத்திற்குள் வந்திருக்கும் அந்நியராவர். இங்கே கூடாரத்தில் இருக்கின்ற மக்களைக் குறித்து சில தரிசனங்களை நான் காண்கிறேன், ஆனால் அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள், அப்படியே விட்டுவிடுங்கள். இங்கே பெயர் சொல்லி அழைக்கப்பட்ட மக்கள், நீங்கள் யாராயிருந்தாலும் சரி, நீங்கள் அந்நியர் என்று மற்றவர்கள் காணத்தக்கதாக உங்கள் கரத்தையுயர்த்துங்கள். பாருங்கள்? ஒவ்வொருவரும், எல்லாரும் அந்நியர். 141ஏதோ ஒன்று என்னை அசைத்துக் கொண்டே இருக்கிறது. என் முன்னே ஒரு கறுப்பு நிற பெண் தோன்றிக் கொண்டேயிருக்கிறாள்: மூட்டு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவளாக இருக்கிறாள். ஆம், எங்கள் மத்தியில் நீ ஒரு அந்நிய பெண். நீ மெம்பிசிலிருந்து வந்திருக்கிறாய். திருமதி. சால்ஸ், உங்கள் பெயர் அதுவே. முதல் தடவையாக இங்கு வந்துள்ளர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் வீடு சென்று இரட்சிக்கப்பட்டு சுகமாயிருங்கள். தேவன் எடுத்துப் போடுகிறார்… உங்கள் முழு இருதயத்தோடும் ஒவ்வொருவரும் விசுவாசியுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்; உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். ஒருவர் மீது ஒருவர் உங்கள் கரத்தை வையுங்கள். சகோதரன் நெவில் இங்கே வாருங்கள். ஜெபத்தை ஏறெடுங்கள். நாம் நமது தலைகளைத் தாழ்த்தியிருக்கையில் சகோதரன் நெவில் ஜெபிக்கப் போகின்றார்.